ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 29 - சுப்சந்திர யோகம்…

 ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 29 - சுப்சந்திர யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


சுப்சந்திர யோகம்
ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில் சந்திரன் அமைந்து அவருக்கு இருபுறமும் அதாவது பின் முன் இராசி வீடுகளில் சுபக்கிரகங்கள் அமைந்தால் சுப்சந்திர யோகம் இதில் ஒரு பாவக்கிரகம் அதில் நெருங்கி அமைந்தாலும் யோகம் பங்கப்படும்.

இதன் பலன்கள் -
மனவளம் நிறைந்தவராக இருப்பார், வாழ்வதற்கு சுபமான சூழ்நிலை அமையும், எந்த கடினமான சூழ்நிலையில் இருந்தும் மீண்டுவிடுவார், அன்றாட தேவையான உணவு, உடை, உறைவிடம் நிறைவாக அமையும், லக்ன சுபர்களின் வலிமை கிடைத்தால் புகழும் தேஜஸ் போன்றவை கிடைக்கும்.


0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 29 - சுப்சந்திர யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger