ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை ஒவ்வொருவரும் பிறந்த திதிகளின் பலன்கள் பகுதி 1...
ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை
விளக்கம் ஒவ்வொருவரும் பிறந்த திதிகளின் பொது பலன்கள் பகுதி 1...
ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை விளக்கம்
ஜோதிடத்தின் ஆதார அமைப்புகளில் முக்கியமானது
பஞ்சாங்கம் ஆகும் பஞ்சாங்கம் என்றால் வாரம் - திதி - நட்சத்திரம்
- யோகம் - கரணம் ஆகிய ஐந்தின் அங்கத்தின் சேர்மான வார்த்தை
தான் பஞ்சாங்கம் அதில் திதி என்பது சூரியனுக்கும்
சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும், அதாவது புராணத்தில் பிரம்மாவின் மகனான தக்கனிடம் (தக்ஷன்)
இருந்து உதித்த 27 பெண்களை (நட்சத்திரங்கள்) சந்திரன்
திருமணம் செய்து கொண்டான் ஆனால் அவர்களில் இரண்டு நட்சத்திரத்தை (பெண்களை)
தவிர மற்ற நட்சத்திரத்தை (பெண்களை) சரியாக நடத்தாததால்
அவனின் மாமனார் ஆன தக்கனிடம் சாபம் பெற்றான்,
அதாவது சந்திரனுக்கு பதினாறு கலைகள் (பௌர்ணமி)
உண்டு அவைகள் தேய்ந்து போகும் படியாக தக்கனிடம் சாபம் பெற்றான், அதனால்
பௌர்ணமி என்ற முழு பிரகாச நிலவில் இருந்து தேய்ந்து போனான் இன்னிலையில் சாபம் தீர
பிரம்மனை வேண்டினார் பிரமன் தக்கனது பலத்தை எண்ணித் தன்னால்
முடியாது என்று கூறி "சார்பு
மற்றும் சார்பின்மை அற்ற சிவபெருமானிடம் வேண்ட சொன்னான்",
தீவிர தவத்தின் காரணமாக சிவபெருமான் தக்கனின் சாபம் வீணாகத
படியும் அதே சமயம் சந்திரனின் சாபம் போகும்படியாகவும் சந்திரனுக்கு அந்த பதினாறு கலைகள் ஏறியும்
குறைந்தும் இருக்கும்படியாக சிவபெருமான் செய்து சந்திரனின் தவத்தை போற்று வகையில்
தன் தலையிலும் சூடிக்கொண்டார் இதனால் அவர் சந்திரசேகரன் ஆனார்.
என்னங்க
சந்திரன் வளர்ந்து தேய்வதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் அவர் வளர்ந்து தேயட்டு
அதை தெரிவதால் நாமகென்ன என்று நீங்கள் கேட்கலாம் ஜோதிட மேலோட்டமாக பார்த்தால்
நவகிரகங்கள் மட்டும் தான் தெரியும் சூட்சம விஷயங்கள் புரியாது இதே சித்தர்
திருமூலர் பாடலை பாருங்கள்
எய்தும்
மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ
தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங்
கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே. - திருமந்திரம்
பொழிப்புரை :
சந்திரனிடத்துப் பொருந்தியுள்ள கலைகள் நுண்மை யினின்று வளர்ந்து பருமையாக
நிறைவெய்தும், (பின் பருமை
யினின்றும் தேய்ந்து நுண்மையாக ஒடுங்கும்) வளர்பிறை தேய்பிறை என்னும் இருவகைப் பக்கத்திலும் அவை அவ்வாறாதல் போல உடம்பில் உள்ள சந்திர மண்டலத்தின் ஆற்றல்களும் நுண்மை யினின்றும்
வளர்ந்து பருவுடம்பில் நிறைதலும், பருவுடம்பினின்றும்
தேய்ந்து நுண்ணுடம்பில் ஒடுங்குதலும் உடையவாம்.
இவ்வாறாக சந்திரன் வளர்ந்து தேயும் நிலைக்கு வந்தார், சந்திரன்
ஜோதிடத்தில் மனக்காரகன் அதனால் சந்திரனின் பதினாறு கலைகள் என்பது பதினாறு வகையான
அறிவு பிம்பங்கள், குணங்கள், பண்புகள் காட்டும். இந்த
பதினாறு கலைகளை ஜோதிடத்தில் திதி என்று சொல்லப்படும் அமாவாசை
நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள்
அதற்குப்பின் சந்திரன் ஏறத்தாழ 12° பாகைக்கு
மேல் சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். இது வரை நாம் இதை வளர்பிறை சந்திரன் (சுக்ல பட்சம்) என்கின்றோம்.
எண்
|
திதிகள்
|
1
|
பிரதமை
|
2
|
துவிதியை
|
3
|
திருதியை
|
4
|
சதுர்த்தி
|
5
|
பஞ்சமி
|
6
|
சஷ்டி
|
7
|
சப்தமி
|
8
|
அஷ்டமி
|
9
|
நவமி
|
10
|
தசமி
|
11
|
ஏகாதசி
|
12
|
துவாதசி
|
13
|
திரயோதசி
|
14
|
சதுர்த்தசி
|
15
|
அமாவாசை
|
16
|
பௌர்ணமி
|
அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் சூரியனில் இருந்து தினமும் சிறிது, சிறிதாக விலகி தேய்வது தேய்பிறைத் திதிகள்
அடைவார் எனப்படும் மறுபடியும் முதல் நாள் பிரதமை தொடங்கி துவிதியை என சென்று அமாவாசையில்
முடியும் இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை தேய்பிறை சந்திரன் (கிருஷ்ணபட்சம்) என அழைக்கப்படும்.
அமாவாசை - நிலவின் ஒளி தெரியாத நாள். இன்று நிலவுக்கு ஒரு கலை.
பிரதமை - முதாலம் பிறை. இன்று நிலவுக்கு இரண்டு கலைகள் உள்ளன.
துவிதியை - இரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு மூன்று கலைகள்.
திருதியை - மூன்றாம் பிறை. இன்று நிலவுக்கு நான்கு கலைகள்.
சதுர்த்தி - நாலாம் பிறை. இன்று நிலவுக்கு ஐந்து கலைகள்.
பஞ்சமி -ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள்.
ஷஷ்டி - ஆறாம் பிறை. இன்று நிலவுக்கு ஏழு கலைகள்.
ஸப்தமி - ஏழாம் பிறை. இன்று நிலவுக்கு எட்டு கலைகள்.
அஷ்டமி - எட்டாம் பிறை. இன்று நிலவுக்கு ஒன்பது கலைகள்.
நவமி - ஒன்பாதம் பிறை. நிலவுக்கு பத்து கலைகள்.
தசமி - பத்தாம் பிறை. இன்று நிலவுக்கு பதினொரு கலைகள்.
ஏகாதசி - பதினோராம் பிறை. இன்று
நிலவுக்கு பன்னிரண்டு கலைகள்.
துவாதசி - பன்னிரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு பதின்மூன்று கலைகள்.
திரயோதசி -பதின்மூன்றாம் பிறை. இன்று நிலவுக்குப் பதினான்கு கலைகள்.
சதுர்த்தசி - பதினான்காம் பிறை. இன்று நிலவுக்குப் பதினைந்து கலைகள்.
பௌர்ணமி - முழு நிலவு. இன்று பூரண
நிலவுக்கு பதினாறு கலைகள் உண்டு. அமாவசையில்
இருந்து ஒவொரு கலைகளாக வளர்ந்து இன்று பதினாறு கலைகள் கொண்ட பூரண நிலவாகப்
பரிணமிக்கின்றது.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை ஒவ்வொருவரும் பிறந்த திதிகளின் பலன்கள் பகுதி 1..."
கருத்துரையிடுக