ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 33 - ஆதியந்த யோகம்…
ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 33 - ஆதியந்த யோகம்…
ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக
இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை
எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால்
தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம்
இருக்கட்டும். மேலும் சில யோக
அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும்
காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம்
இருக்கட்டும்.
ஆதியந்த யோகம்
ஜென்ம லக்ன லக்னாதிபதி ஆட்சி பெற்றோ அல்லது ஐந்து, ஒன்பது, பத்து ஆம் ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் உச்சம் பெற மற்றும் ஜீவனாதிபதி (10 ஆம் ஸ்தானாதிபதி) 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் ஏற்படும் யோகம் ஆதியந்த யோகம் ஆகும்.
இதன் பலன்கள் -
இந்த யோகத்தை பெற்றவர்கள் அரண்மனை போன்ற பெரிய மாளிகை
கட்டி அதில் சகல வசதிகளுடனும் வாழ்வார்களாம் மற்றும் நில புலன்கள், பண்ணை வசதிகள் மற்றும் தாம் சார்ந்த
இனத்தாருக்கோ அல்லது தாம் சார்ந்த பகுதிக்கோ அல்லது சங்கங்களில் ஏதேனும் தலைமை
பொறுப்புகளில் வருவார்கள்.
0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 33 - ஆதியந்த யோகம்…"
கருத்துரையிடுக