செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும் பகுதி - 2…
செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும்
பகுதி - 2…
போன பகுதியில் செவ்வாய் தோஷம் எவ்வாறு எற்படுகிறது என்பதை தெரிந்து
கொண்டோம் அதாவது ஜென்ம லக்கனித்தில் இருந்து செவ்வாய் இரண்டு நான்கு ஏழு எட்டு
பன்னிரண்டு ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் தோஷம் அடைவார், லக்னத்தில் செவ்வாய் இருந்தால் அங்கு அவர் பகைதன்மையை அடைந்தால் பாதி
தோஷம் உண்டு என்றும் தெரிந்துகொண்டோம். லக்னத்தில் செவ்வாய் இருந்து பகைதன்மையை அடையும் லக்னங்கள் மிதுன லக்னமும், கன்னி லக்னமும் மட்டுமே ஆகும்.
தோஷம் என்றால் தீய தன்மை, பாதகமாக பலன்கள் என்று புரிகிறது அது என்ன தீய பலன்கள்
என்று தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு முன்னால் செவ்வாய் பற்றி அறிய வேண்டும்
அதற்கு இந்த பதிவு Identifying
characteristics of Mars - செவ்வாயின் தன்மைகளை அடையாளம் காணல்… உதவும் அது போக
சிறிய அளவில் மேலும் விளக்க அளிக்க விரும்புகிறேன், அதாவது பாப
கிரகங்களின் வரிசையில் வரக்கூடியவர் செவ்வாய் ஆனால் முழுப்பாபி அல்ல, ஒரு பழம் நூல்
கூறுகிறது வளர்பிறை சந்திரன் (சுக்ல பட்சம்) காலத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் முக்கால் பங்கு
பாபி என்றும் அதே நேரத்தில் தேய்பிறை சந்திரன் (கிருஷ்ணபட்சம்) காலத்தில்
பிறந்தவர்களுக்கு செவ்வாய் முக்கால் பங்கு சுபர் என்றும் கூறுகிறது,
வேத ஜோதிடத்தில் செவ்வாய்க்கு மங்களா என்றும் பெயர் உண்டு மங்களா
என்றால் நல்ல சகுணமான, செழுமை (auspicious, fortune, prosperity) அர்த்தம் அதனால்
தான் மங்கள்வார் (मङ्गलवार maGgalavAra) என்று செவ்வாய்
கிழமை அழைக்கிறார்கள், செவ்வாய் பூமியின் புத்திரன் என்று சிறப்பு பெயர்
பெற்றவர் அதாவது நிலத்தை தமிழர்கள் எப்படி ஐந்து வகையாக பிரித்தார்களோ அதுபோல உதாரணமாக பாலை நிலத்தில் செவ்வாய் அமர்ந்தால்
வறண்ட கொதிக்கும் செவ்வாய் ஆகிவிடுவார், மருதம் நிலத்தில் செவ்வாய் அமர்ந்தால் நன்றாக வயல்
காற்றும் செழுமையுமாக இருப்பார் செவ்வாய், ஆக செவ்வாய் எது செய்தாலும் தனது சுயநலத்தையும் தனது
சுயமரியாதை காப்பாற்றிக் கொள்ளக் கூடியவர் அதற்க்கான வழி தர்மமோ அதர்மமோ அதை பற்றி
முக்கியமல்ல நியாயமான வழியா அல்லது வன்முறையான வழியா அதை பற்றி
முக்கியமல்ல அவர் செவ்வாய் அமர்ந்த சுப அசுப பலத்தை ஒத்துமாறுபடும், ஆக செவ்வாயின்
பாபத்தன்மையை நாம் 65% பாப கிரகம் என்று 35% தான் சுபகிரகம்
என்று பொதுவாக எண்ணிக்கொள்ளலாம்.
சரி செவ்வாய் பற்றி ஒரளவுக்கு புரிந்து கொண்டோம்,
தோஷம் அதாவது செவ்வாய் தோஷம் அது தரும் தீய தன்மைகள் என்ன -
இதில் பொதுவான தோஷத்தை உணர்ந்தோம் இங்கு நானும் முக்கியமாக குறிப்பிட
விரும்புவது செவ்வாய் 2,4,7,8,12 ஆகிய
ஸ்தானங்களில் இருந்தாலே செவ்வாய் தோஷம் என்று அதற்கு மேல் சொல்லப்பட்டுள்ளது போல்
பலனை சொல்லக்கூடாது இறைவினின் படைப்பில் ஒவ்வொரு யோகமானாலும் சரி தோஷமானாலும் சரி
அதற்கு விதிவிலக்குகள் மற்றும் யோகம் தோஷம் அடையும் சதவீதங்கள் உள்ளன் இங்கே தான்
இறைவனின் சூட்சம பலமே உள்ளது, உதாரணமாக
செவ்வாய் தோஷம் 100% உள்ளவர்களுக்கு
சொல்ல வேண்டிய பலனை போய் செவ்வாய் தோஷம் 10 % உள்ளவர்களுக்கு சொல்லிவிடக்கூடாது இதே போல் தான் யோகங்களும் அதை தான்
கோள்முனியாரும் கூறுகிறார், சரி இனி
அந்த இரண்டு நான்கு ஏழு எட்டு பன்னிரண்டு ஆகிய ஸ்தானங்களில் செவ்வாய் இருந்தால்
எவ்வாறு தோஷம் அடைவார் மற்றும் விதிவிலக்குகள் பற்றி அடுத்து அடுத்து பார்ப்போம்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்