மென்பொருள் துறையில் வெற்றி தரும் ஜோதிட விதிகள் - திரு , நா.ரா. நாராயண மூர்த்தி ஜாதகம்
மென்பொருள் துறையில் வெற்றி தரும் ஜோதிட விதிகள் - தெரிந்து கொள்வதற்கு மென்பொருள் துறை சாதனை தொழிலதிபர் திரு , நா.ரா. நாராயண மூர்த்தி ஜாதகம் சில முக்கிய விதிகளை பார்ப்போம்.
திரு , நா.ரா. நாராயண மூர்த்தி ஜாதகம் N. R. Narayana Murthy இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் ( Infosys Technologies Limited)
மென்பொருள் துறையில் வெற்றி அடைந்தவர்களின் ஜாதகங்களில் சந்திரனும், புதனும் முக்கிய பங்கு வகிப்பார் அதுவே ஆடம்பர வசதிபொருளாகவும் இருக்குமானால் சுக்கிரனும் முக்கியம்.
இவரின் ஜாதகத்தில் சந்திரன் ரிஷபத்தில் உச்சம் அதுபோக அவருக்கு இடம் கொடுத்த சாரநாதன் சூரியன் ஆட்சி ராஜகிரகங்களான இவை இரண்டும் ஒன்றுக்கொன்று உயர்ந்த பலத்தை பெற்றதால் சிறந்த நிர்வாகத் திறமை, சிறப்பான திறமையான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் போன்றவை எல்லாம் கிடைத்தது.
ராஜபோக யோகம் - அதாவது ராஜகிரகமான சூரியன் ஆட்சி பெற்று சூரியனுக்கு 10ல் சந்திரன் உச்சம் பெறுவதும், சந்திரன் ஆட்சி பெற்று சந்திரனுக்கு 10ல் சூரியன் உச்சம் பெறுவதும் ராஜபோக யோகம் ஏற்படும் இதன் பலன் அரசன் அல்லது அரசனுக்கு நிகரான செல்வ வளம், செல்வாக்கு வளம், நினைத்தை முடிப்பதற்க்கான ஆட்கள் பலம், வெற்றியை அனைவருடனும் சந்தோஷமாக பகிர்ந்து அனைவராலும் விரும்ப படுபவராகவும் ஆவார் ஆகியவற்றை தரும், இவரின் ஜாதகத்தில் இந்த யோகம் உள்ளது
சூரியன் 11 ஆம் வீட்டில் மகம் 2 பாதம் கேது சாரம் பெற்று ஆட்சி இது கடுமையாக உழைக்கும் திறன் அதற்கு உண்டான தொழில் வெற்றி, லாபம், முன்னேற்றம், சொத்து சேர்தல், தொழிலில் போட்டியிடும் திறன் துணிவு ஆகியவற்றை தரும் சிறப்பான யோகம் ஆகும் மேலும் அது சதுர்பாத துவைதாம்சத்தில் மேஷ லக்னம் பெற்று 5ல் ஆட்சியும் அடைகிறார் இது மிகச்சிறந்த கோடீஸ்வர யோகம் ஆகும். இது போக இவரின் இந்து லக்னம் & மகாலட்சுமி லக்னம் என்று சொல்லப்படும் மேஷ லக்னத்தை அந்த லக்னாதிபதியை செவ்வாயே பார்ப்பது மேலும் சிறப்பு.
சுக்கிரன் நீசம் போல தெரியும் இது வெறும் மேற்பார்வைக்கே சுக்கிரன் உச்சம் பெற்ற சந்திரனின் சாரத்தை பெற்றதால் அந்த சுக்கிரன் இந்த ஜாதகத்தில் நீசபங்க ராஜயோகத்தை சிறப்பாக பெற்றுள்ளார், எனவே லக்னாதிபதியான சுக்கிரனுக்கு இந்த நிலை ஏற்பட்டு 12ல் இருப்பதால் ஆரம்பகாலங்களில் சில வறுமையான சூழல்களும், பின் கல்வி பயில பல சிரமங்களை சந்திக்க நேர்ந்தது பின் அந்த தடைகற்களையெல்லாம் படிகற்களாக்கி வெற்றி பெற்றார்.
35:39:25 இந்த பாகையில் உச்சம் பெற்ற சந்திரன் காலபுருஷ தத்துவத்தின் படி குரு மற்றும் சூரியன் வழியாகவே பலம் பெறுவார் இதனால் இவருக்கு ஆபாரமான கேட்கும் சக்தி, கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் ஏற்படும் இதனால் ஒரே சமயத்தில் நிறைய விஷயங்களை மனதில் பதியவைக்கும் திறமை இயல்பாக பெறுவார்.
துலா லக்ன யோகாதிபதியான சனி 10ல் சுயசாரம் பெற்றுள்ளார் மேலும் அது சதுர்பாத துவைதாம்சத்தில் மேஷ லக்னம் பெற்று 11ல் ஆட்சியும் அடைகிறார் இது நிறுவனத்திற்கு திறமையான வேலையாட்களை அமைத்து தரும் சிறப்பான யோகம் ஆகும், இப்படிபட்ட சனியின் சாரத்தை பெற்று அவருடனே இணைந்தும் உள்ள புதன் மிகச்சிறந்த கணித ஆற்றலையும் தருவார், கணித ஆற்றல் மென்பொருள் துறைக்கு மிகவும் முக்கியமாகும், மேலும் கணித ஆற்றலை வியாபார நிறுவனமாக மாற்றவும் புதனின் பலம் முக்கியம்.
இராகு திசையிலேயே தன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்கினார், பின் அந்த நிறுவனத்தை மிகப்பெரிய லாபம் பெறும் அளவில் மாற்றியது குரு திசையில் உற்றுகவனித்தால் இவர்கள் இருவரும் செவ்வாயின் சாரம் அந்த செவ்வாயோ உச்சம் பெற்ற சந்திரன் சாரம், மேலும் நாராயணமூர்த்தி அவர்களுக்கு தசவர்க்க கட்டங்களில் 6 கட்டங்களில் சந்திரன் உச்சம், ஆட்சி அடைகிறார், இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் மென்பொருள் துறையில் வெற்றி அடைவதற்கு சந்திரனின் பலம் மிக முக்கியமென்று.
மேலும் மனைவியே இவரின் முன்னேற்றத்திற்கு மிக முக்கிய பக்கபலமாக இருந்தார் அதற்கு ஜாதகரை பற்றி காட்டும் துலாம் லக்னாதிபதியான சுக்கிரனும் மனைவி பற்றி காட்டும் களத்திர ஸ்தானதிபதியான செவ்வாயும் இரண்டுபேரும் சேர்ந்து 12ல் அதாவது அயன சயன போக ஸ்தானத்தில் சேர்ந்து அமர்ந்துள்ளது இது இருவருக்குள்ளும் விட்டுக்கொடுக்கும் தன்மையும், இருவருக்குள் யாருக்கேனும் சரிவு வந்தால் மற்றவர் துணையாக நின்று உதவியும் புரிவார்கள், மேலும் பாவக கட்டத்தின் படி சந்திரன் 7ல் உள்ளார் இது வாழ்க்கை துணையால் வரும் தொழில் வசதி, வாழ்க்கை துணையின் தொழில் உதவிகளுக்கு உண்டான யோகங்களை தரும்.
இன்னும் நிறைய எழுதலாம் ஆனால் இதுவே போதும் என்று நிறைவு செய்கிறேன்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்