Identifying characteristics of Saturn - சனியின் தன்மைகளை அடையாளம் காணல்…
Identifying characteristics of Saturn - சனியின் தன்மைகளை
அடையாளம் காணல்…
நவகிரகங்களை ஒவ்வொன்றாக அவைகளின் தனித்தன்மை காரகத்துவங்கள் மற்றும் மற்ற
கிரக தொடர்புகள் என்று ஒரு கிரகத்தின் அடிப்படை அம்சங்களை இந்த தொடர் பதிவின்
மூலம் பார்த்து வருகிறோம் இப்போது சனீஸ்வரன் அதாவது சனி கிரகம் இதை
சமஸ்க்ருதத்தில் शनि (zani) ஆங்கிலத்தில் Saturn என்றும்
தமிழில் காரி, கீழ்மகன், நீலன், அந்தன், கதிர்மகன், மந்தன், முடவன், நியாயன் என்றெல்லாம்
பெயர்கள் உண்டு
புராணத்தின் அடிப்படையில் சூரியனின் இரண்டாவது மனைவி சாயா – (நிழலின் தெய்வம்) - இவளுக்கு சூர்யன் மூலம் மூன்று பிள்ளைகள்--சனி, சாவர்ணி மனு, தபதீ அதாவது சூரியனின் முதல் மனைவி சம்ஞா
சூர்யனின் வெப்பம் தாங்காமல் தன்னை போன்றே ஒரு பெண்ணை உருவாக்கினாள் அவளை
சூரியனுடன் சேர வைத்தாள். அவள் தான்
சாயா பின்னாளில் இந்த சாயாவின் உண்மைகளை யமனின் மூலமாக தெரிந்து கொண்ட சூரியன்
சாயாவை நிராகரித்து, சம்ஞாவை
ஏற்றார் இதனால் சனி எமனை பகைத்தார் சனி சூரியனையும் பகைத்தார், எமனுடன் ஏற்பட்ட யுத்தத்தால் சனியிற் கால்
பாதிக்கபட்டது அதனால் மெதுவாக நகருபவரானார் எனவே அவரை முடவன் மந்தன் என்று பெயர்
வந்தது இருள் ஆற்றலின் வடிவமான சனி பகவான் பின் வலுவிழந்தரானார்
என்ன இருந்தாலும் சூர்யனின் மகன் சனி அல்லவா அவர் தன் வலிமை மேம்படுத்த சனி
பகவான் சிவனை வேண்டி மூவாயிரம் ஆண்டுகளுக்கு ஆழமான தவம் செய்துள்ளார் அதன் பயனாக
சிவன் தோன்றினார் சனி அவரிடம் தனக்கும் கிரக அந்தஸ்து கேட்டார் சிவன் "நீ சாயாவிக்கு (நிழல்) பிறந்ததால் உலகில்
பாபம் செய்த உயிர்களை அனைத்துவித மாயா கர்ம விஷயங்களால் மனிதர்களை சோதித்து
அவர்களை புண்ணிய வழி கூட்டிச் சென்று மோட்சம் அடைய உதவி செய்வாய் மற்றும் புண்ணிய
கர்மாக்களை வைத்திருப்பவருக்கு உடல் நலம், மகிழ்ச்சி, செல்வம், அறிவு, ஞானம், மோட்சம் அடைய உதவி
செய்வாய் மற்றும் பாப கர்மாக்களை வைத்திருப்பவருக்கு கவலை,
கஷ்டங்கள், நோய்கள்
மற்றும் தாமதங்கள் போன்றவற்றை அனுபவிக்க உந்து காரணமாக இருந்து புண்ணிய வழிக்கு
கூட்டிச் செல்வாய், இதை
அனைவருக்கும் சமமாக உயர்வு தாழ்வு கருதாமல் செய்வதால் ஈஸ்வர பட்டம் உடையனாக
திகழ்வாய்" இவ்வாறு வரம் பெற்ற சனீஸ்வரன் பல வண்ண குதிரைகள்
கொண்ட தேரை உடைய கிரகமானார் தேர் குதிரைகள் என்றால் கிரக பாஷையில் கதிர்கள் (Rays) இது சனியின் மிக சுருக்க ஜோதிட கதைகள்
ஆகும்.
சனியின் நிறம் கருப்பு ஆகும். அவர் ஆழமான கண்கள் மற்றும் ஒல்லியான மற்றும் உயரமான உடல், அவர் மந்தமான மற்றும் பெரிய நகங்கள் உடையவர்
அவர் கீழ்நோக்கு கிரகம், சனியின்
காரகத்துவங்கள் கொடூரமான மற்றும் இரக்கம் அற்றவர், தாமச குணம், மந்த புத்தி, தீய இயல்பு, தந்திரம், இடையூறுகள் தீமையை
குறிக்கிறது, ஊழியர்கள், சராசரியான செயல்கள், திருடர்கள், பழைமை, பாழடைந்த வீடுகள், கசப்பான பழங்கள் இலைகள், தடித்த
தோல், காட்டு மலர்கள், முட்கள், பொறுமை மற்றும் நிதானம்,
கடினமான காலங்களிலும் விடாமுயற்சி, அனாதைகள்,முதியோர், ஊனமுற்றவர்கள், பக்தி, ஆயுள்
காரகன், தொழில் காரகன், வேலை காரகன், நீதித்துறை, ஸ்திரத்தன்மை, அடிமைத்தனம், தீர்க்க ஆயுள், இரும்பு, களவு, சிறைப்படல், சிறை
தண்டனை, சித்தப்பிரம்மை, போதை, ஆளடிமை
இவற்றிற்கு எல்லாம் காரகத்துவங்கள் பெற்றவர்.
சனிக்கு மிகச்சிறந்த நட்பு கிரகமாக இருப்பது சுக்கிரன் ஆகும் இருவரும்
சேர்ந்து அதில் எவர் ஒருவர் ஆட்சி, உச்சம்
அடைந்தாலும் அதன் மூலம் அதிக வலிமையடைபவர் சனியே ஆகும், அதனால் சுக்கிரனின் செல்வ வளம் காரணமாக சனிக்கு செல்வாக்கு செல்வ பலம்
மற்றும் அறிவார்ந்து மற்றும் திறமையோடு தொழில் செய்யக்கூடிய ஆற்றலை ஏற்படுத்தி
கொடுப்பார்.
பொதுவாக சொல்வதானால் உற்பத்தி துறை மற்றும் தொழில்துறை அதுவும் குறிப்பாக
நவீன தொழிற்சாலைகள் அமைத்தல் அதன் மூலம் அதிக வேலைவாய்ப்பு மற்றும் பொருட்களை
உற்பத்தி செய்தல் இவற்றிற்கு அடிபடை காரகத்துவம் வகிப்பவராக இருப்பவர் இவர், நீதிதுறைக்கும் முக்கியமானவர், உலோக பொருட்களை சுத்தம் செய்தல், அதன் வடிவாக்கம் போன்ற துறைகளுக்கு
காரகத்துவமானவர், பொறியியல்
சேவைத்துறைக்கும் இவரே காரகம்.
சனி பகவானை இன்று எல்லாரும் பழைய கோயில்களிலில் கூட தனி சந்நிதி அமைத்தும்
புதிய கோயில்களில் அவசிய சந்நிதியாக சனீஸ்வரனுக்கு முக்கியத்துவம் தரக் காரணம்
ஏழரை சனிக்காலம், அஷ்டம சனிக்காலம், அர்த்தாஷ்டம சனிக்காலம், கண்டக சனிக்காலம் இவை இப்போது மனிதரை அதிகமாக
வாட்டி எடுப்பதாக பலரால் பொதுவாக நம்பபடுவதால்,
- ஜென்ம ராசிக்கு ஏழாவது ராசியில் கோச்சார சனி சஞ்சரிக்கும் காலம் கண்டக சனிக்காலம்.
- ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் கோச்சார சனி சஞ்சரிக்கும் காலம் அஷ்டம சனிக்காலம்.
- ஜென்ம ராசிக்கு நான்காவது ராசியில் கோச்சார சனி சஞ்சரிக்கும் காலம் அர்த்தாஷ்டம சனிக்காலம்.
- ஜென்ம ராசிக்கு பன்னிரண்டாம் ராசியிலிருந்து ஜென்ம ராசி மற்றும் இரண்டாம் ராசி வரை கோச்சார சனி சஞ்சரிக்கும் காலம் ஏழரை சனிக்காலம் என்று அழைக்கப்படுகிறது.
சனி பகவான் மனிதர்களுக்கு ஏன் துன்பம் கொடுக்க வேண்டும் அவருக்கு
வேறுவேலையில்லையா என்று கேட்டால் அவரது வேலை புண்ணிய ஜீவன்களுக்கு உடல் நலம், மகிழ்ச்சி, செல்வம், அறிவு, ஞானம், மோட்சம் அடைய உதவி செய்வது தான் ஆனால் அந்த வேலையை சனியை முழுமையாக
செய்யவிடாமல் மனிதர்களாகி நாம் அவருக்கு கவலை, கஷ்டங்கள், நோய்கள்
மற்றும் தாமதங்கள் போன்ற வேலை மட்டும் அவருக்கு தருவதால் வேறுவழியில்லாமல் அந்த
வேலை அதிகம் செய்வதால் அவரும் தன்னை கண்டால் பயப்படும் வடிவத்தை சூடிக்கொள்ள
வேண்டியது ஆயிற்று ஆனால் சனி பகவான் ஒருவரை உயர்த்தினால் அது அழியாத ஸ்திரமான
நிலையான முன்னேற்றம் மற்றும் தொடர் செல்வ வளம் தருவார் இது சனியை தன் ஜாதகத்தில்
பலமாக கொண்டவர்களுக்கு தெரியும்.
சூர்யனை சுற்றி வர முழுமையான பயணம் செல்ல 29.7 ஆண்டுகள் சனிக்கு எடுக்கும் அதாவது ஒரு இராசியை கடக்க 2 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும், நட்பு உறவுத் தன்மை கொண்ட கிரகங்கள் புதன், சசுக்கிரன், இராகு, கேது. பகைப் உறவுத் தன்மை கொண்ட கிரகங்கள் சூரியன், சந்திரன். சமமான உறவுத் தன்மை கொண்ட கிரகங்கள் குரு, செவ்வாய். சனியின்
திசாபுத்திக் காலம் பத்தொன்பது ஆண்டுகள் ஆகும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "Identifying characteristics of Saturn - சனியின் தன்மைகளை அடையாளம் காணல்…"
கருத்துரையிடுக