ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 31 - சக்ர யோகம்…
ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 31 - சக்ர யோகம்…
ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில
யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த
ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால்
தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம்
இருக்கட்டும். மேலும் சில யோக
அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும்
காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம்
இருக்கட்டும்.
போன பதிவில் -
சக்ர யோகம்
ஜென்ம லக்னத்திற்கு சூரியன் 11 ஆம் ஸ்தானத்தில் இருந்து, சுக்கிரன் 10 ஆம் ஸ்தானத்தில் இருந்து,
குரு 2 ஆம் ஸ்தானத்தில் இருந்தால்
அதில் யாரேனும் இருவர் ஆட்சி, உச்சம், நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் சக்ர யோகம் ஏற்படும்.
இதன் பலன்கள் -
உயர்ந்த ரஜோ குணங்கள் நிறைந்தவராக இருப்பார், அழகான நெற்றி தோற்றம் உள்ளவராக்கும், தான் எடுத்து கொண்ட துறையில் முழுமையான ஆற்றல்
வெளிப்படுத்தக் கூடியவராக இருப்பார், நல்ல செல்வாக்கு, கல்வியறிவு, அரசர்களால் நன்கு படித்தவர்களால்
மதிக்கபடுபவனாக இருப்பான், செல்வம்
நிறைந்திருக்கும் ஆனால் எவ்வளவு செல்வம் பெற்றிருக்கிறாரோ அதற்குதக்க கவலைகள்
சூழ்ந்திருக்கும், பின்னாளில்
ஞானிகள் ஆன்மீக முதிர்ச்சி அடைந்தவர்களின் தொடர்பும் ஏற்படும்.
0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 31 - சக்ர யோகம்…"
கருத்துரையிடுக