ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - துவிதியை திதி பிறந்தவர்களின் பொது பலன்கள் பகுதி 3..
ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - துவிதியை திதியில் பிறந்தவர்களின் பொது பலன்கள்
பகுதி 3...
ஜோதிடத்தின் ஆதார அமைப்புகளில் முக்கியமானது
பஞ்சாங்கம் ஆகும் பஞ்சாங்கம் என்றால் வாரம் - திதி - நட்சத்திரம் - யோகம் - கரணம் ஆகிய ஐந்தின் அங்கத்தின் சேர்மான வார்த்தை தான் பஞ்சாங்கம் அதில் திதி என்பது சூரியனுக்கும்
சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும் என்று முன் பதிவில் பார்த்தோம், இப்போது நாம் பார்க்க இருப்பது துவிதியை - இரண்டாம் பிறையை பற்றி அதாவது சூரியனில்
இருந்து சந்திரன் 12° (12 பாகையில்) முதல் 24° பாகை வரை சுக்கிலபட்ச
துவிதியை (வளர்பிறை
சந்திரன்) ஆகும், சூரியனுக்கு சந்திரன் 192°
(192 பாகையில்) முதல் 204° பாகை வரை கிருஷ்ணபட்ச துவிதியை (தேய்பிறை சந்திரன்) ஆகும் இது தான் பொதுவாக கடைபிடிக்கபட்டு வரும்
முறை ஆகும்
இதன் எளிய அட்டவணை -
விளக்கம்
|
பாகை - கலை -விகலை
|
பாகை - கலை -விகலை
|
திதி
|
சூரியனில் இருந்து சந்திரன்
|
12:00:00
முதல்
|
24:00:00
வரை
|
சுக்கில பட்ச - துவிதியை
|
சூரியனில் இருந்து சந்திரன்
|
192:00:00
முதல்
|
204:00:00
வரை
|
கிருஷ்ண பட்ச - துவிதியை
|
துவிதியை -
அதிதேவதை - விதத்தா
சந்திரகலையின் பெயர் - மனதா
சக்தி வடிவம் - பாகாமாலினி
துவிதியை திதிக்கான பாடல் -
இரண்டாம் பிறைதனில் உதித்த பிறப்பானால் தீரர்கள் ஆளும்
வாஞ்சை உடையார் திமிர் தற்பெருமையை
எதிர்பார் ஆள்
திரட்டும் மதிப்பு பெறும் மதிப்பு கொடுக்கும் தொகுக்கும்
மற்ற
ஆளுக்கும் அறிவு காட்டும் சபையில் வலிமை
கொள்ளும்
பரஞானம் துறவு மூப்பில் தேடும் சூரியசந்திர போக்கு கெடில்
சண்டை சச்சரவில் முனைப்பு கட்டளை இடுவது
தான்
திரம் மெச்சுதல் சிற்றின்பத்து நாட்டம் சகவாசத்தால் கெடுதல்
வேற்றுமை மனத்தார் இதை சூரியசந்திர முறை
கண்டுரை
- கோள்முனி ஞானமாயிரம்
பாடல் விளக்கம் -
இந்த பாடலை விளக்கம் செய்வது கடினம் ஏனென்றால்
மறைபொருள்கள் அதிகமாக உள்ளது அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பொருள் கொள்ள
வாய்ப்பு உண்டு அதனால் என்னளவில் உணர்ந்த கருத்தை சுருக்கமாக சொல்வதானால் துவிதியை
திதியில் பிறந்தவர் வலிமையானவர்கள், அரசாளுதல் அல்லது ஆளுதல் (Ruling) ஆசை உடையவர்கள், திமிர்
மற்றும் தற்பெருமை உடையவர்களை எதிர்க்க கூடியவர்கள், ஆட்களை திரட்டும் சக்தி படைத்தவர்கள், மரியாதை கௌரவம் பெறுவார்கள் அதை மற்றவருக்கும் தருவார்கள், ஒரு விஷயத்தை தொகுக்கும் ஆற்றல் உள்ளவர்கள், மற்றவர்களுக்கும் தான் அறிந்ததை
எடுத்துரைப்பார்கள், சங்கங்கள்
சபைகளில் வலிமையான பதவிகளை வகிப்பார்கள், வாழ்வின் இறுதியில் ஆன்மீக ஞானம், பக்தி மற்றும் துறவுவாழ்க்கை போன்றவற்றை நாடும் ஆர்வம் ஏற்படும். சூரியசந்திரனின் போக்கு கெட்டு இருந்தால்
தேவையில்லாத சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல், அடிக்கடி மற்றவர்களுக்கு கட்டளை இட்டுக்கொண்டே இருப்பது, தன் திறமையை புகழுவது,
சிற்றின்பத்தில் பிரியம், நட்பால் கெடுதல், பிரித்து
பார்க்கும் மனப்பான்மை உடையவர்களாய் இருத்தல் இதை சூரியசந்திரனின் முழுமையான
நிலையை அறிந்து பின் உரைக்க வேண்டும்.
- ஜோதிஷ் சிவதத்துவ
சிவம்
0 Response to "ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - துவிதியை திதி பிறந்தவர்களின் பொது பலன்கள் பகுதி 3.."
கருத்துரையிடுக