நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - குரு...
இந்த பெரும் பாரத நாட்டின் பெரும்பாலான மக்கள் கடும் சிரமமான பணபரிவர்த்தனை காலத்தில் இருப்பதால் அவர்களின் சங்கடமான இந்த காலத்தில் எனக்கும் சகமனிதர்களின் இந்த சிரமமான கால நிலை கண்டு இந்த சிரமமான காலத்தில் பெரிதாக எந்த ஜோதிட பதிவையும் இட மனமில்லை இருந்தாலும் தொடர்ச்சி விடக்கூடாது என்பதற்காக சில நாட்களுக்கு ஒரு முறை பதிவுகளை இடு கிறேன்.
நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - குரு...
நவகிரகங்களும்
தங்கள் தங்கள் ஆதிக்கம் அதிகம் காட்டும் இடங்களாக பிரித்து சொல்லும் ஒரு சமஸ்கிருத
நூலின் மொழி பெயர்ப்பாக வந்த ஒரு பழம் தமிழ் நூலின் சில குறிப்பிட்ட இந்த பகுதி
மட்டும் கிடைத்தது அதை தங்களின் முன் இந்த வலைபதிவின் மூலம் பதிவிக்கிறேன்.
கருவூலம்
மக்கள் கருவூலம் கோயில் மடங்கள் அரசமரம்
குருபீடம்
துறவிகள் வாழிடம் யோகபீடம் தியான மண்டபம்
பிரும்ம போதனை கூடம் சட்டமியற்றல் சபை நீதிமன்றங்கள்
குருமார்களின்
சமாதி கோயில் தேவகுரு காரகதலங்களாம்.
- கிரகபதி சந்தம்
பொருள் - அரசின் கருவூலம் (Treasury), மக்கள் கருவூலம் அதாவது வங்கிகள் என்று
எடுத்து கொள்ளலாம், கோயில்கள், மடங்கள், இதில் வித்தியாசமாக அரசமரத்தை தேவகுருவின் காரகதலமாக கூறியிருப்பது சற்று
ஆச்சரியம் தான் இருந்தாலும் புத்தர் போன்ற ஞானிகள் அரசமரத்தின் அடியில் அமர்ந்து
தியானம் பூர்த்தியாகி ஞானம் பெற்றதாக வரலாறு சொல்லுகிறது மேலும் கண்ண பிரான், ‘’மரங்களில் நான் அரச மரம்” என்று கீதையில் கூறியிருக்கிறார். குருமார்களின் பீடம்,
துறவிகள் வாழும் இடம், யோகா ஆசன மையங்கள், சட்ட நீதி இயற்றும் மற்றும் நீதி வழங்கும் மன்றங்கள் (நீதிமன்றங்கள்), இறைவனின் உண்மை மற்றும் பெருமைகளை உரைக்கும்
கூடங்கள், தியான மண்டபம், ஞானகுருவாக
உயர்ந்த மகான்கள் இறுதியாக சமாதி புரிந்துள்ள கோயில்கள் தேவகுரு (வியாழனின்) ஆதிக்கம் அதிகம் காட்டும் பூமியின் தலங்கள்
ஆகும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - குரு..."
கருத்துரையிடுக