Identifying characteristics of Guru - குருவின் தன்மைகள், குரு பார்க்க கோடி நன்மை விளக்கம்…
குரு - வியாழன், ப்ரஹஸ்பதி, தேவகுரு, பரவித்யாதரன்
என்றெல்லாம் அழைக்கபடும் குரு பகவான் வேதஜோதிடத்தின் படி ஞானக் களஞ்சியமாக
திகழ்பவர், வேத வித்தகன், பெரிய அறிவாளி, பிரார்த்தனை அல்லது பக்தியின் காரகன், இவரின் எண்ணங்களே கடவுளர்களின் செயலாகும் என்று வேதஜோதிடம் குருவை
சிறப்பிக்கும்.
இன்னும் சொல்வதானால் வியாழன் என்ற பெரிய கோளைத் தான்
நாம் குரு அறிவிக்கிறோம், குரு
என்பது உயரிய,
பெரிய, கனமான
பளுவான என்றும் அர்த்தபடுகிறது, இது
அக புற அறிவுக்கு மிக முக்கியத்துவம் தரப்படுகிற கிரகம், மேலும் குரு ஏன்றால் ஆன்மீக ஆசிரியர், ஆசான், மரியாதை தரதக்கவர், பரந்த உணர்வு மற்றும் அறிவு இருக்க்கூடியவர், கு + ரு = குரு ஆனது இதில் ’கு’ என்றால் உயர்ந்த மேம்பட்ட என்று பொருள் ‘ரு’ என்றால் வழிகாட்டி
என்று பொருள் அதாவது உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுபவர் என்று பொருள், ஒருவருக்கு மிக நல்ல நிலையில் இருந்தால்
மோட்சத்துக்கு வழிகாட்டி கூட்டிப்போகிறவரும் இவரே.
குரு பகவானை வேதஜோதிடம் புத்திர காரகன், தன காரகன், குடும்ப காரகன் என்று அழைக்கும், வியாழன் மிகப்பெரிய கோள் என்பதால் சூரியனில் இருந்து வரும் அதிகமான ஆற்றலை
கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் பெற்ற கிரகம் அதனால் ஒளி பொருந்திய கிரகம் இதை
வேதஜோதிடத்தில் ப்ரம்மாவின் மகன் ஆங்கீரசின் அவரின் மகன்களில் ஒருவரே ப்ரஹஸ்பதி
அதனால் ஆங்கீரிசர் என்பவர் அக்னியை விட ஒளி பொருந்தியவர் என்று வர்ணிக்க படுபவர்
அவரின் மகன் என்பதால் குரு பகவானும் ஒளி பொருந்தியவர் ஒருவருக்கு மிக நல்ல
நிலையில் இருந்தால் அந்த ஜாதகரும் ஒளி
பொருந்தியவராக இருப்பார்.
இவருக்கு உரிய அதி தேவதையாக பிரம்மா, தட்சிணாமூர்த்தி சுட்டிகாட்ட பட்டுள்ளது எனவே
இவரும் சாந்தமான குணம் படைந்தவர் அதே போல் இவரின் பலத்துடன் பிறந்த ஜாதகர்களும்
சாந்தமான குணம் படைந்தவராக இருப்பார்கள், பொதுவாக வியாழன் லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு பெறக்கூடாது மேலும் தனது நட்பு கோள்கள் ஆன சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்களுக்கும் 6,8,12ல் இருக்க கூடாது அதிலும் குறிப்பாக
சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருக்க
கூடாது, ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடம் சஞ்சரிப்பார், திசா புத்திக் காலம் பதினாறு ஆண்டுகள், ஆட்சி பெறும் ராசி தனுசு, மீனம், நீசம் பெறும் ராசி மகரம், உச்சம்
பெறும் ராசி கடகம், மூலதிரி கோணம்
பெறும் ராசி தனுசு ஆகும்.
ஒரு ஞானகுரு தன்னிடம் ஞான உபதேசம் பெற வரும்
ஜீவன்களுக்கு பலவிதமான தீட்சை மூலம் அந்த அருளை பொழிவார் என்பது சாஸ்திரம் அப்படி
வழங்கபடும் தீட்சைகளில் நயன தீட்சையும் முக்கியமான ஒன்று அதாவது தீட்சை என்றால்
அறியாமையை சுட்டிகாட்டி அதை விளக்கி மெய்யறிவை சுட்டிக்காட்டி அதற்கு அழைத்து
செல்லுதல் என்று பொருள், நயன தீட்சை
என்றால் அதை கண்களின் மூலமாக அவர் உபதேசம் பெற வரும் ஜீவன்களுக்கு பார்த்தே அருள்
கொடுக்கும் நிலைக்கு நயன தீட்சை என்று பெயர் மிகவும் சிறப்பு பெற்ற தீட்சை இது, ஜோதிடத்திலும் கிரக பார்வைகள் உண்டு, கிரக பார்வை என்றால் என்ன
மற்றும் அதை பற்றி விளக்கமும் விரிவாக பின்னே ஒரு வாய்ப்பு அமைந்தால் எழுதுகிறேன்,
அதில் குரு பகவான் தான் இருக்கும் ஸ்தானத்தில் இருந்து 5,7,9 ஆம் ஸ்தானங்களை பார்வை செய்வார், அவர் ஜாதகத்தில் சுப குருவாக இருந்தால் அதாவது
மேலே சொன்னது போல் அது ஒரு அருள் பார்வை என்றே சொல்ல வேண்டும் அது ஒருவரின்
தோஷங்களை குறைக்கும், துன்பங்களை
குறைக்கும், நன்மைகளை அதிகரிக்கும், சமயத்தில் வந்து காப்பாற்றும் மிக உன்னத
நிலைகளை காட்டிக்கொடுக்கும்.
சரி அதை பற்றி சற்று விரிவாகவும்
பொதுவான பலன்களையும் 12 ஸ்தானங்களுக்கும்
காண்போம் : -
மிதி -
குருவின் பார்வை பலமானது 7ஆம் பார்வைக்கு 100% முழுபார்வை
பலமும், 5 மற்றும் 9ஆம் பார்வைக்கு 65% பார்வை பலமும் ஏற்படும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "Identifying characteristics of Guru - குருவின் தன்மைகள், குரு பார்க்க கோடி நன்மை விளக்கம்…"
கருத்துரையிடுக