12 இராசிமண்டலப் பிரிவுகளின் பொது காரகத்துவங்கள் சுருக்கமாக…

12 இராசிமண்டலப் பிரிவுகளின் பொது காரகத்துவங்கள் சுருக்கமாக



மேஷம்: சக்தி வாய்ந்தவர், ஆர்வமிக்கவர், வீரம், சிவப்பு, தலை, காடுகள், மனக்கிளர்ச்சி, அவசரக்காரர், பெரிய நெற்றி, அமைதியற்ற, தடித்த புருவம், தலைமை, ஆணவமானவர், உயரமாக வளரக்கூடியவர், ஷத்திரியர்கள் (வீரர்கள்) அக்கினி அடையாளம்.

ரிஷபம்: வசீகரமானவர், முகம், உறுதியானவர், மந்தமானவர், விசுவாசமானவர், புல்வெளிகள், சமவெளிகள், ஆடம்பர அரங்குகள் (திரையரங்கு, கல்யாண மண்டபம்), உணவுவிடுதிகள், சாப்பிடும் இடங்கள், பற்கள், பெரிய கண்கள், ஆடம்பரமான, நேர்மையானது, அடர்த்தியான முடி, வைசியர்கள் (வர்த்தகர்கள்) பூமியின் அடையாளம்.

மிதுனம்: மார்பு, தோட்டம், தகவல் தொடர்பு, இதழியல், பள்ளிகள், கல்லூரிகள், படிக்கும் அறைகள், கேபிள்கள், தொலைபேசி, ஆர்வம், கற்று கொள்ளும் திறன், மகிழ்வானவர், செய்தித்தாள்கள், உயரமானவர், கன்னங்கள், அடர்த்தியான முடி, பரந்த மார்பு, சூத்திரர்கள் (தொழிலாளர்கள்) காற்று அடையாளம்.

கடகம்: இதயம், மார்பகம், நீர்த்தன்மையான இடங்கள், ஆறுகள், கால்வாய்கள், சமையலறை, உணவு, கவர்ச்சிகரமானவர்கள், மாற்றம், உணர்ச்சிக்கு முக்கியத்துவம், ஆழமாக இணைக்கப்பட்ட உறவுகள், தீர்க்க புலன், தாய் பாசம், அந்தணர்கள் (அறிஞர்கள்) நீர்த்தன்மை அடையாளம்.

சிம்மம்: வயிறு, செரிமானம், தொப்புள், மலைகள், காடுகள், குகைகள், பாலைவனங்கள், அரண்மனைகள், பூங்காக்கள், கோட்டைகள், கொதிகலன்கள், அதிகாரம், ஆணவம், எஃகு தொழிற்சாலைகள், மெல்லிய, உலர்ந்த இடங்கள் மற்றும் பொருட்கள், சூடானது, அரசு, அரசாங்கம், சுய பெருமை, ஷத்திரியர்கள் (வீரர்கள்) அக்கினி அடையாளம்.

கன்னி: மேல் இடுப்பு பாகங்கள், இணக்கம், பசுமையான தோட்டங்கள், வயல்கள், பழத்தோட்டம், நூலகங்கள், புத்தக கூடங்கள், பண்ணைகள், நுண்ணறிவு, புத்திக்கூர்மையானவர், பேச்சாற்றல், முக்கிய நரம்பு மண்டலம், உடலளவில் பலவீனம், விவேகம், திறமையுடைமை, வைசியர்கள் (வர்த்தகர்கள்) பூமியின் அடையாளம்.

துலாம்: இடுப்பு, வர்த்தகர்கள், சந்தைகள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு, பூங்காக்கள், பொழுதுபோக்கு, கழிப்பறைகள், ஒப்பனை அலங்காரம், சமநிலை, மதிப்பீடு, பரந்த பார்வை, நல்ல பேசுகிறவன், சூத்திரர்கள் (தொழிலாளர்கள்) காற்று அடையாளம்.


விருச்சிகம்: உடலுறவுப் பாகங்கள், துளைகள், ஆழமான குகைகள், சுரங்கங்கள், கடைகள், மங்கலான பகுதிகள், மங்கலான நிறம், பிரகாசமான கண்கள், இரகசிய பகுதிகள்,  திட்டம் தீட்டுதல், ரகசியங்கள், சிறந்த நண்பர் அல்லது மோசமான எதிரி, வெடுவெடுவென இருத்தல், நுண்உணர்திறன், அந்தணர்கள் (அறிஞர்கள்) நீர்த்தன்மை அடையாளம்.

தனுசு: தொடைகள், அரசு நிர்வாகங்கள், வக்கீல்கள், அரசு அலுவலகங்கள், விமானம், வீழ்ச்சி, சிதறியுள்ள அல்லது சிதறிபோகும் தன்மை, முடி, தசை, ஆழமான கண்கள், நேர்மை, திறமையான நடத்தை, நற்பண்பு, நடைமுறையை மீறவும் வழிகாட்டுபவர், சூதாட்டக்காரர், ஷத்திரியர்கள் (வீரர்கள்) அக்கினி அடையாளம்.

மகரம்: முழங்கால்கள், சதுப்பு நிலங்கள், தண்ணீரால் இடங்கள், முதலைகள், மிருகங்கள், புதர்கள்,  மெல்லிய அல்லது எளிய தோற்றம், பழைய கட்டிடம், நீண்ட கழுத்து, முக்கிய பற்கள், நகைச்சுவை, நேர்த்தியவாதி, நோயாளி, அமைப்பாளர், நடைமுறைக்கேற்றவர், இரகசியம், எச்சரிக்கையாக இருப்பது, வைசியர்கள் (வர்த்தகர்கள்) பூமியின் அடையாளம்.

கும்பம்: கணுக்கால், கால்கள், தொண்டு, தத்துவம், உயரமானவர், எலும்பு, சிறிய கண்கள், மலை வாசஸ்தலம், வசந்த காலம், தண்ணீர் இடங்கள், ஒழுங்கமைவு இல்லாத பற்கள், கரடுமுரடான முடி, கடினமாக உழைக்கும் தன்மை, ஞானி, நேர்மையானவர், சூத்திரர்கள் (தொழிலாளர்கள்) காற்று அடையாளம்.

மீனம்: கால்கள் பாதங்களும், சமுத்திரங்கள், கடல்கள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், துறவி, குட்டை, குண்டாக இருப்பது, பெரிய கண்கள், பெரிய புருவம், உள்ளுணர்வு, வாயாடி அதிகமாக பேசுவது, சோம்பேறி, உணர்ச்சிவசப்பட்டவர், பயந்த சுபாவம், நேர்மை, தயக்கம், அந்தணர்கள் (அறிஞர்கள்) நீர்த்தன்மை அடையாளம்.


ஷத்திரியர்கள் (வீரர்கள்), அந்தணர்கள் (அறிஞர்கள்), சூத்திரர்கள் (தொழிலாளர்கள்), வைசியர்கள் (வர்த்தகர்கள்) இந்த பிரிவுகள் இங்கே காணப்படுவதன் நோக்கம் பிறப்பின் அடிப்படையிலான பேதத்திற்க்காக அல்ல அந்த இராசியின் செயல்களின் அடிப்படையான பேதமே நமது ஆதி ரிஷிகளும் இதை செயல்களின் அடிப்படையில் தான் பிரித்தார்கள் அவர்கள் மனிதர்களை பிரிக்கவில்லை மனித தன்மை மட்டுமே பிரித்தார்கள் அதாவது சுபாவத்தின் அடிப்படையில் பிரித்தார்கள்.




பெண் கார்த்திகை 1 ஆம் பாதம் - ஆண் பூசம் - நட்சத்திர பொருத்தம்...

பெண் கார்த்திகை 1 ஆம் பாதம் - ஆண் புனர்பூசம் - திருமணப் பொருத்தம் நட்சத்திர பொருத்தம்...
முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரத்திலிருந்து - ஆணின் பூசம் நட்சச்திரம் வரை எண்ண 6 ஆக வருவதால்  தினப்பொருத்தம் உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்

இதில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் ராக்ஷஸ கணம் - ஆணின் பூசம் நட்சத்திரம் தேவ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் இல்லை.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் முதல் ஆணின் பூசம் நட்சச்திரம் வரை எண்ண 6 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் முதல் ஆணின் பூசம் நட்சச்திரம் வரை எண்ண 6 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இல்லை.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் மிருகப் பிரிவு ஆடு ஆகும் - ஆணின் பூசம் நட்சச்திரம் மிருகப் பிரிவு ஆடு ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மேஷ இராசி ஆகி ஆண் கடகம் இராசி ஆனால் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 4 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ஆண் இருவரும் மேஷ இராசி கடக இராசி ஆனாலும் இருவரின் இராசி அதிபதிகள் செவ்வாயும் சந்திரனும் தங்களுக்குள் நட்பு உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

மேஷ இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் சிம்மம், விருச்சிகம். இதில் பெண் ஆண் இருவரும் மேஷ இராசி, கடக  இராசியாக வருவதால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் வயிறு ரஜ்ஜூ - ஆணின் பூசம் நட்சச்திரம் தொடை ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் கார்த்திகை நட்சச்திரமும் - ஆணின் பூசம் நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் கார்த்திகை நட்சத்திரம் சிலேத்தும நாடி ஆகும் - ஆணின் பூசம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறு நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் கார்த்திகை நட்சத்திரம் பால் இருக்கும் வகை - ஆணின் பூசம் நட்சத்திரம் பால் இருக்கும் வகை பெண் பால் மரமாகவும் ஆண் பால் இருக்கும் வகை ஆனதால் விருட்ச பொருத்தம் உண்டு.

பெண்ணின் கார்த்திகை 1ஆம் பாதம் நட்சத்திரமும் - ஆணின் பூசம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  7 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் சம அளவில் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் மத்திமம் (சமமான பொருத்தம் உள்ளது) என்பதால் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஆராய்ந்து பார்த்து தான் மேல் முடிவுக்கு வரவேண்டும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 



Powered by Blogger