கொரோனா வைரஸ் வீரியம் தொடங்கிய காலமும் வீரியம் முடியும் காலமும், எப்போது கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் குறையும்…


கொரோனா வைரஸ் வீரியம் தொடங்கிய காலமும் வீரியம் முடியும் காலமும், எப்போது கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் குறையும்…
Image result for coronavirus

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.  - திருவள்ளுவர்

குறளின் பொருள் - உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊனுண்ணாத இயல்பில் தான் உள்ளது; ஊன் உண்டால், நரகம் அவனை வெளியே விட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது.

மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் : ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத். 

Image result for Mrityunjaya

பொருள்: நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்ப வரும், முக்கண்ணனு மாகிய சிவபெருமானே, பழுத்த வெள்ளரி பழம், அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி விடுபடுவதுபோல் மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக.

கொரோனா வைரஸ் 1960களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள் அதற்கு முன்பே இந்த வைரஸ் இனம் இருந்திருக்கலாம் அல்லது இந்த வைரஸின் பரிமாணம் அடையாத மூதாதைய  தலைமுறைகள் இருந்திருக்கும். இப்போது உலக மானிட இனத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த வைரஸ் இப்போது  வீரியமாக பரவ தொடங்கிய காலம் உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டதாக அறிவிக்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2019 ஆகும், பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கும் நீர் சுவாச தொற்று நோயாக இருந்த இந்த வைரஸ் பாலூட்டிகளை பறவைகளை முறையற்ற முறையில் இறைச்சி படுத்தியோ அல்லது நோயுற்ற இத்தகை உயிரினங்களின் இறைச்சியை மனிதர் கையாண்ட தவறான முறைகளால் மனிதர்களுக்கு பரவ தொடங்கி மனித உடல்களில் வீரியத்தோடு பரவ தொடங்கியிருக்கிறது, நான் முன்னே சொன்னது போல் உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டதாக அறிவிக்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2019 ஆகும் அந்த நாளின் ராசி சக்கரம் திரையில் உள்ளது


காற்றால் பரவும் நோய்களுக்கு சனி பகவான் காரக கிரகம், நீரால் பரவும் நோய்களுக்கு சந்திரன், ராகு பகவான் காரக கிரகம், வீரியம் குறைவான காய்ச்சல்களுக்கு சந்திரனும் மற்றும் வீரியம் அதிகமான காய்ச்சல்களுக்கு ராகுவும் காரக கிரகம் ஆகும். இந்து சமயத்தில் அழித்தல் சக்திக்கு அந்த பணிக்கும் அதிகாரிகளில் முதலானவர் ருத்ரன் இரண்டாவதானவர் எமதர்மன் இவர்களின் அதிகாரத் தன்மை அதிகமுள்ள ராசி தனுசு ராசி அதை திரையில் கிழே பார்க்கலாம் இப்படிபட்ட தனுசு ராசியில் ஆத்மகாரகனாகவும் ஜீவ ஒளிக்கு காரகனாகவும் உள்ள சூரியனை மறைத்து புதனும், பூமியும், சந்திரனின் சார்பில் கேதுவும், சனியும், குருவும் என உள்ள கிரகங்கள் நேர்கோட்டில் ஆத்மகாரகனாகவும் ஜீவ ஒளிக்கு காரகனாகவும் உள்ள சூரியனின் சக்தியை மங்க செய்துள்ளன, சாஸ்திரங்களில் ஆரோக்கியத்தை அருளுபவன் என்று சொல்லபட்டுள்ள சூரிய பகவானின் ஒளி சக்தி சிதறடிக்க பட்டதால் சனியின் ஆதிக்கம் வலுத்துள்ளது.


காலசர்ப்பத்தால் பீடிக்க பட்ட கிரக நிலைகளுக்குள் அக்னியின் அம்சமான கேதுவும் சூரியனும் மறைய, விஞ்ஞான அறிவு பலம் தரும் புதன் கிரகம் வக்ரம் உடன் அஸ்தங்கமாகி குழப்ப பலத்தை அடைய இதனால் நீரால் பரவும் நோய்களுக்கு அதிகாரியான ராகு பகவான் தனது நட்சத்திரமான ருத்ரனின் நட்சத்திரமான திருவாதிரையில் இருக்கும் போது, காற்றால் பரவும் நோய்களுக்கு அதிகாரியான சனி பகவான் விஸ்வதேவனின் நட்சத்திரமான உத்திராடத்தில் வலு கொண்டு எதிர் எதிரில் தாக்கும் படியான கிரக நிலைகள் இருந்த போது இத்தகைய நோய் பலப்பட்டுள்ளன. ஏன் சீனா? நோய் பரவலை காரணம் காட்டி சீனா கொத்து கொத்தாக பறவைகளை, பல பாலூட்டிகளை இனங்ளை போன வருடங்களில் கொன்றது அதன் எதிர் விளைவுவாக இந்த முறை சனி பகவான் தண்டனை கண்கள் சீனாவில் இருந்து தொடங்கி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கிழே கொடுத்திருக்கிற படம் சீனாவின் வுஹான் மகாணத்தில் இருந்து trigger என்று சொல்லுவார் அதாவது சீனாவின் வுஹான் மகாணத்தில் தூண்டுதல் அலை தொடங்கபட்ட சமயத்தை லக்னமாக வைத்து கிரகநிலைகளை பொருத்த உலக வரைபட நாடுகளுக்கு வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை சிறப்பு பதிவாக தந்துள்ளேன்.


இந்தியாவை பொருத்தளவில் எப்போதும் போல ஹிந்துகுஷ் மலைத் தொடர்களும் மற்றும் இமயமலைத் தொடர்களும் இந்தியாவிற்கு இந்த வைரஸின் தாக்கம் வரமால் காக்கும் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சரியாக கண்காணிக்க படாமல் இருந்தல் மேலும் சுகாதாரம் அற்ற முறையில் பயன்படுத்தபடும் இறைச்சி அல்லது நோயுற்ற உயிரினங்களின் இறைச்சி தவறாக பயன்படுத்தபடுதல் அதிகமானால் இந்தியாவிலும் சற்று தாக்கம் ஏற்படுத்தலாம். அசைவ வகை உணவுகளை பிரதானமாக சாப்பிடும் மக்கள் தொகை குறைந்த அளவே இந்தியாவில் இருப்பதால் இந்தியாவில் இந்த தாக்கம் குறைவாக இருக்கலாம்.

சரி மேல சொன்னது போக முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் எப்போது தான் தணியும் என்ற கேள்விதான் அனைவரையும் கேட்க சொல்லும் கேள்வி எமது ஜோதிட ஆய்வில் இந்த கொரோனா வைரஸின் தாக்க வீரியம் முடியும் காலம் 07-07-2020 அன்று தமிழ் தேதி ஆனி 23 க்கு பிறகு தான் கொரோனா வைரஸின் தாக்கம் கணிசமான அளவில் குறைய தொடங்கும் அதற்குள் மரண எண்ணிக்கை ஐந்து இலக்க எண்ணை தொடலாம் அதாவது அதிக பட்சம் 99,999 வரை போகலாம். நாடுகள் எடுக்கும் முன்னெச்சரிகையை பொருத்து பலி எண்ணிக்கை குறையலாம்.

நாடுகள்
மொத்தம் பதிவுகள்
புதிய பதிவுகள்
இறப்பு மொத்தம்
புதிய இறப்பு
மீட்டெடுக்கப் பட்டவர்கள் மொத்தம்
தற்போதய தாக்க நிலவரம்
சீனா
80,824
11
3,189
13
65,569
12,066
இத்தாலி
17,660

1,266

1,439
14,955
ஈரான்
12,729
1,365
611
97
3,529
8,589
ஸ்பெயின்
5,232

133

193
4,906
பிரான்ஸ்
3,661

79

12
3,570
எஸ். கொரியா
8,086
107
72
5
714
7,300
அமெரிக்கா
2,329
82
50
1
41
2,238
ஜப்பான்
738
4
21

118
599
சுவிட்சர்லாந்து
1,375
236
13
2
4
1,358
யுனைடட் கிங்டம்
798

11

18
769
நெதர்லாந்து
804

10

2
792
ஈராக்
101

9

24
68
ஜெர்மனி
3,758
83
8

46
3,704
பிலிப்பைன்ஸ்
98
34
8
3
2
88

Last updated: March 14, 2020 - From <https://www.worldometers.info/coronavirus/>

இதை எண்கணிதத்தின் படி பார்த்தால் இப்போது ஏற்பட்டுள்ள இந்த வைரஸிற்கு WHO வைத்த பெயர் COVID-19
COVID-19 = 37614-19 = 31 = 3+1 = 4 (ராகுவின் எண்) இதிலும் கூட ராகு வந்து விட்டார் பாருங்கள்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் குரு சனி சேர்ந்தால் வரும் பொதுபலன்கள், குரு சனி இணைய, Jupiter Saturn Conjunction in Tamil

ஜாதகத்தில் குரு சனி சேர்ந்தால் வரும் பொதுபலன்கள், குரு சனி இணைய, Jupiter Saturn Conjunction in Tamil



ஜாதகத்தில் குரு சனி சேர்ந்தால் வரும் பொதுபலன்கள், குரு சனி இணைய Jupiter Saturn Conjunction in Tamil. Guru Sani joining in Tamil, குரு சனி சேர்க்கை பலன்கள், வியாழன் சனி இணைந்தால் வரும் அடிப்படை பலன்கள், குரு சனி ஒரே வீட்டில் இருந்தால் தரும் பலன்கள் ராசி மண்டல சக்கரத்தில் கடைசி தர்ம, அர்த்த, காம, மோட்ச நான்கு ராசிகளாக இருக்கும் தனுசு, மகர, கும்ப, மீனம் ஆகிய ராசிகளை ஆளக்கூடிய கிரகமாக இருக்கக்கூடிய குரு மற்றும் சனி கிரகங்கள் ஒரு ஜாதகத்தில் சேரும் போது அது....

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கவுரை - பாகம் 3

ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கவுரை - பாகம் 3. Ramana Maharshi’s Arunachala Aksharamanamalai Tamil Commentary Part 3


12 – ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார் உன் சூதேயிது அருணசலா ! (அ) 13 – ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய் உனை யார் அறிவார் அருணாசலா (அ) 14 – ஔவை போல் எனக்குன் அருளைத் தஎது எனை ஆளுவது உன் கடன் அருணாசலா (அ) 15 – கன்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக் காணுவது எவர் பார் அருணாசலா (அ) 16 – காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல் கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா (அ) 17 – கிரி உரு ஆகிய கிருபைக் கடலே கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா (அ)

12 ஸ்தானங்களின் காரக பெயர்கள் அந்த ஸ்தானத்தில் ஆட்சி பெறும் கிரகங்களுக்கு வழங்கும் பெயர்கள் பகுதி 2

12 ஸ்தானங்களின் காரக பெயர்கள் அந்த ஸ்தானத்தில் ஆட்சி பெறும் கிரகங்களுக்கு வழங்கும் பெயர்கள் பகுதி 2



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

புருஷார்த்த தத்துவத்தின் அடிப்படையில் 12 ஸ்தானங்கள் எவ்வாறு பிரிக்கபட்டுள்ளன…

புருஷார்த்த தத்துவத்தின் அடிப்படையில் 12 ஸ்தானங்கள் எவ்வாறு பிரிக்கபட்டுள்ளன…



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கவுரை - பாகம் 2

ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கவுரை - பாகம் 2 - Ramana Maharshi’s Arunachala Aksharamanamalai Tamil Commentary Part 2




9) எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில் இதுவோ ஆண்மை அருணாசலா ! 10) ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா ! 11) ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இலையோ அருணாசலா !

குருவுக்கும் புதனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்…


குருவுக்கும் புதனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்…

ஒற்றுமைகள் -

குரு பகவான்
 புதன் பகவான்
கற்றல் திறன் கொண்டவர்  (Having learning ability)
கற்றல் திறன் கொண்டவர்  (Having learning ability)
(எழுத்தறிவு திறனை கொடுக்க வல்லவர்) Able to give writing skills
(எழுத்தறிவு திறனை கொடுக்க வல்லவர்) Able to give writing skills
குரு பகவான் ஒரு சௌமிய கிரகம்
புதன் பகவானும் ஒரு சௌமிய கிரகம்
புத்திசாலிதனத்தை வெளிகாட்டும் கிரகம்
புத்திசாலிதனத்தை வெளிகாட்டும் கிரகம்
பேச்சுத் திறன் தருவது
பேச்சுத் திறன் தருவது
கலைத்திறமை தருவது (வித்தைக்காரன்)
கலைத்திறமை தருவது (வித்தைக்காரன்)
யோசனை சக்தி
யோசனா சக்தி

வேற்றுமைகள் -

குரு பகவான்
 புதன் பகவான்
சிறந்த ஆசிரியரைக் குறிக்கிற கிரகம்  (planet of an ideal teacher)
சிறந்த மாணவரைக் குறிக்கிற கிரகம்  (planet of an ideal student)
குரு ஒரு சாத்வீக குண கிரகம்
ஆனால் புதனோ ஒரு ரஜோ குண கிரகம்
உயர்ந்த மனம் குறிக்கிற கிரகம் (higher mind)
கற்றல் மனம் குறிக்கிற கிரகம் (learning mind)
பரந்த அறிவு (Vast knowledge)
நுண்ணறிவு (Smart knowledge)
மெய்ஞான அறிவு
விஞ்ஞான அறிவு
பிராமண தன்மை கொண்ட கிரகம்
வைஷ்ய தன்மை கொண்ட கிரகம்
தர்ம சிந்தனை
அர்த்த சிந்தனை (பொருள்சார் சிந்தனை)


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

12 வீடுகளின் காரக பெயர்கள் அந்த வீட்டில் ஆட்சி பெறும் கிரகங்களுக்கு வழங்கும் பெயர்கள் பகுதி - 1

12 வீடுகளின் காரக பெயர்கள் அந்த வீட்டில் ஆட்சி பெறும் கிரகங்களுக்கு வழங்கும் பெயர்கள் பகுதி - 1


விருச்சிம் இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…


விருச்சிம் இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான சுலோக தமிழ் பொருளாக இங்கே தொடர்ந்து பதிவாக தரப்பட்டு வருகிறது அதில் இந்த முறை -

இந்த விருச்சிகம் இராசி பல கால்கள் கொண்ட இராசி
இது துளைகளை கொண்டிருக்கும் இராசி பிராமண தன்மை சார்ந்த ராசி
இது வடக்கு திசையை சார்ந்த இராசி பகல் நேரத்தில் வலுவாகும் இராசி
இது சிவப்பு பழுப்பு கலந்த நிறத்தையும் நீரை தாங்கிய நிலத்தையும் குறிக்கும் இராசி
இது மிகவும் உணர்ச்சி கூர்மையான (கூரிய புலனாற்றல், உணர்ச்சிகரமான, very sharp) இராசி
இது ஒடுங்கிய தேக அமைப்பு மற்றும் வளமான மயிரிழைகள் பிரதிபலிக்கும் இராசி
இது செவ்வாயை ஆட்சியாளராக கொண்ட இராசி



- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி - மந்திரவாக்கு யோகம் விதியும் பலன்களும், ஸ்திர லக்னங்களுக்கு அமைய கூடிய யோகம்..

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 54 - மந்திரவாக்கு யோகம் விதியும் பலன்களும், ஸ்திர லக்னங்களுக்கு அமைய கூடிய யோகம்..

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.



மந்திரவாக்கு யோகம் -
ஒருவருக்கு ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் லக்னங்களை ராசி சக்கரத்தில் உள்ள பிரிவுகளில் ஒன்றான ஸ்திர, சர, உபய ராசிகளை பொருத்து ஸ்திர, சர, உபய லக்னங்களாக பிரித்துள்ளார்கள் ஜோதிட ரிஷி முன்னோர்கள் இதில் சர லக்னங்களுக்கு அதிக ராஜயோகங்கள் இருப்பதாக சொல்வதுண்டு அதே போல ஸ்திர லக்னங்களுக்கு அமைய கூடிய சில சிறப்பு யோகங்களும் உண்டு அதில் இந்த ராஜயோகமும் ஒன்று இந்த ராஜயோகத்தை மந்திரவாக்கு யோகம் என்று அழைப்பார்கள். இந்த மந்திரவாக்கு யோகம் ஸ்திர லக்னங்களான அதாவது ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்தை லக்னமாக கொண்டு பிறந்தவர்கள் ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் 5ஆம் ஸ்தானமாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குரு மற்றும் புதன் ஆட்சி பலத்தை அடைந்தால் இந்த மந்திரவாக்கு யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
சக்தி வாய்ந்த வார்த்தைகள் அல்லது வாசகங்கள் சொல்லக் கூடியவர்கள், திட்டமிடுவது மற்றும் ஆலோசனை வழங்குவதில் வல்லவர்கள், அரச சபைகளில் இடம் பிடிப்பார்கள், அறிவியல் அல்லது ஆன்மீக சாஸ்திரங்களில் நல்ல பயிற்சி, பொதுக் கணக்கீடுகளிலும் வல்லவர்கள், அமைச்சருக்கு உண்டான புத்திபலம் பலமிருக்கும், உபதேசகலைஞர், கலைஞானம் இருக்கலாம், தனது பேச்சினால் நாலு பேருக்கு சகாயம் பண்ணக் முயற்சிக்க கூடியவர்கள், இதில் மிகச் சிலர் வேதம் உபநிடதம் மந்திரோபதேசம் போன்றவற்றில் அனுபவம் பெற்றிருப்பார்கள். ஓர் இடத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கவுரை - பாகம் 1

ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கவுரை - பாகம் 1

Ramana Maharshi’s Arunachala Aksharamanamalai Tamil Commentary 



 1 – அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணசலா ! (அ) 2 – அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று அபின்னமாய் இருப்போம் அருணாசலா ! (அ) 3 – அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய் அமர்வித்து என்கொல் அருணாசலா ! (அ) 4- ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில் அகிலம் பழித்திடும் அருணாசலா ! (அ) 5 – இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய் இனியார் விடுவார் அருணாசலா ! (அ) 6 – ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய் இதுவோ உனது அருள் அருணாசலா ! (அ) 7 – உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா ! (அ) 8 – ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக் காட்டு அருணாசலா ! (அ)


எந்த எந்த ராசிகள் எந்த எந்த வீடாக அமையும் போது வலிமை அடைகின்றன…


எந்த எந்த ராசிகள் எந்த எந்த வீடாக அமையும் போது வலிமை அடைகின்றன…

ஒரா சாஸ்திரத்தில் ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் 1, 4, 7, 10 ஆம் வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய அந்த ஸ்தானங்களில் எந்த எந்த ஸ்தானங்கள் எந்த எந்த ராசிகளாக அமையும் போது அந்த ஸ்தானங்கள் வலுவாகும் என்று ஒரா சாஸ்திரத்தில் கூறப்பட்டதை பார்க்கலாம்.
கேந்திர ஸ்தானங்கள்
ராசி பிரிவுகள்
வலிமையாகும் ராசிகள்
1 ஆம் வீடு - லக்ன கேந்திரம்
நர ராசிகள்
மிதுனம், கன்னி, துலாம், தனுசு முற்பகுதி, கும்பம்
4 ஆம் வீடு - சதுர்த்த கேந்திரம்
நீர் ராசிகள்
கடகம், மீனம், மகரம் பிற்பகுதி
7 ஆம் வீடு - சப்தம கேந்திரம்        
கிட ராசி
விருச்சிகம்
10 ஆம் வீடு - தசம கேந்திரம்
சதுஷ்பாத ராசிகள்
மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு பிற்பகுதி


கேந்திர ஸ்தானங்கள்
ராசி பிரிவுகள்
வலிமை குறையும் ராசிகள்
1 ஆம் வீடு - லக்ன கேந்திரம்
கிட ராசி
விருச்சிகம்
4 ஆம் வீடு - சதுர்த்த கேந்திரம்
சதுஷ்பாத ராசிகள்
மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு பிற்பகுதி
7 ஆம் வீடு - சப்தம கேந்திரம்        
நர ராசிகள்
மிதுனம், கன்னி, துலாம், தனுசு முற்பகுதி, கும்பம்
10 ஆம் வீடு - தசம கேந்திரம்
நீர் ராசிகள்
கடகம், மீனம், மகரம் பிற்பகுதி

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


Powered by Blogger