ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 49 - சூல யோகம் அல்லது திரிசூல யோகம்…
ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 49 - சூல யோகம் அல்லது திரிசூல யோகம்…
ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில
யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த
ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால்
தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம்
இருக்கட்டும். மேலும் சில யோக
அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும்
காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம்
இருக்கட்டும்.
சூல யோகம் அல்லது திரிசூல யோகம்
நவகிரகங்களில் ஏழு கிரகங்கள் ஒரு நட்சத்திரத்தின் மூன்று குழுக்களில் அல்லது மூன்று இராசிகளில் ஏழு கிரகங்கள் விதமாக பிரிந்து அமர்ந்திருந்தால் இந்த சூல யோகம் ஏற்படும். அப்படி அமைந்துள்ள கிரகங்கள் சுப வலிமை அதிகம் பெற்றிருந்தால் இந்த யோகம் சுபயோகமாகவும் அதுவே அந்த ஏழு கிரகங்கள் பாப வலிமை அதிகம் பெற்றிருந்தால் இந்த யோகம் பாபயோகமாக கருதப்படும்.
இதன் பலன்கள் -
இந்த யோகமாக அமைதிருந்தால் ஆக்ரோஷமாக துணிந்த
தைரியமாக தாக்ககூடியவர்கள் மற்றும் முடிவு எடுக்க கூடியவர்கள். கடுமையான கொள்கைகளும் உடையவர்கள். பணம் சேர்ப்பதில் வலிமை காட்டுவார்கள், போர் மற்றும் போட்டி என்று வந்தால் விடாமல்
போராடுவார்கள், தீமைகளை மற்றும் குற்றங்களை எதிர்த்து போராடுவார். அவயோகமாக
அமைந்திருந்தால் ஒழுக்க குறைவு, கொடூரமான
குணங்கள், இரக்கமின்மை, அதீத
சுய நலம் அதை நிறைவேற்ற எதையும் செய்யும் நடவடிக்கை ஏற்படும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 49 - சூல யோகம் அல்லது திரிசூல யோகம்…"
கருத்துரையிடுக