உங்கள் லக்னம் சரமா?, ஸ்திரமா?, உபயமா?...

உங்கள் லக்னம் சரமா?, ஸ்திரமா?, உபயமா?...

நம் ஜோதிட ரிஷிகள் 12 இராசி மண்டலங்களாக நம் அருகில் இருக்கும் வான்வெளியை பிரித்துள்ளனர் அதில் ஒருவர் இந்த பூமியில் முதல் முதலாக சுயமாக சுவாசம் எடுக்கும் அதாவது பிறக்கும் நேரத்தை வைத்து அந்த நேரத்தில் சூரியன் 12 இராசி மண்டலங்களில் எந்த இராசி எந்த நட்சத்திர பாததில் அந்த மைய கதிர்வீச்சு விழுகிறதோ அதையே அந்த ஜாதகரின் லக்ன புள்ளியாக கருதுகிறார்கள் அப்படி அமைகிற 12  இராசி லக்கின புள்ளிகளையும் பலவகைகளில் பிரித்துவைத்துள்ளனர் நம் ஜோதிட ரிஷிகள் அதில் முக்கிய பிரிவு இந்த சரம், ஸ்திரம், உபயம் என்ற பிரிப்பு இதனால் உண்டாகும் வித்தியாசபலன்களை பார்ப்போம்.

சர லக்கினங்கள் - மேஷம், கடகம், துலாம், மகரம் போன்ற இராசி மண்டலங்கள்
ஸ்திர லக்கினங்கள் - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற இராசி மண்டலங்கள்
உபய லக்கினங்கள் - மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் போன்ற இராசி மண்டலங்கள்
சரராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் -
துறுதுறுவென இருப்பார்கள், உற்சாகத்துடன் இருப்பார்கள், வேகமாக இயங்கக்கூடியவர்கள், எதையும் ஆர்வமாக அணுக கூடியவர்கள், தனாக சென்று பொறுப்புகளை எடுக்கும் பண்பு உள்ளவர்கள், தேவைபட்டால் மட்டுமே கடுமையாக உழைக்க கூடியவர் பெரும்பாலும் வேலை வாங்கவே நினைப்பார்கள், சுதந்திர மனப்பான்மை உள்ளவர், தைரியம் மிக்கவர்கள், தகுதிகளை வளர்த்துக் கொள்ளக் கூடியவர்கள், செயலைத் திறமையால் புகழடைவார்கள், அழகுணர்ச்சி அதிகம் உள்ளவர்கள், காதல் விவகாரங்களில் சீக்கிரம் விழுவார்கள், வாழ்க்கையை அனுபவித்து வாழ விரும்புவார்கள்.

ஸ்திரராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் -
கடுமையாக உழைக்க கூடியவர், குடும்ப பாசம் அதிகம் உள்ளவர்கள், படைப்பாற்றல் மிக்கவர்கள்,  தனிமையை விரும்புபவர்கள், தீர்க்கமாக யோசிக்க கூடியவர்கள், நிறுவனங்களில் உள்ள வேலைகளில் உயர்ந்த இடத்தை பிடித்து வாழ்க்கையில் செட்டிலாக முயற்சிக்க கூடியவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், உறுதி கொள்கை பிடிப்பு உள்ளவர்கள், வாழ்க்கையில் படிப்படியாகச் சென்று போராடி வெற்றியை அடைவார்கள், ஒரு முடிவெடுத்து விட்டால் அவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ள மாட்டார்கள், தன்னை ஒரு ராஜா போல் கருதும் மனபான்மை உள்ளவர்கள், தன்னை பற்றி பிறரிடம் சொல்லாமல் மறைத்து வைக்கவே விரும்புவர்.


உபயராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் -
உதவிசெய்யும் மானபான்மை உள்ளவர்கள், நுண்கலைகள் கவின்கலைகளில் வல்லவர்கள், அடிக்கடி மாற்றங்கள் நிகழும், வளைந்து கொடுத்துச் செல்லக்கூடியவர்கள், எதையும் அறிவால் சமாளிக்க முயற்சிக்கூடியவர்கள், கருணையுள்ளம் இயல்பாக ஏற்படும், தனக்கு வேண்டும் என்றால் சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் சிந்திப்பார் தனக்கு வேண்டும் என்றால் சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறியும் சிந்திப்பார், ஆன்மீக நாட்டம் ஆன்மீக பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள், உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், பிடிவாதம் உள்ளவர்கள், தனக்கென்று தனி அடையாளம் உள்ளவர்கள், தற்சமயத்திற்கு தோன்றும் காரியங்களில் ஈடுபட்டுவிடுவர், பேசி சாமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.


0 Response to "உங்கள் லக்னம் சரமா?, ஸ்திரமா?, உபயமா?..."

கருத்துரையிடுக

Powered by Blogger