கொரோனா வைரஸ் வீரியம் தொடங்கிய காலமும் வீரியம் முடியும் காலமும், எப்போது கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் குறையும்…


கொரோனா வைரஸ் வீரியம் தொடங்கிய காலமும் வீரியம் முடியும் காலமும், எப்போது கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் குறையும்…
Image result for coronavirus

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.  - திருவள்ளுவர்

குறளின் பொருள் - உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊனுண்ணாத இயல்பில் தான் உள்ளது; ஊன் உண்டால், நரகம் அவனை வெளியே விட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது.

மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் : ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத். 

Image result for Mrityunjaya

பொருள்: நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்ப வரும், முக்கண்ணனு மாகிய சிவபெருமானே, பழுத்த வெள்ளரி பழம், அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி விடுபடுவதுபோல் மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக.

கொரோனா வைரஸ் 1960களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள் அதற்கு முன்பே இந்த வைரஸ் இனம் இருந்திருக்கலாம் அல்லது இந்த வைரஸின் பரிமாணம் அடையாத மூதாதைய  தலைமுறைகள் இருந்திருக்கும். இப்போது உலக மானிட இனத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த வைரஸ் இப்போது  வீரியமாக பரவ தொடங்கிய காலம் உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டதாக அறிவிக்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2019 ஆகும், பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கும் நீர் சுவாச தொற்று நோயாக இருந்த இந்த வைரஸ் பாலூட்டிகளை பறவைகளை முறையற்ற முறையில் இறைச்சி படுத்தியோ அல்லது நோயுற்ற இத்தகை உயிரினங்களின் இறைச்சியை மனிதர் கையாண்ட தவறான முறைகளால் மனிதர்களுக்கு பரவ தொடங்கி மனித உடல்களில் வீரியத்தோடு பரவ தொடங்கியிருக்கிறது, நான் முன்னே சொன்னது போல் உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டதாக அறிவிக்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2019 ஆகும் அந்த நாளின் ராசி சக்கரம் திரையில் உள்ளது


காற்றால் பரவும் நோய்களுக்கு சனி பகவான் காரக கிரகம், நீரால் பரவும் நோய்களுக்கு சந்திரன், ராகு பகவான் காரக கிரகம், வீரியம் குறைவான காய்ச்சல்களுக்கு சந்திரனும் மற்றும் வீரியம் அதிகமான காய்ச்சல்களுக்கு ராகுவும் காரக கிரகம் ஆகும். இந்து சமயத்தில் அழித்தல் சக்திக்கு அந்த பணிக்கும் அதிகாரிகளில் முதலானவர் ருத்ரன் இரண்டாவதானவர் எமதர்மன் இவர்களின் அதிகாரத் தன்மை அதிகமுள்ள ராசி தனுசு ராசி அதை திரையில் கிழே பார்க்கலாம் இப்படிபட்ட தனுசு ராசியில் ஆத்மகாரகனாகவும் ஜீவ ஒளிக்கு காரகனாகவும் உள்ள சூரியனை மறைத்து புதனும், பூமியும், சந்திரனின் சார்பில் கேதுவும், சனியும், குருவும் என உள்ள கிரகங்கள் நேர்கோட்டில் ஆத்மகாரகனாகவும் ஜீவ ஒளிக்கு காரகனாகவும் உள்ள சூரியனின் சக்தியை மங்க செய்துள்ளன, சாஸ்திரங்களில் ஆரோக்கியத்தை அருளுபவன் என்று சொல்லபட்டுள்ள சூரிய பகவானின் ஒளி சக்தி சிதறடிக்க பட்டதால் சனியின் ஆதிக்கம் வலுத்துள்ளது.


காலசர்ப்பத்தால் பீடிக்க பட்ட கிரக நிலைகளுக்குள் அக்னியின் அம்சமான கேதுவும் சூரியனும் மறைய, விஞ்ஞான அறிவு பலம் தரும் புதன் கிரகம் வக்ரம் உடன் அஸ்தங்கமாகி குழப்ப பலத்தை அடைய இதனால் நீரால் பரவும் நோய்களுக்கு அதிகாரியான ராகு பகவான் தனது நட்சத்திரமான ருத்ரனின் நட்சத்திரமான திருவாதிரையில் இருக்கும் போது, காற்றால் பரவும் நோய்களுக்கு அதிகாரியான சனி பகவான் விஸ்வதேவனின் நட்சத்திரமான உத்திராடத்தில் வலு கொண்டு எதிர் எதிரில் தாக்கும் படியான கிரக நிலைகள் இருந்த போது இத்தகைய நோய் பலப்பட்டுள்ளன. ஏன் சீனா? நோய் பரவலை காரணம் காட்டி சீனா கொத்து கொத்தாக பறவைகளை, பல பாலூட்டிகளை இனங்ளை போன வருடங்களில் கொன்றது அதன் எதிர் விளைவுவாக இந்த முறை சனி பகவான் தண்டனை கண்கள் சீனாவில் இருந்து தொடங்கி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கிழே கொடுத்திருக்கிற படம் சீனாவின் வுஹான் மகாணத்தில் இருந்து trigger என்று சொல்லுவார் அதாவது சீனாவின் வுஹான் மகாணத்தில் தூண்டுதல் அலை தொடங்கபட்ட சமயத்தை லக்னமாக வைத்து கிரகநிலைகளை பொருத்த உலக வரைபட நாடுகளுக்கு வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை சிறப்பு பதிவாக தந்துள்ளேன்.


இந்தியாவை பொருத்தளவில் எப்போதும் போல ஹிந்துகுஷ் மலைத் தொடர்களும் மற்றும் இமயமலைத் தொடர்களும் இந்தியாவிற்கு இந்த வைரஸின் தாக்கம் வரமால் காக்கும் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சரியாக கண்காணிக்க படாமல் இருந்தல் மேலும் சுகாதாரம் அற்ற முறையில் பயன்படுத்தபடும் இறைச்சி அல்லது நோயுற்ற உயிரினங்களின் இறைச்சி தவறாக பயன்படுத்தபடுதல் அதிகமானால் இந்தியாவிலும் சற்று தாக்கம் ஏற்படுத்தலாம். அசைவ வகை உணவுகளை பிரதானமாக சாப்பிடும் மக்கள் தொகை குறைந்த அளவே இந்தியாவில் இருப்பதால் இந்தியாவில் இந்த தாக்கம் குறைவாக இருக்கலாம்.

சரி மேல சொன்னது போக முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் எப்போது தான் தணியும் என்ற கேள்விதான் அனைவரையும் கேட்க சொல்லும் கேள்வி எமது ஜோதிட ஆய்வில் இந்த கொரோனா வைரஸின் தாக்க வீரியம் முடியும் காலம் 07-07-2020 அன்று தமிழ் தேதி ஆனி 23 க்கு பிறகு தான் கொரோனா வைரஸின் தாக்கம் கணிசமான அளவில் குறைய தொடங்கும் அதற்குள் மரண எண்ணிக்கை ஐந்து இலக்க எண்ணை தொடலாம் அதாவது அதிக பட்சம் 99,999 வரை போகலாம். நாடுகள் எடுக்கும் முன்னெச்சரிகையை பொருத்து பலி எண்ணிக்கை குறையலாம்.

நாடுகள்
மொத்தம் பதிவுகள்
புதிய பதிவுகள்
இறப்பு மொத்தம்
புதிய இறப்பு
மீட்டெடுக்கப் பட்டவர்கள் மொத்தம்
தற்போதய தாக்க நிலவரம்
சீனா
80,824
11
3,189
13
65,569
12,066
இத்தாலி
17,660

1,266

1,439
14,955
ஈரான்
12,729
1,365
611
97
3,529
8,589
ஸ்பெயின்
5,232

133

193
4,906
பிரான்ஸ்
3,661

79

12
3,570
எஸ். கொரியா
8,086
107
72
5
714
7,300
அமெரிக்கா
2,329
82
50
1
41
2,238
ஜப்பான்
738
4
21

118
599
சுவிட்சர்லாந்து
1,375
236
13
2
4
1,358
யுனைடட் கிங்டம்
798

11

18
769
நெதர்லாந்து
804

10

2
792
ஈராக்
101

9

24
68
ஜெர்மனி
3,758
83
8

46
3,704
பிலிப்பைன்ஸ்
98
34
8
3
2
88

Last updated: March 14, 2020 - From <https://www.worldometers.info/coronavirus/>

இதை எண்கணிதத்தின் படி பார்த்தால் இப்போது ஏற்பட்டுள்ள இந்த வைரஸிற்கு WHO வைத்த பெயர் COVID-19
COVID-19 = 37614-19 = 31 = 3+1 = 4 (ராகுவின் எண்) இதிலும் கூட ராகு வந்து விட்டார் பாருங்கள்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கொரோனா வைரஸ் வீரியம் தொடங்கிய காலமும் வீரியம் முடியும் காலமும், எப்போது கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் குறையும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger