ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 7 - புதாத்தியாய யோகம், மகாபுருஷி யோகம்...
ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும்
பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும்
என்பது ஞாபகம் இருக்கட்டும்.
புதாத்தியாய யோகம்
சூரியன் புதன் சேர்ந்திருந்தால் இந்த புதாத்தியாய யோகம் ஏற்படும் என்று
பொதுவாக சொல்லபட்டாலும் இந்த யோகம் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் சூரியனும்
புதனும் லக்னத்திற்கு 3,6,10,11 ஆம்
ஸ்தானங்களில் இருந்து இந்த இரண்டு கிரகங்களில் ஏதேனும் ஒன்று ஆட்சி,உச்சம், சுயசாரம் அடைந்திருந்தால் இந்த யோகம் முழுமையாக கிடைக்கும், அதில் புதன் சூரியனால் அஸ்தங்கம் ஆனால் பாவ
புதன் ஆனால் நன்மையும் சுப புதன் ஆனால் தீமையும் ஏற்படும்.
இதன் பலன்கள் -
மிகவும் நுண்ணறிவுள்ளவர், அனைத்து திறன்களையும் வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர், தனி படைப்புகள் செய்யும் திறமை பெற்றவர், நல்ல புகழ், பொது சபைகளில் தனிப்பட்ட மரியாதை மற்றும் அனைத்து வசதிகளும் பெறுதல், திறமைக்கு ஏற்ற வளர்ச்சி, மகிழ்ச்சியான
வாழ்க்கை ஆகியவை ஏற்படும். எழுத்தாற்றல், கணித
ஆற்றல், திட்டமிடும் தீட்டு திறன்கள் இவைகள் சிறப்பாக
வரும்.
புதாத்தியாய யோகம் உதாரணப் படம்
புதாத்தியாய யோகம் உதாரணப் படம்
மகாபுருஷி யோகம்
இதன் பலன்கள் -
அந்த பெண் நல்ல குணவதியாகவும், பெண்ணிற்க்கே உண்டான அனைத்து பண்புநலன்களை பெற்றவாளாக இருப்பாள் அதாவது
தாய்மை, கருணை, அரவணைப்பு, பொறுமை, ஆதரவு தரும்
சீர்மிகு பெண்ணாக திகழ்வாள்.
மகாபுருஷி யோகம் உதாரணப் படம்
மகாபுருஷி யோகம் உதாரணப் படம்
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 7 - புதாத்தியாய யோகம், மகாபுருஷி யோகம்..."
கருத்துரையிடுக