நண்பன் எப்போதும் நண்பனும் அல்ல - பகைவன் எப்போதும் பகைவனும் அல்ல…

நண்பன் எப்போதும் நண்பனும் அல்ல - பகைவன் எப்போதும் பகைவனும் அல்ல

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். - குறள் 785:

பொருள் - நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

ஜோதிடத்தில் நவகிரங்களில் இராகு - கேது மட்டுமே வலமிருந்து இடமாக சுற்றும் அதை தவிர உள்ள சப்த கிரகங்கள் இடமிருந்து வலமாக சுற்றும் அப்படி சுற்றும் நவகிரகங்களில் ஒருவருக்கு ஒருவர் நட்பு (Friends), சமம் (Nuetral ), பகை (Enemies) என்று உறவுகளுக்கு தன்மை கொடுத்து பிரித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள் அப்படி பிரித்திருந்தாலும் சில ஸ்தான இடைவெளிகளில் இரு கிரகங்கள் வந்து சேரும் போது இந்த உறவுகளுக்குகான தன்மை சற்று மாறுபடும்

அதாவது தற்காலிக நட்பு  Temporary Friend Relationship, இயற்கை நட்பு உறவு – Natural Friend Relationship, அதி நட்பு உறவு – Strong Friend Relationship, சம உறவு - Nuetral Relationship, தற்காலிக சம உறவு - Temporary Nuetral Relationship, பகை உறவு - Opponent Relationship, அதி பகை உறவு - Strong Opponent Relationship போன்ற உறவுமுறை பேதங்களை இரு கிரகங்கள் அமைந்துள்ள ஸ்தான இடைவெளிகளினாலும் பெறுவது உண்டு

இதை விளக்கி சொல்வதற்கு முன் பஞ்சாங்கம் காட்டும் நவகிரகங்களின் உறவுமுறை பேதங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த அட்டவணை

English -  The differences of relationship between Nine planets on table


இப்படி நவகிரகங்களின் உறவுமுறை பேதங்களை பிரித்திருந்தாலும் ஒரு கிரகம் இருக்கிற ராசியிலிருந்து 2,3,4,10,11,12 ஆம் ஸ்தானத்தில் வேறு ஒரு கிரகம் இருந்தால் அந்த இரு கிரகங்களும் தங்களுக்குள்
பகை உறவுமுறை இருந்தால் = சம உறவுமுறை ஆகும்
சம உறவுமுறை இருந்தால் = நட்பு உறவுமுறை ஆகும்
நட்பு உறவுமுறை இருந்தால் = அதி நட்பு உறவுமுறை ஆகும்.

ஒரு கிரகம் இருக்கிற ராசியிலிருந்து 1,5,6,7,8,9 ஆம் ஸ்தானத்தில் வேறு ஒரு கிரகம் இருந்தால் அந்த இரு கிரகங்களும் தங்களுக்குள்
பகை உறவுமுறை இருந்தால் = அதி பகை உறவுமுறை ஆகும்
சம உறவுமுறை இருந்தால் = பகை உறவுமுறை ஆகும்
நட்பு உறவுமுறை இருந்தால் = சம உறவுமுறை ஆகும்.

இதை ஒரு உதாரணமாக சொன்னால் சற்று விளங்கும் அதாவது சனி பகவானுக்கு சுக்கிரன் இயற்கை நட்பு உறவு கிரகம் ஒருவர் மகர லக்னம் ஜாதகத்தில் சனி பகவான் துலாத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவர் ஜாதகத்தில் மகரத்தில் சுக்கிரன் இருந்தால் சனியிலிருந்து சுக்கிரன் அமைந்துள்ள ஸ்தானம் 4 ஆம் ஸ்தானம் அப்படியானால் மேலே சொன்ன தன் படி சனி பகவானுக்கு சுக்கிரன் இயற்கை நட்பு உறவுமுறை மேலும் வலுபட்டு அதி நட்பு உறவுமுறை ஆகும்,

இதே ஜாதகத்தில் மகரத்தில் சுக்கிரன் இல்லாமல் கும்பத்தில் இருந்தால் சனியிலிருந்து சுக்கிரன் அமைந்துள்ள ஸ்தானம் 5 ஆம் ஸ்தானம் அப்படியானால் மேலே சொன்ன தன் படி சனி பகவானுக்கு சுக்கிரன் இயற்கை நட்பு உறவுமுறை மேலும் குறைவு பட்டு சம உறவுமுறை ஆகும்இவ்வாறாக கண்டு மற்ற அமைப்பையும் புரிந்து கொள்ள வேண்டும் நாம் அடிக்கடி சூட்சம பலம் பலவீனங்கள் ஜாதகத்தில் உண்டு என்று சொல்லிவந்துள்ளேனே அதில் இதுவும் ஒன்று இவைகள் போல இன்னும் சூட்சம பலம் பலவீனங்கள் உண்டு.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "நண்பன் எப்போதும் நண்பனும் அல்ல - பகைவன் எப்போதும் பகைவனும் அல்ல…"

கருத்துரையிடுக

Powered by Blogger