டாம் குரூஸ் (Tom Cruise) ஜாதகம் கணிப்பு - சவால்களின் ஹீரோ, வசூல்ரீதியான வெற்றி நாயகன்…


டாம் குரூஸ் (Tom Cruise)  ஜாதகம் கணிப்பு -  சவால்களின் ஹீரோ, வசூல்ரீதியான வெற்றி நாயகன்…

அமெரிக்க நடிகரான இவரை தெரியாத ஹாலிவுட் பட ரசிகர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவர் உலகின் மிகுந்த செல்வாக்குள்ள பிரபலங்களில் நபராக வரிசைப்படுத்தபடும் ஒருவர்,  கோல்டன் குளோப் விருதுகளை மூன்று முறை வென்றிருக்கின்றார் இவர் தனது அதிரடிப்படங்களான மிஷன்: இம்பாசிபிள் (Mission: Impossible) தொடர் வரிசை படங்களிள் மிகப்பிரபலமாக அறிய பட்டவர், மேலும் இவர் பில்லியன் டாலரில் எடுக்கப்படும் திரைப்படத் தயாரிப்பாளர் கூட இவரின் ஜாதகம் மூலமாக ஆபத்தான சவால்களை எதிர்கொள்ளும் துணிவு, வசூல்ரீதியான வெற்றி பட நாயகனாக திகழும் நிலை ஆகியவற்றை பார்ப்போம்.
டாம் குரூஸ் (Tom Cruise)  ஜாதகம்


முதலில் தைரியம், துணிவு, சாவல் ஏற்கும் திறன்கள், ஆபத்தான விஷயங்களில் ஈடுபடும் பகட்டான துணிவு இவைகளுக்கு எல்லாம் காரகத்துவம் பெற்றவர் செவ்வாயும் சூரியனும் அதுபோக லக்னத்திற்கு 3,6,10 ஆம் ஸ்தானாதிபதிகளும் மிகவும் முக்கியமாக இப்படியான வீரதீரத்தை காட்டுபவர்கள், இவரின் ஜாதகத்தில் 3க்குடைய சூரியன் லக்ன கேந்திரம் ஏறி பலவானாக பிறப்பதற்கு உதவியுள்ளார் மேலும் திருவாதிரை 4 பாதம் வாங்கி 10க்குடைய குருவின் வீட்டில் அவருடன் சேருகிறார், 6 க்குடைய செவ்வாய் 12ல் அமர்ந்து 3ஆம் வீட்டையும் தனது சொந்த 6ஆம் வீட்டையும் பார்த்து வலுசேர்க்கிறார், 10க்குடைய குரு 9ல் அமர்ந்து 3ஆம் வீட்டையும் பார்வை அளிக்கிறார் ஆக 3,6,10 ஆம் ஸ்தானாதிபதிகள் ஒன்றுக்கொன்று ஏதோ ஒருவகையில் வலுவாக பிண்ணி பிணைந்துள்ளது மேலும்

இதற்கு வலுசேர்க்கும் விதமாக இவரின் ஜாதகத்தில் லக்னமும் லக்னாதிபதி புதனும் ஆகிய இரண்டும் செவ்வாயின் சாரமான மிருகசீரிடம் நட்சத்திரமும் பெற்றுள்ளதால் ஆக்ஷன் அதிரடிப்படங்களிலில் தன் வீரதீர ரிஷ்க் காரணமாக உலக பிரபலமானார்.

ஜாதகத்தில் 3க்குடைய சூரியன் லக்ன கேந்திரம் திருவாதிரை நட்சத்திரத்தில் இருப்பது ஒருபுறம் நல்லது என்றாலும் மறுபுறம் தீமையானது அதுபோக பாதகாதிபதி குரு லக்னத்தை பார்ப்பது மேலும் லக்னாதிபதி புதன் 12ல் மறைவது என பலக்காரணங்களால் டாம் குரூஸ் குழந்தை மற்றும் வளர்இளம்பருவங்களில் பாலியல் வன்முறை, தந்தை மற்றும் பிறரால் கொடுமைப்படுத்துதல் போன்ற துயரங்களுடன் ஏழ்மையும் அவரை வாட்டியது இதை எதற்கு சொல்கிறேன் என்றால் விதிக்கு யாரும் தப்ப முடியாது அதே நேரத்தில் அந்த விதி தான் ஒருவரை செம்மை படுத்தவும் செய்கிறது என்பதை அறியவே இதை எழுதியிருக்கிறேன்.

பிரபல திரைப்பட நடிகராக திகழ்வதற்கும், திரைப்படகலைகள் சம்பந்தப்பட்ட நடிப்புதுறையில் சிறந்து விளங்க சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்களும் அதுபோக லக்னத்திற்கு லக்னம் 2,5,7,9 ஆம் ஸ்தானாதிபதிகளும் மிகவும் முக்கியமாகும் இதை சற்று விளக்கமாக கூறுவதானால்
லக்னம் = முகப்பொலிவு, தோற்றம்
2 ஆம் ஸ்தானம் = கண் அழகு, வசனங்களை சொல்லும் விதம்
5 ஆம் ஸ்தானம் = நடிப்பு ஆளுமை திறன்
7 ஆம் ஸ்தானம் = திரைப்படம் ஒரு கூட்டுக்கலை அதனால் இதில் மற்றவர்களிடமிருந்து வரும் ஒத்துழைப்பு
9 ஆம் ஸ்தானம் = திரைப்பட புகழ் அதிர்ஷடம் வெற்றி

இவரின் ஜாதகத்தில் 2 ஆம் ஸ்தானாதிபதி 2ல் ஆட்சி பலம் அடைகிறார், 2ல் சந்திரனுடன் 5க்குடைய சுக்கிரனும் உடன் சேருகிறார் அவர் புதனின் நட்சத்திரமும் பெற்றுள்ளார், 7க்குடைய குரு 9ல் அமர்க்கிறார் நவாம்சத்தில் ஆட்சி பலம் அடைகிறார் மேலும் 9ல் அமர்ந்த குரு லக்னம், 5 ஆம் வீட்டையும் பார்வை பலம் அளிக்கிறார், 9ஆம் ஸ்தானாதிபதி சனி 8ல் ஆட்சி பலம் அடைகிறார் சனி 8ல் அமர்வது ஆயுளுக்கு நல்லது இதெல்லாம் போக சந்திரனும் சுக்கிரனும் தசவர்க்க கட்டங்கள் சுமார் 5 கட்டங்களுக்கு மேல் ஆட்சி, உச்ச பலம் அடைகிறார் அதனால் வர்க்கோத்தம யோகம் பெற்றுள்ளது அதாவது வர்க்கோத்தம பலம் பெறுவதன் மூலமாக சந்திரனும் சுக்கிரனும் வெறும் மேலொட்டமான பலத்தை தண்டி ஆழமான பலத்தை பெறுகிறார்கள்.

10ஆம் ஸ்தானத்திற்கு 11ல் சனி ஆட்சி பலம் அடைவதும் லக்னத்திற்கு 2ல் அதாவது 10ஆம் ஸ்தானத்திற்கு 11ல் 5ல் சந்திரன் ஆட்சி பலம் அடைவதும் என இக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்வை பலம் அளிப்பதாலும் நடிப்பது மட்டும் அல்லாமல் திரைப்படத் தயாரிப்பிலும் வெற்றி காண்கிறார்.

சுக்கிரன் இருக்கும் நட்சத்திரமான லக்னாதிபதியான புதனின் திசையில் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆகிறார் அதே புதனின் திசையில் பல வெற்றித் திரைப்படங்கள் கொடுத்து டாம் குரூஸ் முக்கிய பிரபலமானார், சந்திரனின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்த கேதுவின் திசையில் பல அதிரடித் திரைப்படங்கள் அதாவது அவரது முக்கிய வெற்றிப் படங்களான மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்கள் வந்து வென்றன, சுக்கிரனின் திசையில் பலவிருதுகளின் நாயகன் ஆனார் புதனின் சாரத்தில் அமர்ந்த சுக்கிரனால் 2006 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று, போர்ஃபஸ் பத்திரிகை 'பிரபலங்கள் 100' பட்டியலை வெளியிட்ட அதில் மிகவும் ஆற்றல்மிக்க பிரபலங்களின் பட்டியல் டாம் குரூஸ் உயர்ந்த இடத்தில் இருந்தார்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "டாம் குரூஸ் (Tom Cruise) ஜாதகம் கணிப்பு - சவால்களின் ஹீரோ, வசூல்ரீதியான வெற்றி நாயகன்…"

கருத்துரையிடுக

Powered by Blogger