ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி - மந்திரவாக்கு யோகம் விதியும் பலன்களும், ஸ்திர லக்னங்களுக்கு அமைய கூடிய யோகம்..

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 54 - மந்திரவாக்கு யோகம் விதியும் பலன்களும், ஸ்திர லக்னங்களுக்கு அமைய கூடிய யோகம்..

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.



மந்திரவாக்கு யோகம் -
ஒருவருக்கு ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் லக்னங்களை ராசி சக்கரத்தில் உள்ள பிரிவுகளில் ஒன்றான ஸ்திர, சர, உபய ராசிகளை பொருத்து ஸ்திர, சர, உபய லக்னங்களாக பிரித்துள்ளார்கள் ஜோதிட ரிஷி முன்னோர்கள் இதில் சர லக்னங்களுக்கு அதிக ராஜயோகங்கள் இருப்பதாக சொல்வதுண்டு அதே போல ஸ்திர லக்னங்களுக்கு அமைய கூடிய சில சிறப்பு யோகங்களும் உண்டு அதில் இந்த ராஜயோகமும் ஒன்று இந்த ராஜயோகத்தை மந்திரவாக்கு யோகம் என்று அழைப்பார்கள். இந்த மந்திரவாக்கு யோகம் ஸ்திர லக்னங்களான அதாவது ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்தை லக்னமாக கொண்டு பிறந்தவர்கள் ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் 5ஆம் ஸ்தானமாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குரு மற்றும் புதன் ஆட்சி பலத்தை அடைந்தால் இந்த மந்திரவாக்கு யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
சக்தி வாய்ந்த வார்த்தைகள் அல்லது வாசகங்கள் சொல்லக் கூடியவர்கள், திட்டமிடுவது மற்றும் ஆலோசனை வழங்குவதில் வல்லவர்கள், அரச சபைகளில் இடம் பிடிப்பார்கள், அறிவியல் அல்லது ஆன்மீக சாஸ்திரங்களில் நல்ல பயிற்சி, பொதுக் கணக்கீடுகளிலும் வல்லவர்கள், அமைச்சருக்கு உண்டான புத்திபலம் பலமிருக்கும், உபதேசகலைஞர், கலைஞானம் இருக்கலாம், தனது பேச்சினால் நாலு பேருக்கு சகாயம் பண்ணக் முயற்சிக்க கூடியவர்கள், இதில் மிகச் சிலர் வேதம் உபநிடதம் மந்திரோபதேசம் போன்றவற்றில் அனுபவம் பெற்றிருப்பார்கள். ஓர் இடத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி - மந்திரவாக்கு யோகம் விதியும் பலன்களும், ஸ்திர லக்னங்களுக்கு அமைய கூடிய யோகம்.."

கருத்துரையிடுக

Powered by Blogger