பௌர்ணமியும் (பூரணை, முழுமதி) ஜோதிடமும் ஆன்மீகமும் பகுதி 2...
இந்துக்களின் ஆன்மீக சாஸ்திரத்தில் இருந்து பிறந்த குழந்தை தான் ஜோதிடம் எனவே
ஜோதிடமும் ஆன்மீகம் பின்னி பிணைந்த ஒன்று என்றே சொல்லாம் அதில் பௌர்ணமி விழாக்கள் என்பது ஒவ்வொரு மாதத்திற்கு ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்ததாக
திகழ்கிறது, இறைவனை கொண்டாடுவதற்கும் அவரின் சந்நிதியில்
ஆன்மீக முன்னேற்றம் காணவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது அப்படி உள்ள
இந்த பௌர்ணமியின் ஜோதிட அமைப்புகளை சிறிது சொல்லவே இந்த
பதிவு ஆகும். ஒவ்வொரு மாதத்திற்கு வருகிற பௌர்ணமியில் சூரியசந்திரனின் நிலைகள் அதன் சிறப்புகளை காண்போம்.
எண்
|
தமிழ் மாதப்பெயர்
|
சூரியன் நிற்கும்
இராசி
|
சந்திரன் நிற்கும்
இராசி
|
சிறப்பு
|
7
|
ஐப்பசி பௌர்ணமி
|
துலாம்
|
மேஷம்
|
சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம், இறைவன் பெயரில் அன்னதானம் செய்ய உகந்தது
அடுத்த அடுத்த பிறவிகளில் உணவு பஞ்சம் வராது, குகை
தியானம், ஆத்ம தியானம், யோகம் போன்றவற்றிற்கு சிறந்தது. லட்சுமி விரதம்.
|
8
|
கார்த்திகை
பௌர்ணமி
|
விருச்சிகம்
|
ரிஷபம்
|
திரிபுர தகனம் நடந்த நாள் கார்த்திகை பௌர்ணமி, கார்த்திகை தீபத் திருவிழா, சொக்கப்பானை
விழா, வீடுகளில் வரிசை வரிசையாக தீபம் ஏற்றுவார்கள், கிரிவலம், பிரகார வலம். ஜோதி வடிவமாக
சிவபெருமானை முருகனை வழிபடுவது.
|
9
|
மார்கழி பௌர்ணமி
|
தனுசு
|
மிதுனம்
|
சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள், நடராஜ
பெருமானுக்கு அபிஷேக ஆராதனை. வைகறை அதிகாலை
வழிபாடு, நதியில் நீராட சிறந்தது, திருவாதிரை விரதம். ஆண்டாள் அருளிய திருப்பாவையில் ‘மார்கழித் திங்கள்
மதிநிறைந்த நன்னாளால்’ என்று சொல்லி உள்ளார் மனதை பலப்படுத்தவும்
தூய்மை செய்யவும் நாள்.
|
10
|
தை பௌர்ணமி
|
மகரம்
|
கடகம்
|
தைமாதம் பௌர்ணமி அன்று தைப்பூச விழா, திருவிளக்கு பூஜை. வேளாண்மை
செழிக்க வழிபாடு, முருகக் கடவுளுக்கு சிறப்பு சேர்க்கும்
நாள். தேவர்கள் பார்வதி பரமேச்வரர்களை வழிபடும்
நாள்.
|
11
|
மாசி பௌர்ணமி
|
கும்பம்
|
சிம்மம்
|
பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள். மாசி மாதத்தில்
பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி வர மகாமகம் கும்பத்திருவிழா. மன்மதனை சிவன் எரித்த காமன் பண்டிகை. பசு முதலான தானங்கள் செய்வது மிகுந்த புண்ணியமாகக்
கருதப்படுகிறது. கோயில் தீர்த்தமாடல் சிறந்தது.
|
12
|
பங்குனி பௌர்ணமி
|
மீனம்
|
கன்னி
|
காமனுக்கு சாப நிவர்த்தி தந்த சிவபெருமான் உமையம்மை திருமணம் செய்த நாள். ஹோளிப் பண்டிகை, பங்குனி உத்திரம் தேர் திருவிழா. இதில் ஈச்வர பூஜை செய்தால் நல்வாழ்வு பிறகு நற்பிறவி நல்கும் என்பது மரபு.
|
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "பௌர்ணமியும் (பூரணை, முழுமதி) ஜோதிடமும் ஆன்மீகமும் பகுதி 2... "
கருத்துரையிடுக