லக்னத்தின் சிறப்பும் லக்னாதிபதியின் உயர்வு நிலைகளும்…

லக்னத்தின் சிறப்பும் லக்னாதிபதியின் உயர்வு நிலைகளும்
லக்னம் ஆம் இது தான் ஆத்ம ஸ்தானம் நம் ஜோதிட முன்னோர்கள் சூரியனின் மைய ஜீவகாந்த விசை விச்சு விழும் பூமிக்கும் 12 இராசி மண்டலத்திற்குமான சேர்ந்த அந்த லக்ன புள்ளியை எவ்வாறு கண்டு அறிந்தார்கள் மற்றும் அதை கணக்கிடும் கணிதத்தை எவ்வாறு கண்டு அறிந்தார்கள் என்று நினைக்கும் போதெல்லாம் நம் ஜோதிட ரிஷிகள் சித்தர்களின் ஆன்மீக ஜோதிட ஞானத்தை நினைத்து பெருமை ஏற்படுகிறது,

லக்னத்தை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் எழுத ஓர் இரு பதிவுகள் பத்தாது இருந்தாலும் சுருக்கமாக இந்த பதிவில் லக்ன பலத்தை பலவீனத்தை புரிந்து கொள்ளலாம், லக்னமே ஒருவரது உடல் அமைப்பு, உயிர்சக்தி
, மனநிலை & போக்குகள், பொதுவான வாழ்க்கை, தலை, முகம், நற்பண்புகள், ஆயுள், வாழ்க்கை கட்டமைப்பு
தொடக்க கால சூழ்நிலை, பொது ஆரோக்கியம், உங்களுடைய நடை, உங்கள் பாணி இதையெல்லாம் காட்டக்கூடிய முக்கிய ஸ்தானம் ஆகும்,

சூரியனை கொண்டு தான் நாம் லக்ன பாவத்தை கணிக்கிறோம் அதனால் லக்னம் ஸ்தானத்திற்கு காரகத்துவம் பெற்ற கிரகமாக இருப்பது சூரியன் ஆகும், லக்ன கணிதத்தில் பலவகையான லக்னங்கள் உள்ளன சந்திரனை கொண்டும் சந்திரா லக்னம் கணிக்கபடுகிறது சந்திரனின் உதயம் அஸ்தமனம் கொண்டு சூரிய லக்னத்தை போல சந்திரா லக்னமும் கணிக்கபடுகிறது ஆனால் பயன்பாட்டில் பெரிய அளவில் இல்லை,

லக்னத்தின் சுப பலத்தை அறிய லக்னத்தின் நிலை, லக்னாதிபதியின் நிலை மற்றும் லக்னம் லக்னாதிபதியுடன் தொடர்பு பெறும் கிரகத்தின் நிலை மற்றும் லக்னத்துடன் சூரியனின் நிலை என்பன பார்ப்பது மிக முக்கியம் ஆகும்,

லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி உச்சம் பெறுவது மிக சிறப்பான அதே நேரத்தில் மிக அபூர்வமாக அமையும் யோகம் ஆகும் இவ்வாறு அமையும் போது அவருக்கு நல்ல ஆயுள் பலமும், உடல் அமைப்பு நன்றாக இருக்கும், உயர்வான வாழ்க்கை நிலையில் அவரது ஜனனமும், அந்தஸ்தும் அமையும், இனிமையான குழந்தைப்பருவம் போன்றவை அமையும்.

லக்னத்தில் லக்னத்திற்கு சுப கிரகங்கள் இருந்தால் மற்றும் சுப கிரகங்களால் பார்க்கபட்டால் பிறந்தது முதல் செழுமையான வாழ்க்கை, குழந்தைப்பருவத்தில் அன்பு ஆதரவான வாழ்க்கை நிலை போன்றவை அமையும், சுமூகமான சுகமான வாழ்வும் இருக்கும்.

லக்னத்தில் லக்னத்திற்கு பாப கிரகங்கள் இருந்தால் மற்றும் பாப கிரகங்களால் பார்க்கபட்டால் பிறந்தது முதல் துயரமான வாழ்க்கை, குழந்தைப்பருவத்தில் அன்பு ஆதரவான இல்லாத நிலை போன்றவை அமையும், வறுமை போதிய உணவு உடை யில்லாத பற்றாக்குறையான வாழ்வாக இருக்கும்.

அது போல லக்னாதிபதி ஆட்சி உச்சம் பெறுவது மிகச்சிறப்பான யோகமே ஆகும் அதுவும் மேலே லக்னாதிபதி லக்னத்தில் பலம் அடைந்தால் என்ன பலன்கள் வருமோ அது போல நற்பலன்களை தரும் ஆனால் லக்னாதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் ஸ்தானங்களில் அமையாமல் இருப்பது மிக நல்லது அதே போல பகை நீசம் ஆகாமல் இருப்பதும் மிக நல்லது.

அது போல லக்னாதிபதி வேறு ஸ்தானங்களில் இருந்து லக்னத்தை பார்க்கும் படி அமைந்தால் மிக நல்லது அதன் மூலம் நல்ல உடல் ஆரோக்கியம், நோய் வந்தாலும் உடனடியாக நிவர்த்தி அடையும், அதிகாரமும், ஆளுமையும் கொடுக்கும், உயரிய குணங்களையும் கொடுக்கும், மேலும் சுப வலிமை பெற்ற குரு கிரகத்தால் பார்க்க நேர்ந்தாலும் இத்தகைய பலன்களும் மற்றும் சுமூகமான வாழ்க்கையும் அமைத்து கொடுக்கும் நல்லவர்கள் பழக்கவழக்கமும் ஏற்படும்.

லக்னம் முதல் சுப ஸ்தானம் ஆகும் இருந்தாலும் உபய லக்னங்களில் பிறந்தவருக்கும் மற்றும் ஒரே ஆதிபத்தியம் பெற்ற கடகம், சிம்மம் லக்னங்களுக்கும் லக்னாதிபதி லக்னத்தில் தனித்து அமரும் போது சிறிய அளவிலாவது கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும், அது போல லக்னாதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் ஸ்தானங்களில் ஆட்சி உச்சம் பெறும் நிலை ஏற்பட்டாலும் பெரிய அளவிலான தீமைகளை ஜாதகருக்கு தரமாட்டார், தன் நிலை பொருத்து நன்மைகளை தருவார்.

12 லக்னங்களுக்கும் லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெறும் இடங்கள் : -

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி செவ்வாய் 8 ஆம் ஸ்தானம் அதாவது விருச்சிகம், மேஷத்தில் ஆட்சி அடைவார், 10ஆம் ஸ்தானம் மகரம் இராசியில் உச்சம் அடைவார்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் 6 ஆம் ஸ்தானம் அதாவது துலாம், ரிஷபத்தில் ஆட்சி அடைவார், 11ஆம் ஸ்தானம் மீனம் இராசியில் உச்சம் அடைவார்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி புதன் 4 ஆம் ஸ்தானம் அதாவது கன்னி, மிதுனத்தில் ஆட்சி அடைவார், 4ஆம் ஸ்தானம் கன்னி இராசியில் உச்சம் அடைவார்.

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சந்திரன் கடகம் இராசியில் ஆட்சி அடைவார், 11ஆம் ஸ்தானம் ரிஷபம் இராசியில் உச்சம் அடைவார்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சூரியன் சிம்மம் இராசியில் ஆட்சி அடைவார், 9ஆம் ஸ்தானம் மேஷம் இராசியில் உச்சம் அடைவார்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி புதன் கன்னி மற்றும் 10 ஆம் ஸ்தானம் அதாவது மிதுனத்தில் ஆட்சி அடைவார், கன்னி இராசியில் தான் உச்சமும் அடைவார்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் 8 ஆம் ஸ்தானம் அதாவது ரிஷபம், துலாத்தில் ஆட்சி அடைவார், 6ஆம் ஸ்தானம் மீனம் இராசியில் உச்சம் அடைவார்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி செவ்வாய் 6 ஆம் ஸ்தானம் அதாவது மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி அடைவார், 3ஆம் ஸ்தானம் மகரம் இராசியில் உச்சம் அடைவார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு தனுசு மற்றும் 4ஆம் ஸ்தானம் அதாவது மீனத்தில் ஆட்சி அடைவார், 8ஆம் ஸ்தானம் கடகம் இராசியில் உச்சம் அடைவார்.

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சனி மகரம் மற்றும் 2ஆம் ஸ்தானம் அதாவது கும்பத்தில் ஆட்சி அடைவார், 10ஆம் ஸ்தானம் துலாம் இராசியில் உச்சம் அடைவார்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சனி 12ஆம் ஸ்தானம் அதாவது மகரம் மற்றும் கும்பத்தில் ஆட்சி அடைவார், 9ஆம் ஸ்தானம் துலாம் இராசியில் உச்சம் அடைவார்.


மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு 10 ஆம் ஸ்தானம் அதாவது தனுசு, மீனத்தில் ஆட்சி அடைவார், 5ஆம் ஸ்தானம் கடகம் இராசியில் உச்சம் அடைவார்.

0 Response to "லக்னத்தின் சிறப்பும் லக்னாதிபதியின் உயர்வு நிலைகளும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger