ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 13 - சச யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 13 - சச யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


சச யோகம்
சனி ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி (சொந்த வீட்டில்), உச்சம் பெற்று அமர்ந்தால் சச யோகம் ஏற்படும், ஜென்ம லக்னத்திற்கு திரிகோண கேந்திரங்களில் ஆட்சி பெறும் சனி பகவான் சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து அமராமல் இருந்தால் இந்த யோகம் பாதிக்கபடாமல் இருக்க உதவும்.

இதன் பலன்கள் -
பஞ்ச மஹா புருஷ யோகங்களில் இதுவும் ஒன்று, நல்ல ஊழியர்கள், கிராம நகரத்தில் தலைமை பொறுப்புகளில் உயர்வது, பொது மரியாதையை, கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கும் புகழுக்கும் வருபவர், நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை சேர்ப்பவர், தீர்க்காயுள் உள்ளவர், சட்டத்திற்கு உட்டபட்டும் சட்டத்திற்கு புறம்பாகவும் இருவழிகளிலும் வருமானம் ஈட்டத் தெரிந்தவர்.
சசயோகம் ஒரு வகை உதாரண படம்
 



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 13 - சச யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger