ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 44 - விஷ்ணு யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 44 - விஷ்ணு யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


விஷ்ணு யோகம்


ஜென்ம லக்னத்திற்கு ஒன்பதாம் ஸ்தானத்தின் அதிபதியும் பத்தாம் ஸ்தானத்தின் அதிபதியும் உடன் சேர்ந்து இரண்டாம் ஸ்தானத்தில் இருந்து இவர்களில் யாரேனும் ஒருவர் ஆட்சி, உச்சம் அடைந்து வர்க்க சக்கரங்களிலும் வலுவடைய இந்த விஷ்ணு யோகம் ஏற்படும், இந்த அமைப்பில் இரண்டாம் ஸ்தானத்தின் அதிபதி கெட்டுவிடக்கூடாது மேலும் இந்த அமைப்பில் இராகு கேது கிரகங்கள் இரண்டாம் ஸ்தானத்தில் இடம் பெற்றாலும் 6,12 க்குடைய கிரகம் இரண்டாம் ஸ்தானத்தில் இடம் பெற்றாலும் இந்த யோகம் வலுக்குறைந்துவிடும்.

இதன் பலன்கள் -
வியபாரம் சார்ந்த பயணங்கள் நிறைய மேற்க்கொள்வார், செழிப்பான வீட்டு வசதிகள், சிறப்பான தனயோகம், பல்வேறு புதிய புதிய சூழல்களிலும் தன்னை தகவுவமைத்து கொண்டு சிறப்பாக பணியாற்றுவார், வெளிநாட்டு யோகம், தொழில் துறை சார்ந்த அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளை பெறுவார், திறமையாக பணம் சேர்ப்பார், தன்னை சுற்றி உள்ள சூழலை சாதகமாக்கும் திறனும் இருக்கும்.

இந்த யோகம் அமைந்த ஒரு உதாரண படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


மேஷம் & விருச்சிகம், மேஷம் vs விருச்சிகம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

மேஷம் & விருச்சிகம், மேஷம் vs விருச்சிகம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்


ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மேஷம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ விருச்சிகம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

மேஷம் & விருச்சிகம், மேஷம் vs விருச்சிகம் -  



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

பெண் ரோஹிணி - ஆண் உத்திரம் - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் ரோஹிணி - ஆண் உத்திரம் - திருமண நட்சத்திர பொருத்தம்

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் முதல் ஆணின் உத்திரம் நட்சச்திரம் வரை எண்ண 9 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்

இதில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் மனுஷ கணம் - ஆணின் உத்திரம் நட்சச்திரம் மனுஷ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் முதல் ஆணின் உத்திரம் நட்சச்திரம் வரை எண்ண 9 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் முதல் ஆணின் உத்திரம் நட்சச்திரம் வரை எண்ண 9 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் உத்திரம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பசு ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் சிம்ம இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 4 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் கன்னி இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 5 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்கபடும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் சிம்ம இராசி ஆகும் போது இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனும் சூரியனும் தங்களுக்குள் பகை உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் இல்லை.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் கன்னி இராசி ஆகும் போது இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனும் புதனும் தங்களுக்குள் நட்பு உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம்.

இதில் பெண் ரிஷப இராசி ஆகி ஆண் சிம்ம இராசி ஆகும் போது இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வருவதால் வசிய பொருத்தம் இல்லை.

இதில் பெண் ரிஷப இராசி ஆகி ஆண் கன்னி இராசி ஆகும் போது இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வருவதால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ரோஹிணி நட்சச்திரம் கழுத்து ரஜ்ஜூ - ஆணின் உத்திரம் நட்சச்திரம் வயிறு ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் ரோஹிணி நட்சச்திரமும் - ஆணின் உத்திரம் நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் ரோஹிணி நட்சத்திரம் சிலேத்தும நாடி ஆகும் - ஆணின் உத்திரம் நட்சத்திரம் வாத நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறு நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் ரோஹிணி நட்சத்திரம் பால் இருக்கும் வகை - ஆணின் உத்திரம் நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே மேலே சொன்னபடி பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு.

பெண்ணின் ரோஹிணி நட்சத்திரமும் - ஆணின் உத்திரம் 1 ஆம் பாத நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  8 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

பெண்ணின் ரோஹிணி நட்சத்திரமும் - ஆணின் உத்திரம் 2,3,4 ஆம் பாத நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  9 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 



பாமரனின் மகிழச்சி - "கலியுகத்தில காசு வந்தாலே மகிழ்ச்சி வந்துடுயா"…

பாமரனின் மகிழச்சி - "கலியுகத்தில காசு வந்தாலே மகிழ்ச்சி வந்துடுயா"…


கபாலி படத்தின் தாக்கமாக இந்த மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ற வார்த்தையை அனைவரும் தற்போது சொல்லி வருகிறார்கள் இதை பற்றி எதார்த்தமாக பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பெரியவர் என்னிடம் சொன்னார் இந்த வாசகத்தை "கலியுகத்தில காசு வந்தாலே மகிழ்ச்சி வந்துடுயா" என்று இந்த வாசகத்தில் எனக்கு உடன்பாடு குறைவானாலும் அந்த மனிதரின் எதார்த்தமும் தற்போது பலருக்கு இது போல உணர்வு இருந்து வருவதையும் மறுக்க முடியாது, ஒரு மனிதரை பார்த்து "அவர் பாருங்க காசு வந்ததும் சும்மா பளபளணு ஆயிட்டார்" என்றும் "அவனுக்கு என்னப்பா காசு வந்ததும் ஆளே மாறிட்டான்" என பல்வேறு வாசகங்களை நமது அன்றாட வாழ்வில் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

காசு என்றால் பொன், பணம், ரோக்கம், நாணயம் என்றெல்லாம் பொருள் வரும் சொல்லாகும் இந்த காசு வரும் யோகத்தை ஜோதிடத்தில் தனயோகம் என்று அழைப்பார்கள் இதில் வரும் தனம் என்ற சொல்லுக்கு பணம், பரிசு, சொத்து, செல்வம், மூலதனம், புதையல் என்றெல்லாம் அர்த்தம் வரும், இந்த பொருளாதார போட்டி உலகத்தில் தனயோகத்தை ஒருவரின் ஜாதகத்தை ஆய்து தான் முடிவுக்கு வர வேண்டும் இருந்தாலும் பொதுவான ஒரளவுக்கு பலன் தரும் அடிப்படை தனயோகங்கள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கிரகங்களின் ஷட்பலம் - மேஷ இராசியில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் ஸ்தான பலம்…

கிரகங்களின் ஷட்பலம் - மேஷ இராசியில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் ஸ்தான பலம்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஷட்பலம் காணப்பட்டு அது ஒருவரனின் ஜாதக பலனை அறிவதற்கு உபயோகமாக இருக்கும் ஒரு நல்ல முறையாகும், ஷட் (षट्- SaT) என்றால் "ஆறு" என பொருள்படும். "ஷட் பலம்" என்றால் "ஆறு விதமான வலிமை" எனப் பொருள்படும்.

கிரகங்களின் ஆறுவிதமான பலங்கள் -

1) ஸ்தான பலம்
2) திக் பலம்
3) கால பலம்
4) சேஷ்ட பலம்
5) நைசார்கிக பலம்
6) த்ருக் பலம்

இந்த ஷட் பலத்தில் நாம் முதலில் பார்க்க இருப்பது ஸ்தான பலம் ஆகும் இந்த ஸ்தான பலத்திற்கு உள் பிரிவுகள் உண்டு அவை

ஸ்தான பலம் - உட்பிரிவுகள்

1) ஆறுநிலை பலம்
2) பால்பலம்
3) இருப்புபலம்
4) உச்சபலம்
5) கேந்திர பலம்
6) திரிகோண பலம்
7) வர்க்க பலம்

இது ஒரு புத்தகத்தில் அடங்கக் கூடிய அளவுக்கான விஷயங்கள் என்பதால் ஒர் இரு பதிவுகளில் கண்டுவிட முடியாது எனவே முதலில் ஸ்தான பலத்தின் உள் பிரிவான ஆறுநிலை பலம் மற்றும் பால்பலத்தை மட்டும் முதலாவதாக பார்ப்போம், அதில் ஒவ்வொரு இராசியாக பார்க்கலாம் காலசக்கரத்தின் முதல் இராசியான மேஷம் முதல் கடைசியான மீனம் வரை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) ஆறுநிலை பலம்
ஒவ்வொரு இராசியில் அமரும் போது ஒவ்வொரு விதமான பலம் மற்றும் பலவீனங்களை அடைகின்றன இது ஒரு ஜாதக கணிதத்தில் முக்கிய பங்காற்றுகின்றன அதாவது ஜோதிடத்தில் இராசி சக்கரத்தில் ஒவ்வொரு பிரிவு இராசி மண்டலத்திலும் ஒரு கிரகம் வந்து சேர்வதன் மூலம் அந்த இடத்திற்கு தக்கவாறு ஒரு அவஸ்தை (கிரணங்களில் சூழ்நிலை மாற்றம்) அடைகின்றன என்பதை நாம் முன்பே முந்தை பதிவுகளில் ஒவ்வொரு இராசியாக பார்த்தோம் அதாவது ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என ஆறு வகையான அவஸ்தைகளாக பிரித்து எந்த எந்த இராசி எந்த எந்த கிரக்ங்களுக்கு இந்த ஆறு விதமாக கொண்ட தன்மைகளை (அவஸ்தை) என்பதை பார்த்தோம் அதை நீங்கள் மறந்திருக்கலாம் அதன் இணைப்பு குறிப்பு இது - 12 இராசிகளில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகளின் தொகுப்பு...

2) பால்பலம்
பால்பலம் என்பது ஒவ்வொரு இராசியையும் ஆண்பால் இராசி, பெண்பால் இராசி என்று பிரிக்கபட்டுள்ளது அதன் விவரத்தை நான் ஏற்கெனவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் 12 இராசிகளில் ஒற்றை மற்றும் இரட்டை, ஆண் பெண் இராசி... , அதே போல நவகிரகங்களையும் ஆண் பெண் அலி பிரிவுகள் உண்டு பண்ணபட்டுள்ளது சூரியன் = ஆண், சந்திரன் = பெண், செவ்வாய் = ஆண், புதன் = அலி, வியாழன் (குரு) = ஆண், சுக்கிரன் (வெள்ளி) = பெண், சனி = அலி, இராகு = பெண், கேது = அலி எனப்பிரிக்க பட்டுள்ளது

3) இருப்புபலம்
இருப்புபலம் என்பது ஒவ்வொரு இராசியையும் சரம், ஸ்திரம், உபயம் இராசி என்று பிரிக்கபட்டுள்ளது அதன் விவரத்தை நான் ஏற்கெனவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் உங்கள் லக்னம் சரமா?, ஸ்திரமா?, உபயமா?... , அதே போல நவகிரகங்களையும் சரம், ஸ்திரம், உபயம் பிரிவுகள் உண்டு பண்ணபட்டுள்ளது சூரியன் = ஸ்திரம், சந்திரன் = சரம், செவ்வாய் = ஸ்திரம், புதன் = உபயம், வியாழன் (குரு) = உபயம், சுக்கிரன் (வெள்ளி) = சரம், சனி = சரம், இராகு = சரம், கேது = ஸ்திரம் எனப்பிரிக்க பட்டுள்ளது

மேஷம் ராசி மண்டலத்தில் நவகிரகங்கள் இருப்பதால் அவைகள் பெறும் ஆறுநிலை, பால்பலம், இருப்புபலம் விவரங்கள் -

கோள்கள்
அவஸ்தைகள்
ஆறுநிலை
பால்பலம்
இருப்புபலம்
சூரியன்
உச்சம்
125%
10%
0%
சந்திரன்
சமம்
50%
0%
10%
செவ்வாய்
ஆட்சி
100%
10%
0%
புதன்
சமம்
50%
4%
0%
வியாழன்
நட்பு
75%
10%
0%
சுக்கிரன்
சமம்
50%
0%
10%
சனி
நீசம்
0%
4%
10%
ராகு
பகை
0%
0%
10%
கேது
பகை
0%
4%
0%


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


Powered by Blogger