ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 10 - சுபகுருபங்க தோஷம்…

ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 10 - சுபகுருபங்க தோஷம்

ஜோதிடத்தில் உள்ள அசுப தோஷங்கள் பற்றி சில சில தோஷங்களாக இந்த பகுதிகளில் பார்த்து வருகிறோம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ஒரு தோஷமானாலும் அது அந்த ஜாதகரீதியாக தீவிரமானால் தான் அந்த தோஷங்களால் தீய பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


சுபகுருபங்க தோஷம்
நவகிரங்களில் குரு பகவானை சிறப்பு சுபகிரகமாக சொல்லப்படுகிறது அப்படிபட்ட சுப குரு அந்த ஜாதகப்படியும் சுப கிரகமாக இருந்து அந்த சுப குருவிற்கு இருபுறம் பாபகிரகங்கள் சூழ அமைந்திருந்தால் அதனால் அந்த சுப குருவிற்கு பங்கம் உண்டாவதற்கு வாய்ப்பு உண்டாகிறது அதை சுபகுருபங்க தோஷம் ஆகும். ஜோதிடத்தில் பொதுவாக சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தேய்பிறை சந்திரன் போன்ற கிரகங்களை பாபகிரகங்கள் என்று சொல்வது வழக்கம். பாபகிரகங்களின் சேர்க்கை தோஷத்தின் தீவிரத்தை பொருத்து சுப பங்கமும் அமைந்திருக்கும்.

இதன் பலன்கள் -

சுப குரு பகவானுக்கு இருபுறம் பாபகிரகங்கள் சூழ்ந்திருக்க தனது சுப பலத்தின் காரக பலன்களை தரமுடியாத இக்கட்டான சூழ்நிலை அங்கே உருவாகிறது. அதாவது இதை உதாரணமாக சொல்ல வேண்டுமானால் மஹாபாரதத்தில் நல்லவரும் மஹாபாரதத்தில் தலையாய கதாபாத்திரமாகவும் இருந்த மேலும் மிகவும் பலம் பொருந்தியவரும் மற்றும் வசிஷ்ட முனிவரிடம் வேதம் கற்று விஷ்ணு சஹஸ்ரநாமம் தந்தவரும் ஆக இருந்தவர் பிதாமகர் பீஷ்மர் ஆவார் ஆனால் அப்பேற்பட்டவர் அதர்மிகளான துரியோதனன், துச்சாதனன், சகுனி பக்கம் நிற்க வேண்டிய நிலை வரும் போது அவரால் நன்மையையும் தர்மத்தையும் செய்யமுடியாமல் போனது அது போலத் தான் இருபுறம் பாபகிரகங்கள் சூழபட்ட குரு பகவானின் கதியும்.


0 Response to "ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 10 - சுபகுருபங்க தோஷம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger