கிரகங்களின் ஷட்பலம் - நவகிரகங்களின் நைசார்கிக பலம்…

கிரகங்களின் ஷட்பலம் - நவகிரகங்களின் நைசார்கிக பலம்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஷட்பலம் காணப்பட்டு அது ஒருவரனின் ஜாதக பலனை அறிவதற்கு உபயோகமாக இருக்கும் ஒரு நல்ல முறையாகும்,  அதில் நைசார்கிக பலமும் ஒன்று அதாவது நைசார்கிக என்றால் (नैसर्गिक naisargika) இயல்பாய் அமைந்துள்ள, உள்ளார்ந்த என்று பொருள் அதை நைசார்கிக பலம் என்றால் நவகிரகங்களுக்குள் இயல்பாய் அமைந்துள்ள உள்ளார்ந்த வலிமை என்று பொருள். நவகிரகங்கள் ஒன்றை மற்றொன்றுடன் ஒவ்வொன்றையும் இயல்பாய் அமைந்துள்ள உள்ளார்ந்த வலிமையோடு ஒப்பீட்டு அதை வரிசைப்படியாக அமைத்துள்ளது தான் இந்த நைசார்கிக பலம் அதன் படிநிலை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.


பலவரிசை
கோள்கள்
நைசர்கிக பலம்
1
சூரியன்
7 க்கு 7 பலம்
2
சந்திரன்
7 க்கு 6 பலம்
3
சுக்கிரன்
7 க்கு 5 பலம்
4
குரு
7 க்கு 4 பலம்
5
புதன்
7 க்கு 3 பலம்
6
செவ்வாய்
7 க்கு 2 பலம்
7
சனி
7 க்கு 1 பலம்

இதில் அதிசயமாக இராகு - கேதுவை இணைத்து பார்க்க முதலில் அல்லது ஆரம்ப படி ஜோதிடம் அறிபவர்களுக்கு ஆச்சரியமே பிறக்கும் ஆம் சூரியனை விட இராகு - கேது வலிமையாக காட்டபடும்.

பலவரிசை
கோள்கள்
நைசர்கிக பலம்
1
கேது
9 க்கு 9 பலம்
2
இராகு
9 க்கு 8 பலம்
3
சூரியன்
9 க்கு 7 பலம்
4
சந்திரன்
9 க்கு 6 பலம்
5
சுக்கிரன்
9 க்கு 5 பலம்
6
குரு
9 க்கு 4 பலம்
7
புதன்
9 க்கு 3 பலம்
8
செவ்வாய்
9 க்கு 2 பலம்
9
சனி
9 க்கு 1 பலம்

இதை எளிமையாக சொல்ல
                
இராகு வை காட்டிலும்  கேது  பலவான்
சூரியனை காட்டிலும் இராகு பலவான்
சந்திரனை காட்டிலும் சூரியன் பலவான்
சுக்கிரனை காட்டிலும் சந்திரன் பலவான்
குரு வை காட்டிலும் சுக்கிரன் பலவான்
புதனை காட்டிலும் குரு பலவான்
செவ்வாயை காட்டிலும் புதன் பலவான்

ஜாதகத்தில் சுக்கிரன் (வெள்ளி) ஒன்பதில் (9ல்) இருந்தால்...


ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் உத்திரம் - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் உத்திரம் - திருமண நட்சத்திர பொருத்தம்

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் ஆணின் உத்திரம் நட்சச்திரம் வரை எண்ண 8 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் உத்திரம் நட்சத்திரம் மனுஷ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் உத்திரம் நட்சச்திரம் எண்ண 8 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் உத்திரம் நட்சச்திரம் எண்ண 8 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.  27 நட்சத்திரங்களின் யோனி இன மிருகங்கள்...

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் உத்திரம் நட்சச்திரம் மிருகப் பிரிவு எருது (காளை) ஆகும் எனவே இரண்டும் பகை மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் சிம்ம இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 4 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் கன்னி இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 5 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆண் சிம்ம இராசி ஆகும் போது இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனும் சூரியனும் வருவதால் தங்களுக்குள் சுக்கிரனுக்கு சூரியன் பகை உறவுமுறை கொண்டுள்ளதால் இராசி அதிபதி பொருத்தம் இல்லை.

பெண் ரிஷப இராசி ஆண் கன்னி இராசி ஆகும் போது இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனும் புதனும் வருவதால் தங்களுக்குள் சுக்கிரனுக்கு புதன் நட்பு உறவுமுறை கொண்டுள்ளதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம்.
இதில் பெண் ரிஷப இராசி ஆண் கன்னி இராசி ஆகும் போது இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வருவதால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின் உத்திரம் நட்சச்திரம் வயிறு ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் உத்திரம் நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் உத்திரம் நட்சத்திரம் வாத நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறு நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் உத்திரம் நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இருக்கும் மரம் வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் உத்திரம் 1ஆம் பாத நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  7 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் சம அளவில் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருத்த தரம் மத்திமம் (சமமான பொருத்தம் உள்ளது).

பெண்ணின் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் உத்திரம் 2,3,4 ஆம் பாத நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  8 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்




பஞ்சபூதங்களும் அவை சார்ந்த உடல் உறுப்புகள் அக்குபஞ்சர் + ஜோதிடம்…


பஞ்சபூதங்களும் அவை சார்ந்த உடல் உறுப்புகள் அக்குபஞ்சர் + ஜோதிடம்

எனக்கு அக்குபஞ்சர் மருத்துவ முறை தெரியாது ஆனால் அந்த புத்தகத்தின் ஆரம்ப கட்டத்தில் பஞ்சபூதங்கள் உடலில் உள்ள உறுப்புகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சக்தி அளிப்பதாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது அந்த பஞ்சபூதங்களை நமது உடலில் உள்ள உறுப்புகளோடு தொடர்பு படுத்தி எழுதி உள்ளது, அது நமது ஜோதிட நவகிரகங்களோடு தொடர்பு படுத்தி பார்த்தேன் அதன் பதிவு தான் இது. அக்குபஞ்சர் மருத்துவ முறையில் சீன நாட்டினரின் முறையின் படி பஞ்சபூதங்கள் fire, earth, metal, water, wood. ஜப்பானிய நாட்டினரின் முறையின் Earth, Water, Fire, Wind, and Void இதை நமது முறையில் ஒப்பீட்டால்

சமஸ்கிருதம்
தமிழ்
ஜப்பான்
சீனம்
பூமி\பிருத்வி
நிலம்\மண்
Earth
Earth
அப்பு\ஜல
நீர்\தண்ணீர்
Water
Water
அக்னி\கர்கா
நெருப்பு\தீ
Fire
Fire
வாயு\மாருட்
காற்று\வளி
Wind
Metal
ஆகாயம்\அம்பரா
வெளி\விண்
Void
Wood

இந்த சீனா அக்குபஞ்சர் முறையில் பஞ்சபூதங்களின் சமநிலை மாறி அமைய நோய் என்றும் அந்த நோய்களால் பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்புகளாக அந்த நூல் சுட்டிகாட்டிய சிலவற்றை இங்கே நவகிரகங்களோடு தொடர்பு படுத்தி சுட்டிகாட்டி உள்ளேன் -

ஜப்பான்\சீனம்
தமிழ்
உறுப்புகள்
காரக கோள்கள்
Void\Wood
வெளி\விண்
கல்லீரல், பித்தநீர்ப்பை
குரு, சூரியன்
Wind\Metal
காற்று\வளி
நுரையீரல், பெருங்குடல்
சனி, இராகு
Fire
நெருப்பு\தீ
இருதயம், சிறுகுடல், இருதய உறை,
உதரவிதானம்
சூரியன், செவ்வாய், கேது
Water
நீர்\தண்ணீர்
சிறுநீரகம், சிறுநீர்ப்பை
சந்திரன், சுக்கிரன்
Earth
நிலம்\மண்
இரைப்பை, மண்ணீரல்
புதன், செவ்வாய்

இது நமது பாரம்பரிய சித்தமருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றில் இன்னும் விரிவாகவே கூறிவுள்ளது மற்றொரு பதிவில் அதை இறைவன் சித்தம் புரிந்தால் பார்ப்போம்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger