மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சப்த கிரகங்கள் பெறும் ஆதிபத்யங்கள்…

மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சப்த கிரகங்கள் பெறும் ஆதிபத்யங்கள்

இராகு, கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு கிரகமும் தன் சுய ஸ்தான இராசிக்கு தக்க ஆதிபத்யங்களை (ஆதிக்கம் செலுத்தும் விஷயங்கள், ஆளுகைக்கு உட்பட்ட விஷயங்கள்) பெறும் அதில் மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு கிரகமும் பெறும் ஆதிபத்யங்கள்.

வியாழன் =
ஆத்ம ஸ்தானாதிபதி, தலைவிதி ஸ்தானாதிபதி
செவ்வாய் =
தன, வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதி
சுக்கிரன் =
தைரிய ஸ்தானாதிபதி, சகோதர ஸ்தானாதிபதி
புதன் =
சுக, வண்டி, வீடு  ஸ்தானாதிபதி, தாய் ஸ்தானாதிபதி
சந்திரன் =
பூர்வ புண்ணிய  ஸ்தானாதிபதி, புத்திர ஸ்தானாதிபதி
சூரியன் =
ரண ருண ரோக ஸ்தானாதிபதி, சேவா ஸ்தானாதிபதி
புதன் =
களத்திர  ஸ்தானாதிபதி, வணிக ஸ்தானாதிபதி
சுக்கிரன் =
ஆயுள்  ஸ்தானாதிபதி, மர்மங்கள் மற்றும் துர் அதிர்ஷ்ட ஸ்தானாதிபதி
செவ்வாய் =
தர்ம ஸ்தானாதிபதி, பாக்ய ஸ்தானாதிபதி, தந்தை ஸ்தானாதிபதி
வியாழன் =
கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானாதிபதி
சனி =
லாப ஸ்தானாதிபதி, சமூக ஸ்தானாதிபதி
சனி =
விரைய ஸ்தானாதிபதி, மோட்ச ஸ்தானாதிபதி

இந்த வரிசையில் இராகு, கேது வுக்கு இடமில்லை இருக்கும் இராசி, பெற்ற சாரம் பொருத்து அந்த லக்னத்துக்கான ஆதிபத்தியங்கள் எடுத்துக் கொள்வார்கள்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


Identifying characteristics of Venus - சுக்கிரனின் தன்மைகளை அடையாளம் காணல்…

Identifying characteristics of Venus - சுக்கிரனின் தன்மைகளை அடையாளம் காணல்…


சுக்கிரன் (சுக்கிரா) என்று பெயர் காரணம் சமஸ்கிருதத்தில் சுக் என்ற வேர்ச்சொல்லில் இருந்து தான் வந்தது சுக்கிரா என்றால் வெளிர் நிறம், வெள்ளை, பிரகாசமான, களங்கமற்ற, தூய, தெளிவான என்று பொருள், சுக் என்ற வேர்ச்சொல்லில் இருந்து தான்

சுகம் = இன்பம்
சுக்கிலம் = விந்து
சுக்கிலட்ரா = நல்ல மனைவி
சுக்கல்பா = எளிதாக செய்ய முடிவது
சுக்கல்யா = கச்சிதமாக ஒலி (இசை)
சுக்கந்தம் = நல்ல வாசனை

போன்ற சொற்கள் எல்லாம் சுக்கிரனின் தன்மைகளை அடையாளம் காட்டும் சொற்கள் போல உள்ளது, சுக்கிரனே காமகாரகனும் காதல்காரகனும் ஆவார், ஆண் பெண் சேர்க்கை, திருமண வாழ்க்கையின் இன்பங்கள், மற்றும் வாகன யோகம் தருபவரும் இவரே சுக்கிரன் ஜாதகத்தில் சிறப்பாக அமைய பெற்று வாகன யோகங்கள் பெற்றவர் அந்த ஜாதகர் வெள்ளை நிற சொகுசு கார்கள் வாங்குவதில் தான் திருப்தியும் விருப்பமும் கொள்வார், ஆடம்பரமான வீடு வாங்குவதிலும் கட்டுவதிலும் சுக்கிரனே காரகத்துவம் பெற்றவர், இசை முக்கியமான திரைபடத்துறை நடிப்பு, நடனம், ஆடை வடிவமைப்பு, காட்சி கள வடிவமைப்பு (art director and production designer), திரைக்கதை ஆகிய விஷயங்களின் ஆதிபத்தியமாக இருப்பவரும் சுக்கிரனே,

சுக்கிரனுக்கு மிகச்சிறந்த நட்பு கிரகமாக இருப்பது புதன் ஆகும் இருவரும் சேர்ந்து அதில் எவர் ஒருவர் ஆட்சி, உச்சம் அடைந்தாலும் அதன் மூலம் அதிக வலிமையடைபவர் சுக்கிரனே ஆகும், சுக்கிரன் வெள்ளி உலோகம், வெள்ளி உலோக சார்ந்த கலை பொருட்களுக்கு காரகனும் இவரே, ரத்தினங்களில் மிக உயர்ந்த விலை மதிப்புள்ள வைரம், வைரம் சார்ந்த ஆபரண பொருட்களுக்கு காரகனும் இவரே,

குரு பகவான் தேவர்களின் ஆசான் (குரு) ஆனால் சுக்கிரனோ அசுரர்களின் ஆசான் (குரு) அதனால் மனிதர்களை சிற்றின்பத்தில் ஆழ்த்துவதில் வல்லவர் தற்போது மனிதர்களும் சிற்றின்பத்தை தான் அதிகமாக விரும்புவதால் சுக்கிர திசைகளான எதிர்பார்ப்புகள் அதிகமாக மக்களுக்கு உள்ளது. சுக்கிரன் சைக்கிள் வைத்திருப்பவனை இருசக்கரவாகனத்திற்கும், இருசக்கரவாகனம் வைத்திருப்பவனை நான்குசக்கரவாகனத்திற்கும், நான்குசக்கரவாகனம் வைத்திருப்பவனை ஆடம்பரமான நான்குசக்கரவாகனத்திற்கும் என ஆசைகளை தூண்டிவிட்டு அதற்க்காக ஒருவரை முயற்சிக்கும் படி செய்பவரும் இவரே இதனால் சுக்கிரன் சுப வலிமையோடு இருப்பவர்க்கு இத்தகைய ஆசைகளை அடைக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

வெறும் ஆசை தூண்டுதலும் மற்றும் சிற்றின்ப சுகங்களையும் அனுபவிப்பது தான் சுக்கிரன் என்று நினைத்து கொள்ள வேண்டாம் இவ்வளவு சொன்னாலும் சுக்கிரன் ஆசான் (குரு)  ஆகும் அதனால் அறிவார்ந்த, திறமை உடைய, தந்திரமான, பாண்டித்தியம், ஞானதிருஷ்டி ஆகிய திறன்களை தரக்கூடிய காவிய நாயகனும் சுக்கிரனே ஆகும்.

சுக்கிரனுக்கு நட்பு கோள்கள் புதன், சனி, இராகு, கேது. சுக்கிரனுக்கு பகை கோள்கள் சூரியன், சந்திரன். சுக்கிரனுக்கு சமனான நிலை கொண்ட கோள்கள் செவ்வாய்,குரு. சுக்கிரனுக்கு நட்பு வீடு மேஷம், விருச்சிகம், மிதுனம், மகரம், கும்பம். சுக்கிரனுக்கு பகை வீடு கடகம், சிம்மம், தனுசு. சுக்கிரனுக்கு ஆட்சி பெறும் இராசி ரிஷபம், துலாம். சுக்கிரனுக்கு நீசம் பெறும் இராசி கன்னி. சுக்கிரனுக்கு உச்சம் பெறும் இராசி மீனம். சுக்கிரனுக்கு மூலதிரி கோணம் துலாம்.


12 லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச ஸ்தானங்கள் பின்வருமாறு -

மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  2,7 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் -  12 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் -  6 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.

ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  1,6 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் -  11 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் -  5 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  5,12 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 10 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.

கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4, 11 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 3 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.

சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,10 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,9 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 1 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,8 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.

விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 12,7 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 6,11 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 10 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.

மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5,10 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 3 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.

கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4,9 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.

மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி அடைவார் - 1 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம் அடைவார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்




பெண் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் - ஆண் கார்த்திகை - திருமண நட்சத்திர பொருத்தம்...

பெண் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் - ஆண் கார்த்திகை - திருமணப் பொருத்தம் நட்சத்திர பொருத்தம்...
முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரமும் ஆணின் கார்த்திகை நட்தச்திரமும் ஏக நட்சச்திரமாக வரும் ஜோதிட சாஸ்திரத்தின் கூற்றின் படி இதற்கு தினப்பொருத்தம் இல்லை.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்

இதில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் ராக்ஷஸ கணம் - ஆணின் கார்த்திகை நட்சத்திரம் மனுஷ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரமும் ஆணின் கார்த்திகை நட்தச்திரமும் ஏக நட்சச்திரமாக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரமும் ஆணின் கார்த்திகை நட்தச்திரமும் ஏக நட்சச்திரமாக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இல்லை.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரமும் ஆணின் கார்த்திகை நட்தச்திரமும் ஏக நட்சச்திரமாக வருவதால் இரண்டின் மிருகப் பிரிவும் ஆடு ஆகும் ஒரே மிருகமாக வருவதால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் மேஷ இராசி ஆனால் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 12 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் ரிஷப இராசி ஆனால் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ஆண் இருவரும் ரிஷப இராசி மேஷ இராசி ஆனாலும் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனும் செவ்வாயும் தங்களுக்குள் சம உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

பெண் ஆண் இருவரும் ரிஷப இராசி ஆனாலும் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனே என்பதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம். இதில் பெண் ரிஷப இராசி ஆகி ஆண் மேஷ இராசி ஆனால் இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை. பெண் ஆண் இருவரும் ரிஷப இராசி ஆனாலும் வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் வயிறு ரஜ்ஜூ - ஆணின் கார்த்திகை நட்சச்திரம் வயிறு ரஜ்ஜூ இரண்டும் ஒரே ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லை.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் கார்த்திகை நட்சச்திரமும் - ஆணின்  கார்த்திகை நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் கார்த்திகை நட்சத்திரம் சிலேத்தும நாடி ஆகும் - ஆணின்  கார்த்திகை நட்சத்திரம் சிலேத்தும நாடி ஆகும் பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் சிலேத்தும நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் கார்த்திகை நட்சத்திரம் பால் இருக்கும் வகை - ஆணின் கார்த்திகை நட்சத்திரம் பால் இருக்கும் வகை எனவே இரண்டும் பால் மரமாக ஆனதால் விருட்ச பொருத்தம் உண்டு.

பெண்ணின் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் நட்சத்திரமும் - ஆணின் கார்த்திகை 1,2,3,4 ஆம் பாதம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  6 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் முழுமை பெறாததால் எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் அஸங்கம் (சேர்க்கை இல்லை).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


ஜாதகத்தில் புதன் எட்டில் (8ல்) இருந்தால்...

ஜாதகத்தில் புதன் லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : - 



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சப்த கிரகங்கள் பெறும் ஆதிபத்யங்கள்…

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சப்த கிரகங்கள் பெறும் ஆதிபத்யங்கள்

இராகு, கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு கிரகமும் தன் சுய ஸ்தான இராசிக்கு தக்க ஆதிபத்யங்களை (ஆதிக்கம் செலுத்தும் விஷயங்கள், ஆளுகைக்கு உட்பட்ட விஷயங்கள்) பெறும் அதில் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு கிரகமும் பெறும் ஆதிபத்யங்கள்.

சனி =
ஆத்ம ஸ்தானாதிபதி, தலைவிதி ஸ்தானாதிபதி
வியாழன் =
தன, வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதி
செவ்வாய் =
தைரிய ஸ்தானாதிபதி, சகோதர ஸ்தானாதிபதி
சுக்கிரன் =
சுக, வண்டி, வீடு  ஸ்தானாதிபதி, தாய் ஸ்தானாதிபதி
புதன் =
பூர்வ புண்ணிய  ஸ்தானாதிபதி, புத்திர ஸ்தானாதிபதி
சந்திரன் =
ரண ருண ரோக ஸ்தானாதிபதி, சேவா ஸ்தானாதிபதி
சூரியன் =
களத்திர  ஸ்தானாதிபதி, வணிக ஸ்தானாதிபதி
புதன் =
ஆயுள்  ஸ்தானாதிபதி, மர்மங்கள் மற்றும் துர் அதிர்ஷ்ட ஸ்தானாதிபதி
சுக்கிரன் =
தர்ம ஸ்தானாதிபதி, பாக்ய ஸ்தானாதிபதி, தந்தை ஸ்தானாதிபதி
செவ்வாய் =
கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானாதிபதி
வியாழன் =
லாப ஸ்தானாதிபதி, சமூக ஸ்தானாதிபதி
சனி =
விரைய ஸ்தானாதிபதி, மோட்ச ஸ்தானாதிபதி

இந்த வரிசையில் இராகு, கேது வுக்கு இடமில்லை இருக்கும் இராசி, பெற்ற சாரம் பொருத்து அந்த லக்னத்துக்கான ஆதிபத்தியங்கள் எடுத்துக் கொள்வார்கள்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

 


Powered by Blogger