Identifying characteristics of Venus - சுக்கிரனின் தன்மைகளை அடையாளம் காணல்…
Identifying characteristics of Venus - சுக்கிரனின் தன்மைகளை அடையாளம் காணல்…
சுக்கிரன் (சுக்கிரா) என்று பெயர் காரணம் சமஸ்கிருதத்தில் சுக் என்ற வேர்ச்சொல்லில்
இருந்து தான் வந்தது சுக்கிரா என்றால் வெளிர் நிறம், வெள்ளை, பிரகாசமான, களங்கமற்ற, தூய, தெளிவான என்று பொருள், சுக் என்ற வேர்ச்சொல்லில் இருந்து தான்
சுகம் = இன்பம்
சுக்கிலம் = விந்து
சுக்கிலட்ரா = நல்ல மனைவி
சுக்கல்பா = எளிதாக செய்ய
முடிவது
சுக்கல்யா = கச்சிதமாக ஒலி (இசை)
சுக்கந்தம் = நல்ல வாசனை
போன்ற சொற்கள் எல்லாம் சுக்கிரனின் தன்மைகளை அடையாளம் காட்டும் சொற்கள்
போல உள்ளது, சுக்கிரனே காமகாரகனும்
காதல்காரகனும் ஆவார், ஆண் பெண்
சேர்க்கை, திருமண வாழ்க்கையின்
இன்பங்கள், மற்றும் வாகன யோகம்
தருபவரும் இவரே சுக்கிரன் ஜாதகத்தில் சிறப்பாக அமைய பெற்று வாகன யோகங்கள் பெற்றவர்
அந்த ஜாதகர் வெள்ளை நிற சொகுசு கார்கள் வாங்குவதில் தான் திருப்தியும் விருப்பமும்
கொள்வார், ஆடம்பரமான வீடு
வாங்குவதிலும் கட்டுவதிலும் சுக்கிரனே காரகத்துவம் பெற்றவர், இசை முக்கியமான திரைபடத்துறை நடிப்பு, நடனம், ஆடை வடிவமைப்பு, காட்சி கள
வடிவமைப்பு (art director and production designer), திரைக்கதை ஆகிய விஷயங்களின் ஆதிபத்தியமாக இருப்பவரும் சுக்கிரனே,
சுக்கிரனுக்கு மிகச்சிறந்த நட்பு கிரகமாக இருப்பது புதன் ஆகும் இருவரும்
சேர்ந்து அதில் எவர் ஒருவர் ஆட்சி, உச்சம்
அடைந்தாலும் அதன் மூலம் அதிக வலிமையடைபவர் சுக்கிரனே ஆகும், சுக்கிரன் வெள்ளி உலோகம், வெள்ளி உலோக சார்ந்த கலை பொருட்களுக்கு
காரகனும் இவரே, ரத்தினங்களில் மிக
உயர்ந்த விலை மதிப்புள்ள வைரம், வைரம்
சார்ந்த ஆபரண பொருட்களுக்கு காரகனும் இவரே,
குரு பகவான் தேவர்களின் ஆசான் (குரு) ஆனால் சுக்கிரனோ
அசுரர்களின் ஆசான் (குரு) அதனால் மனிதர்களை சிற்றின்பத்தில் ஆழ்த்துவதில்
வல்லவர் தற்போது மனிதர்களும் சிற்றின்பத்தை தான் அதிகமாக விரும்புவதால் சுக்கிர
திசைகளான எதிர்பார்ப்புகள் அதிகமாக மக்களுக்கு உள்ளது. சுக்கிரன் சைக்கிள் வைத்திருப்பவனை இருசக்கரவாகனத்திற்கும், இருசக்கரவாகனம் வைத்திருப்பவனை
நான்குசக்கரவாகனத்திற்கும், நான்குசக்கரவாகனம்
வைத்திருப்பவனை ஆடம்பரமான நான்குசக்கரவாகனத்திற்கும் என ஆசைகளை தூண்டிவிட்டு
அதற்க்காக ஒருவரை முயற்சிக்கும் படி செய்பவரும் இவரே இதனால் சுக்கிரன் சுப
வலிமையோடு இருப்பவர்க்கு இத்தகைய ஆசைகளை அடைக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
வெறும் ஆசை தூண்டுதலும் மற்றும் சிற்றின்ப சுகங்களையும் அனுபவிப்பது தான்
சுக்கிரன் என்று நினைத்து கொள்ள வேண்டாம் இவ்வளவு சொன்னாலும் சுக்கிரன் ஆசான் (குரு) ஆகும் அதனால் அறிவார்ந்த, திறமை உடைய, தந்திரமான, பாண்டித்தியம், ஞானதிருஷ்டி ஆகிய திறன்களை தரக்கூடிய காவிய
நாயகனும் சுக்கிரனே ஆகும்.
சுக்கிரனுக்கு நட்பு கோள்கள் புதன், சனி, இராகு, கேது. சுக்கிரனுக்கு பகை கோள்கள் சூரியன், சந்திரன். சுக்கிரனுக்கு
சமனான நிலை கொண்ட கோள்கள் செவ்வாய்,குரு. சுக்கிரனுக்கு நட்பு வீடு : மேஷம், விருச்சிகம், மிதுனம், மகரம், கும்பம். சுக்கிரனுக்கு பகை
வீடு : கடகம், சிம்மம், தனுசு. சுக்கிரனுக்கு ஆட்சி
பெறும் இராசி : ரிஷபம், துலாம். சுக்கிரனுக்கு நீசம் பெறும் இராசி : கன்னி. சுக்கிரனுக்கு
உச்சம் பெறும் இராசி : மீனம். சுக்கிரனுக்கு மூலதிரி கோணம் : துலாம்.
12 லக்னத்தில்
பிறந்தவர்களுக்கும் சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச ஸ்தானங்கள்
பின்வருமாறு -
மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7
ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 12 ஆம்
ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில்
சுக்கிரன் நீசம் அடைவார்.
ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,6
ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 11 ஆம்
ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில்
சுக்கிரன் நீசம் அடைவார்.
மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5,12
ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 10 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.
கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4,
11 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 3 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.
சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,10
ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,9
ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 1 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,8
ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.
விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 12,7 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 6,11 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 10 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.
மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5,10 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 3 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.
கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4,9
ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.
0 Response to "Identifying characteristics of Venus - சுக்கிரனின் தன்மைகளை அடையாளம் காணல்…"
கருத்துரையிடுக