ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 14 - ருசக யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 14 - ருசக யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


ருசக யோகம்
செவ்வாய் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி (சொந்த வீட்டில்), உச்சம் பெற்று அமர்ந்தால் ருசக யோகம் ஏற்படும், ஜென்ம லக்னத்திற்கு திரிகோண கேந்திரங்களில் ஆட்சி பெறும் செவ்வாய் பகவான் சனி, இராகு, கேது ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து அமராமல் இருந்தால் இந்த யோகம் பாதிக்கபடாமல் இருக்க உதவும்.

இதன் பலன்கள் -
பஞ்ச மஹா புருஷ யோகங்களில் இதுவும் ஒன்று இந்த யோகத்தில் பிறந்த நபர் பிரபலமானராக,  வலுவான உடலமைப்பு உள்ளவராக, தகவல் விஷயங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக, திறமையான போட்டியாளர், விடா முயற்சி உடையவராக, ஸ்தபன தந்திரங்கள் அறிந்தவராக, விவேகி, செல்வந்தர், தலைவர் ஆக இருப்பார்.

ருசக யோகம் ஒரு வகை உதாரண படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 14 - ருசக யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger