12 இராசிகளின் பஞ்சபூத தத்துவங்கள் மற்றும் அது வெளிபடுத்தும் பண்புகள்…


12 இராசிகளின் பஞ்சபூத தத்துவங்கள் மற்றும் அது வெளிபடுத்தும் பண்புகள்


ஜோதிடம் வளர்ந்த நம்முன்னோர்கள் ரிஷிகள் ஆகியோர்கள் உலகமும் பிரபஞ்சமும் எப்படி பஞ்சபூதங்களால் ஆனதோ அது போலவே நமது உடலும் பஞ்சபூதங்களால் ஆனது என்று உரைத்தார் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்றார்கள் அதன் படி 12 இராசி நட்சத்திர சுற்றுக்களையும் 12 இராசிக்கூறுகளாக வகுத்து தந்துள்ளனர் அந்த 12 இராசிப் பிரிவுகளுக்கும் பஞ்சபூத தத்துவங்களின் படியும் பிரிவு செய்து வைத்துள்ளனர் இது உடல் மன இயக்கங்களின் கூட்டமைவை காட்டும் விதமாக இந்த 12 இராசிகளும் உள்ளன அதில் நவகிரகங்களின் நகர்வை வைத்து தான் ஒரு தனிமனிதரின் உடல் மன இயக்கங்களை காண உதவும் விதமாக பிரிவு செய்து வைத்துள்ளனர்.
இந்த பஞ்சபூதங்கள் என்பது நெருப்பு (தீ), நிலம், காற்று, நீர், ஆகாயம் என்னும் ஐந்தாகும். இதை 12 இராசிகளுக்கு பொருத்தி பார்ப்போம் ஆனால் 

பூமி - நிலம் - மண் (பிருதிவி) கூறு இராசிகள் = ரிஷபம், கன்னி மற்றும் மகரம் இராசிகள்
ஜலம் - நீர் - புனல் (அப்பு) கூறு இராசிகள் = கடகம், விருச்சிகம் மற்றும் மீனம்
இராசிகள்
அக்னி - நெருப்பு - அனல் (தேயு) கூறு இராசிகள் = மேஷம், சிம்மம் மற்றும் தனுசு இராசிகள்
கால் - காற்று - கனல் (வாயு) கூறு இராசிகள் = மிதுனம், துலாம் மற்றும் கும்பம்

ஆகாயத்தின் கூறு அண்ட வெளியிலே மறைந்துள்ளது இருந்த போது ஆகாயத்தின் கூறு இராசிகளுக்குள் சற்று அதிகபட்டு காணும் இராசிகளாக நான்கு இராசிகள் உள்ளன 
வெளி - வானம் - விசும்பு (ஆகாயம்) = மிதுனம் (காற்று+ஆகாயம்), தனுசு (நெருப்பு+ஆகாயம்), மீனம் (நீர்+ஆகாயம்), கன்னி (நிலம்+ஆகாயம்) என இந்த நான்கு இராசிகளிலும் ஆகாயத்தின் கூறு சற்று அதிகமாக காண்பதாக உள்ளது.

சரி இதெல்லாம் இருக்கட்டும் இதனால் நான் அறிந்து கொள்ள என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றாலாம் இதில் விஷயம் இருக்கிறது ஆம் இதில்

  1. உங்களது லக்னம் இருக்கும் இராசி
  2. லக்னாதிபதி இருக்கும் இராசி
  3. சந்திரன் இருக்கும் இராசி
  4. இராசியாதிபதி இருக்கும் இராசி
  5. சந்திரன் சாரநாதன் இராசி
இவைகளில் அதிகமாக எந்த பஞ்சபூதத்தின் தத்துவ இராசியாக இருக்கின்றனவோ அதன் தாக்கம் அதாவது உங்கள் வாழ்க்கையின் உளவியல் ரீதியான உங்களின் கட்டமைப்பை முக்கியமாக தீர்மானிக்கும் அம்சங்களாக இந்த பஞ்சபூத தத்துவங்கள் உள்ளன


2 Response to "12 இராசிகளின் பஞ்சபூத தத்துவங்கள் மற்றும் அது வெளிபடுத்தும் பண்புகள்…"

  1. super

    நலல தரமான ஆய்வுக் கருத்துக்கள். தொடரட்டும் உங்கள பணி.

கருத்துரையிடுக

Powered by Blogger