இசைஞானி இளையராஜா ஜாதகம் Ilayaraja Horoscope in Tamil கணிப்பு – இசையில் பெருஞானம் பெற்றவராக, திரையிசை..
இசையில் பெருஞானம் பெற்றவராக வாழ்பவரும், திரையிசையில்
இசைகோர்ப்புக்கான உயரிய வித்தகம் பெற்றவரும் மேலும் ஈடுஇணையில்லாத கலைஞராக
உயர்ந்து இருப்பவரும் ஆன இசைஞானி இளையராஜா ஜாதகம் அதன் சிறப்புகளை தான் பார்க்க
உள்ளோம், இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு தராளமாக
இணையத்தில் கிடைக்கின்றபடியால் அவரின் வாழ்க்கை வரலாறு சம்பவங்களுக்குள் அதிகமாக
போகாமல் அவரின் ஜாதக சிறப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம், இசைஞானி
இளையராஜா அவர்களுக்கும் எனக்கும் ஒரு விடயத்தில் ஒற்றுமை உண்டு அது என்னவென்றால்
எனக்கு குருவாக அமைந்த ரமண மகரிஷியே அவருக்கும் குருவாக அமைந்துள்ளார.
இசைஞானி இளையராஜா அவர்களின் தந்தையே
ஜோதிட கலை அறிந்தவர் தான் இது இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்றில்
இருந்தே தெரிய வருகிறது அதாவது இவரது அப்பா, அம்மாவிடம் இவ்வாறு
கூறியிருக்கிறார் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும்
சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகு தான் நீ போவாய்'' என்று
கூறியிருக்கிறார். அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை
பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று
பதட்டத்துடன் கேட்டிருக்கிறார். பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன்
ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்
விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார அவரது அப்பா அவர்கள்
சொன்னதுபோலவே இளையராஜா அவர்களின் 9-வது வயதில் அவரது அப்பா காலமாகி விட்டார்.
இசைஞானி இளையராஜா அவர்களின் தந்தை சீக்கிரமே
இருப்பதற்கு தந்தை ஸ்தானாதிபதி சனி மற்றும் மாரகாதிபதி சந்திரன் சேர்க்கையும் உடன்
பகை மற்றும் அக்னி சூரியன் சேர்ந்து அமைந்து அஸ்தங்க தோஷம் உண்டாக்கியதன் காரணமாக
தந்தை ஸ்தானாதிபதியும் பாதகாதிபதியும் ஆன சனியின் சாரம் பெற்ற செவ்வாயின் திசையில்
சூரியன் புத்தியில் இளையராஜா அவர்களின் தந்தை காலமானார்.... மீது விடியோவில் பார்க்க
துலாம் லக்னத்தில் தோன்றியவர்களுக்கு குரு, சூரியன் மற்றும் செவ்வாய் ஆகியவை பாப பலனை
தரக்கூடியவர்கள். சுக்கிரன் மற்றும்
சனி சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும், சந்திரனும் புதனும் ராஜயோகத்தை ஏற்படுத்தும் கிரகங்கள். செவ்வாய் கிரகம்
மரணத்திற்குக் காரணமான கிரகம் ஆகும். குரு, சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களும் கூட மாரகத்தை ஏற்படுத்த
வாய்ப்புள்ள கிரகங்கள் தான். இந்த விஷயத்தில் சுக்கிரன் நடுநிலை வகிக்க கூடிய
கிரகம் ஆகும். (தேவைபட்டால்…)
விருச்சிகம் லக்னத்தில் தோன்றியவர்களுக்கு சுக்கிரன், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் பாப பலனை
தரக்கூடியவர்கள் ஆகும். வியாழன்
மற்றும் சந்திரன் சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும், சூரியன், சந்திரன் போன்ற
கிரகங்கள் ராஜயோகத்தை ஏற்படுத்தும் கிரகங்கள். செவ்வாய் நடுநிலை வகிக்க கூடிய
கிரகம் ஆகும். சுக்கிரன் மற்றும் பிற பாப பலனை தரக்கூடிய கிரகங்கள் சம்பந்தபடும்
போது மரணத்திற்குக் காரணமான நிலை ஏற்படுகிறது.
தனுசு லக்னத்தில் தோன்றியவர்களுக்கு சுக்கிரன் மட்டும்
அசுப பலனுக்கு காரணமான கிரகம் ஆகும், செவ்வாய் மற்றும் சூரியன் சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும், சூரியனும் புதனும் ராஜயோகத்தை ஏற்படுத்தும்
கிரகங்கள். சனி மரணத்திற்குக் காரணமான கிரகம், குரு நடுநிலை வகிக்க கூடிய கிரகம் ஆகும். சுக்கிரன் மரணத்திற்குக் காரணமான
கிரக நிலையை அடைய கூடும்
கடக லக்னத்தில் தோன்றியவர்களுக்குசுக்கிரனும் புதனும் பாப பலனை தரக்கூடியவர்கள். செவ்வாய், குரு மற்றும் சந்திரன்சுப யோக பலனை தரக்கூடியவர்கள்ஆகும் இதில் செவ்வாய் கடக லக்னத்தில்
தோன்றியவர்களுக்கு முழுமையான தனி ஆதிக்க சுப யோக கிரகமாக செவ்வாய் விளங்குகிறார். சனியும் சூரியனும்
மரணத்திற்குக் காரணமான கிரகங்கள் ஆகும் இந்த இரு கிரகங்களும் இணைப்பு தொடர்பை
பொருத்துவிளைவுகளைத் தருவார்கள்.
சிம்ம லக்னத்தில் தோன்றியவர்களுக்குபுதன், சுக்கிரன் மற்றும் சனி பாப பலனை
தரக்கூடியவர்கள். செவ்வாய், குரு
மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள்சுப
யோக பலனை தரக்கூடியவர்கள்ஆகும்.குரு
சுக்கிரன் இணைந்திருப்பது சுப விளைவுகளை ஏற்படுத்தாது (இவர்கள் ஒரு கோணத்திற்கும்
மற்றும் ஒரு கேந்திரத்திற்கும் அதிபதியாக இருந்தாலும் கூட). சனியும் சந்திரனும் மரணத்திற்குக் காரணமான கிரகங்கள்
ஆகும் இந்த இரு கிரகங்களும் இணைப்பு தொடர்பை பொருத்துவிளைவுகளைத் தருவார்கள்.
கன்னி லக்னத்தில் தோன்றியவர்களுக்குசெவ்வாய், குரு மற்றும் சந்திரன் பாப பலனை
தரக்கூடியவர்கள். புதன் மற்றும்
சுக்கிரன் ஆகிய கிரகங்கள்சுப யோக
பலனை தரக்கூடியவர்கள்ஆகும் இந்தபுதன்
மற்றும் சுக்கிரன் இணைந்திருப்பது ராஜயோகத்தை ஏற்படுத்தும் இவ்வாறு இருந்தாலும்
சுக்கிரன் மரணத்திற்குக் காரணமான கிரகமும் தான். சூரியனின் சுப அசுப விளைவுகள்
என்பது சூரியன் எந்த கிரகங்களுடன் இணைப்பு தொடர்பை பெற்றுள்ளார் என்பதை பொருத்துவிளைவுகளைத் தரும்.
மேஷ லக்னத்தில் தோன்றியவர்களுக்கு ஒ பக்குவ
புருஷர்களே கேளுங்கள் செவ்வாய் 8 வது வீட்டின்
அதிபதியாக இருந்தாலும் கூட அவர் லக்னாதிபதியா ஆவதால் அவர் சுப கிரகங்களுக்கு
உதவியாக இருப்பார். சனி, புதன் மற்றும் சுக்கிரன் பாப பலனை
தரக்கூடியவர்கள், வியாழன் மற்றும் சூரியன் சாதக யோக பலனை
தரக்கூடியவர்கள், குரு சனி இணைந்திருப்பது சுப விளைவுகளை
ஏற்படுத்தாது (இவர்கள் ஒரு கோணத்திற்கும் மற்றும் ஒரு கேந்திரத்திற்கும் அதிபதியாக
இருந்தாலும் கூட), அதே போல குரு கிரகம் புதன் மற்றும் சுக்கிரன்
உடன் சேர்ந்தால் அசுப விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேஷ லக்னத்தில்
தோன்றியவர்களுக்கு சுக்கிரன் நேரடியாக மரணத்திற்குக் காரணமான கிரகம் ஆகும். பாதக
கிரகமான சனி சுக்கிரனுடன் தொடர்பு கொண்டால் சனியும் மாரகத்தை ஏற்படுத்த
வாய்ப்புள்ளது.
ரிஷப லக்னத்தில் தோன்றியவர்களுக்கு குரு, சுக்கிரன் மற்றும் சந்திரன் பாப பலனை தரக்கூடியவர்கள், சனியும் சூரியனும் சுப யோக பலனை தரக்கூடியவர்கள், சனி ராஜயோகத்தை ஏற்படுத்தும் கிரகம், புதன் ஓரளவு அசுபம்
தரும் கிரகம் ஆகும். குரு, சுக்கிரன் மற்றும் சந்திரன் கிரகங்களுடன்
செவ்வாய் தொடர்பு கொண்டாலும் மாரகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மிதுன லக்னத்தில் தோன்றியவர்களுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சூரியன் பாப பலனை தரக்கூடியவர்கள், அதே நேரத்தில் சுக்கிரன் மட்டுமே சாதகமான கிரகம். இந்த லக்னத்திற்கு குரு
சனி இணைந்திருப்பது சுப விளைவுகளை ஏற்படுத்தாது, சந்திரன்
நேரடியாக மரணத்திற்குக் காரணமான கிரகம் தான் இருந்தாலும் சந்திரன் யாருடன்
தொடர்பில் இருக்கிறார் என்பதை பொறுத்தது
"எமக்குத் தொழில் கவிதை" என்பார் பாரதி, எமக்குத் தொழில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் மர்மமான விதியின் பாதையில் அவர்கள் பயணிக்க ஒரு சிறு விளக்காய் இருப்பது