ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு சொல்லும் உண்மை என்ன?
ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு சொல்லும் உண்மை என்ன?
தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம் என்று பொதுவாக கூறப்படும், ஐந்தாம் ஸ்தானம் ஒருவர் முந்திய பிறவிகளில் செய்த புண்ணியங்களின் தொகுப்பு ஸ்தானம் என்று முன்பே பார்த்தோம் மற்றொரு திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் ஸ்தானம் உங்களின் முன்னோர்கள் (தந்தை, தந்தை வழி பாட்டன் பாட்டி, முப்பாட்டன் - தாய், தாய் வழி பாட்டன் பாட்டி, முப்பாட்டன்) செய்த புண்ணியங்களை காட்டும் தொகுப்பு ஸ்தானம் ஆகும். இந்த ஸ்தானம் நன்றாக இருந்தால் தான் இந்த பிறவியில் நல்ல தந்தை, முன்னோர்களுக்கு இருந்த சிறப்பம்சங்கள் சில பல நிங்களும் பெற்றிருப்பீர்கள், உதாரணமாக உங்களின் முன்னோர்கள் கணிதத்தில் சிறந்து விளங்கினார்கள் எனில் இந்த ஸ்தானம் நன்றாக இருந்தால் உங்களுக்கும் கணிதம் சிறப்பாக வரும் அப்படிபட்ட சிறப்புக்களை ஜாதகருக்கு இயல்பாக தரும் முக்கிய ஸ்தானமாகும் இந்த ஒன்பதாம் ஸ்தானம்.
ஒன்பதாம் வீட்டின் காரகத்துவங்கள்: -
பாக்ய ஸ்தானம்
தர்ம ஸ்தானம்
தந்தை
தந்தை வழி உறவுகள்
பூர்வீகச்சொத்துக்கள்
தான, தர்ம குணங்கள்
வெளி நாட்டுப் பயணங்கள்
முயற்சி இன்றிக் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள்
மத மற்றும் தத்துவ நம்பிக்கைகள்
தியானம்
உள்ளுணர்வு
ஆசான் (குரு)
கற்பித்தல்
புகழ்
கனவுகள் தரிசனங்கள்
முன்னறிவு, முன்யோசனை
ஆன்மீக & சமூக பணி
தெய்வீக காரியங்களில் ஈடுபாடு
ஆன்மீக பயிற்சி
மத ஆச்சாரம்
மதப்பற்று.
தர்ம குணங்கள்
குரு உபதேசம்
உடனே பலம் தரும் தெய்வம் பற்று
மறுஉலக தொடர்பு
தூரத்து செய்திகள்
திருமண மண்டபம்
கலாச்சார விருப்பம்
நீண்ட தூரப் பயணம்
தம்பியின் மனைவி
கணவன் / மனைவி உடன்பிறப்புகள்
தியாகம் செய்தல்
பணம் புரட்டுதல்
உயர் கல்வி
பேரக்குழந்தைகள்
பிரயாணம்
விமான பயணம்
வெளிநாட்டு தொடர்பு
விளம்பரங்கள்
ஏற்றுமதி, இறக்குமதி
சமரசப் பேச்சுக்கள்
தூது
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு சொல்லும் உண்மை என்ன?"
கருத்துரையிடுக