ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 10 - சுபகுருபங்க தோஷம்…

ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 10 - சுபகுருபங்க தோஷம்

ஜோதிடத்தில் உள்ள அசுப தோஷங்கள் பற்றி சில சில தோஷங்களாக இந்த பகுதிகளில் பார்த்து வருகிறோம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ஒரு தோஷமானாலும் அது அந்த ஜாதகரீதியாக தீவிரமானால் தான் அந்த தோஷங்களால் தீய பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


சுபகுருபங்க தோஷம்
நவகிரங்களில் குரு பகவானை சிறப்பு சுபகிரகமாக சொல்லப்படுகிறது அப்படிபட்ட சுப குரு அந்த ஜாதகப்படியும் சுப கிரகமாக இருந்து அந்த சுப குருவிற்கு இருபுறம் பாபகிரகங்கள் சூழ அமைந்திருந்தால் அதனால் அந்த சுப குருவிற்கு பங்கம் உண்டாவதற்கு வாய்ப்பு உண்டாகிறது அதை சுபகுருபங்க தோஷம் ஆகும். ஜோதிடத்தில் பொதுவாக சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தேய்பிறை சந்திரன் போன்ற கிரகங்களை பாபகிரகங்கள் என்று சொல்வது வழக்கம். பாபகிரகங்களின் சேர்க்கை தோஷத்தின் தீவிரத்தை பொருத்து சுப பங்கமும் அமைந்திருக்கும்.

இதன் பலன்கள் -

சுப குரு பகவானுக்கு இருபுறம் பாபகிரகங்கள் சூழ்ந்திருக்க தனது சுப பலத்தின் காரக பலன்களை தரமுடியாத இக்கட்டான சூழ்நிலை அங்கே உருவாகிறது. அதாவது இதை உதாரணமாக சொல்ல வேண்டுமானால் மஹாபாரதத்தில் நல்லவரும் மஹாபாரதத்தில் தலையாய கதாபாத்திரமாகவும் இருந்த மேலும் மிகவும் பலம் பொருந்தியவரும் மற்றும் வசிஷ்ட முனிவரிடம் வேதம் கற்று விஷ்ணு சஹஸ்ரநாமம் தந்தவரும் ஆக இருந்தவர் பிதாமகர் பீஷ்மர் ஆவார் ஆனால் அப்பேற்பட்டவர் அதர்மிகளான துரியோதனன், துச்சாதனன், சகுனி பக்கம் நிற்க வேண்டிய நிலை வரும் போது அவரால் நன்மையையும் தர்மத்தையும் செய்யமுடியாமல் போனது அது போலத் தான் இருபுறம் பாபகிரகங்கள் சூழபட்ட குரு பகவானின் கதியும்.


கடகம் & மேஷம், கடகம் vs மேஷம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…


கடகம் & மேஷம், கடகம் vs மேஷம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் கடகம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ மேஷம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

கடகம் & மேஷம், கடகம் vs மேஷம் -
இந்த மேஷ கடக ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அந்த கூட்டு சற்று எதிர் தன்மை கொண்ட அமைப்பு, மேஷம் சற்று செருக்கு மற்றும் அவசரத்தன்மை உள்ள ராசி கடகம் பாசத்தன்மையும் மற்றும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் ராசி. மேஷ ராசி துடுக்கானா வேகமான நடத்தை கடக இராசி சிலசமயங்களுக்கு உணர்ச்சி கொந்தளிப்புக்கு விட்டுச்செல்லும். கடக இராசிக்காரர்கள் பொதுவாக வணிக நடவடிக்கைகள் மற்றும் உறவுகளுக்குள்ளான முடிவுகளை கொஞ்சம் அதிக நேரம் எடுத்து தான் முடிவுகளை எடுப்பார்கள் ஆனால் மேஷமோ சீக்கிர ஆலோசனை உடனடி முடிவுகளை எடுப்பார்கள்.

நன்றாக அமைந்தால் மேஷத்தின் வெளிப்படையான உறவுகளின் அணுகுமுறைகள் கடக இராசிக்கு ஒத்துபோக கூடியதாகவும் கடகத்தின் அனைவரையும் அரவணைத்து செல்லும் அணுகுமுறைகள் மேஷ இராசிக்கு பயன் தரக் கூடியதாகவும் அமையும். கடக ராசியிடம் மனநிலை ஊசலாட்டம் அதிகமாக இருக்கும் அந்த சமயம் மேஷத்தின் அதிக ஆக்கிரமிப்பு தன்மையும் வெளிபட்டால் சில சமயங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம் இதனால் இரண்டு ராசிகளும் தங்கள் நண்பர்கள் எண்ணங்களை அதிக நேரம் பொறுமையாக கேட்க வேண்டும் ஒவ்வொருவரின் பார்க்கும் நோக்கங்களையும் கேட்டு பகிரவேண்டும்.

மேஷம் ராசியின் சவால்களை எதிர்கொள்ளும் திறனும் பாதுகாப்பு உணர்வும் கடக ராசியின் அரவணைப்பு உணர்வு மற்றும் வீட்டு அக்கறை இந்த இரண்டும் நல்லவிதமாக சேர ஒருவரை ஒருவர் அவர்களை பாதுகாப்பாகவும் நன்கு கவனித்து கொள்ள உதவும் இதன் மூலமாக சந்தோஷம், விருந்தோம்பும் பண்பு மற்றும் உறவுப் பாதுகாப்பு ஏற்படும். பொதுவாக கடக இராசிக்கு கற்பனைத் திறன்கள் அதிகம் அதனால் மேஷ ராசிக்காரர்கள் அது உபயோகம் மற்றதாக இருந்தாலும் அதை அன்போடு அணுக வேண்டும். மேஷ ராசிக்காரர்கள் கடகத்தை போல் அதிக உணர்ச்சிவசப்படுபவர்கள் இல்லை ஆனால் ஏதேனும் ஒரு உணர்ச்சி ஆழமாக வெளிபடுத்தக்கூடியவர்கள் அதனால் அவர்களிடம் கடக இராசிக்காரர் மென்மையாக பக்குவமான சமயங்களிலில் தான் உணர்வசமான கருத்துகளை பேச வேண்டும்.

கடகம் நண்டு இராசி என்பதால் ஆழமான உள்ளுணர்வு உள்ளவர்கள் அதனால் அவர்களின் ஆலோசனைகள் மேஷத்திற்க்கு திட்டமிடல் பற்றாக்குறையால் வரும் சிறு தவறுகள் தடுத்து மோசமான முடிவுகளை தவிர்க்க உதவும். மேஷத்திற்கு 4 ஆம் கேந்திர ராசியாக கடகமும் கடகத்திற்கு மேஷம் 10 ஆம் கேந்திர ராசியாக இருப்பதால் இரண்டும் நல்லவிதமாக சேர இருவருக்குள்ளும் மதிப்பு மற்றும் மரியாதை தரக்கூடிய பயனுள்ள உறவாக அமையும், இது ஆண் பெண் உறவானால் அது ஒத்த கொடுத்து வாங்கல் உள்ள பாச உணர்வான பிணைப்பாக இருக்கும்.

மேஷம் இராசிநாதன் செவ்வாய் மற்றும் கடகம் சந்திரன் இராசிநாதன் ஆகும் இந்த கிரகங்களில் செவ்வாய் அதீத ஆர்வமுடைய குணம் மற்றும் செயல்திறனையும் சந்திரன் பெண்மை சக்தி மற்றும் தேடும் திறன் குறிக்கின்றன, செவ்வாயும் சந்திரனும் நட்பு கிரகங்கள் இதனால் இருவருக்கும் கற்றுக்கொள்ளும் ஆர்வம், உணர்ச்சிப் பசப்பான பழக்கம், வலுவான முயற்சிகளை செய்யும் நம்பிக்கை ஆகியவையின் கலவையாக இருக்கும், பாதிக்க பட்டால் பாராட்டுகிற தன்மை போய் உணர்ச்சிப் போராட்டம் அதிகம் இருக்கும்.

மேஷம் ஒரு நெருப்பு இராசியாகும் மற்றும் கடகம் ஒரு நீர்த் தன்மை கொண்ட இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது இது ஒரு வித்தியாசமான சிறந்த குணக் கலப்பாகும் அதாவது கடகம் மேஷத்திற்கு மெதுவாக மற்றும் மென்மையான இருக்க கற்றுக்கொடுக்கும் மாறாக மேஷம் கடகத்திற்கு வாழ்க்கையை பயனுள்ள வகையில் அணுக கற்றுக்கொடுக்கும், அதே நேரத்தில்  மிகவும் அதிகமாக பழகும் போது நெருப்பும் நீரும் அதிமாக சேர கொதிப்பு ஏற்படுவதை போல ஒரு கொந்தளிப்பான உறவு அணுகமுறைகளை ஏற்படுத்தும் அதனால் இருவருக்கும் சமமான பழக்கமே உதவும்.

கடகம் மேஷம் இரண்டும் சர இராசியாகும் அதனால் நண்பர்களும் அல்லது காதலர்களும் அடிக்கடி பயணகங்கள், சந்திப்புகள் செய்யக்கூடியவர்கள், தளர்ந்து விடாமல் பொறுப்பாக சவாலை சந்திப்பார்.  பாதிக்க பட்டால் ஆதிக்க மனபான்மைகள், பொறுப்புக்களை மறைக்கும் தன்மை, உணர்ச்சிவயப்பட்ட நிலைகள் காரணமாக உறவுகள் பிரிவில் முடிய வாய்ப்பாகும்.


கந்தர் அனுபூதி பகுதி 7 - கந்தரனுபூதி பாடல் 12 ன் விளக்கம்...

கந்தரநுபூதி பாடல் 12 ன்  விளக்கம்... 
கந்தர் அனுபூதியின் பாடல் 12. செம்மான் மகளை பாடலின் விளக்கம் கொடுக்கபட்டுள்ளது. கந்தரனுபூதி செய்யுள் 12 ன் பொருள் விளக்கம்.

பாடல் 12

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் பூசம் - திருமண நட்சத்திர பொருத்தம்…


பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் பூசம் - திருமண நட்சத்திர பொருத்தம்

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் பூசம் நட்சச்திரம் வரை எண்ண 4 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம்  உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் பூசம் நட்சத்திரம் தேவ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் பூசம் நட்சச்திரம் எண்ண 4 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் உண்டு.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் பூசம் நட்சச்திரம் எண்ண 4 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இல்லை.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் பூசம் நட்சச்திரம் மிருகப் பிரிவு ஆடு ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆகி ஆண் கடக இராசி ஆகும் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆண் கடக இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் புதனுக்கு சந்திரன் பகை உறவுமுறை சந்திரனுக்கு புதன் நட்பு உறவுமுறை வருவதால் இராசி அதிபதி முழுமையான பொருத்தம் இல்லை.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

மிதுன இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கன்னி.
இதில் பெண் மிதுன இராசி ஆண் கடக இராசி ஆகும் இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின் பூசம் நட்சச்திரம் தொடை ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் பூசம் நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் பூசம் நட்சத்திரம் பித்த நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறாக நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் இல்லை.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் பூசம் நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் பூசம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில் 6 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் சம அளவில் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் மத்திமம் (சமமான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger