ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…
ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…
முதலில் ஒன்றை ஞாபகம்
வைத்துக்கொள்ளவும் உச்ச பலம் பெற்ற ஒரு கிரகம் தன் உச்ச பலத்தை செயல்படுத்த
முடியாத சில அமைப்புகளும், நீசம் அடைந்த ஒரு கிரகம் சில அமைப்புக்களால் சிறப்பான பலன்களை தருவதும் நம் அனுபவ உண்மை அதனால்
ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனிதனியாக தக்கவாரு அவைகள் மாறுபடும் தன்மை கொண்டவை எனவே
ஆட்சி, உச்ச பலத்தை ஒருவர்
அனுபவிக்க முடியாமலும் போகலாம் அல்லது குறைவாக அனுபவிக்கலாம், அல்லது அந்த முழுமையான திசா பலன்கள் இன்னும் வராமலும் இருக்கலாம்.
புதனின் ஆட்சி வீடு மிதுனம், கன்னி ராசி
புதனின் உச்ச வீடு கன்னி ராசி
ஜாதகத்தில் புதனின் ஆட்சி வீடான மிதுனம், கன்னி
ராசியில் அமர்ந்திருந்தால்
புதன் மிதுனத்தில் ஆட்சி ஆவதற்கும் கன்னியில் ஆட்சி ஆவதற்கும் வித்தியாசம்
நிறைய உள்ளது இருந்தாலும் பொதுவான அம்சங்களை மட்டும் இப்போது பார்போம், புதன் என்றாலே புத்திக்கூர்மை எனவே புத்திக்கூர்மை மிக்கவர், ஞாபக சக்தி அதிகம், பேச்சில் வல்லவர், பெரிய விஞ்ஞானி, மேதைகளாக
வருவார்கள், தன் திறமையால் பெரும் பொருட்கள்
சேர்ப்பார்கள், வியாபாரத்திலும் வல்லவர், வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்வார். கணிதம், ஜோதிடம், புத்தகம், விளம்பரம், எழுத்தாளர்,ஓவியம், சிற்பம்,தகவல் தொடர்பு, ஐ.டித்துறை போன்ற துறைகளில்
ஜோலிப்பார்.
தர்ம, காம, அர்த்த ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்குவார்கள், அறிவுசார்
நிர்வாகத் துறைகளில் மிளிர்வார், சாமர்த்தியசாலி, ஏதேனும் புதிய வித்தைகளில் கற்றுத்தேறுவார், வாதம்
விவாதங்களில் யாரும் இவரை வெல்லுவது கடினம், நகைச்சுவை உணர்வு, காதல் உணர்வும் மிக்கவர், சுக்ரனோடு சேரும் போது வலிமை மேலும் அதிகரிக்கும்.
ஜாதகத்தில் புதனின் உச்ச வீடான கன்னி
ராசியில் அமர்ந்திருந்தால்
புதன் கன்னியில் இருக்கும் போது உச்ச பலமும் பெறுகிறார் சாமர்த்தியசாலி
சூழலுக்கு ஏற்ற காரியங்களை செய்து வெற்றியும், புகழும்
பெறுவார், எத்தகைய கலைகள் மற்றும் திறன்களையும்
விரும்பினால் உடனே கற்றுக்கொண்டு விடுவார், புத்திக்கூர்மை
மிக்கவர், ஞாபக சக்தி அதிகம், சொற்பொழிவு, ஆராய்ச்சிகளில் ஆர்வம் உள்ளவர், தேவைப்பட்டால் ராஜதந்திரங்களை கடைபிடிக்க தெரிந்தவர், தன் திறமையால்
பெரும் பொருட்கள் சேர்ப்பார்கள், வியாபாரத்திலும்
வல்லவர், வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்வார். கணிதம், ஜோதிடம், புத்தகம், விளம்பரம், எழுத்தாளர்,ஓவியம், சிற்பம்,தகவல் தொடர்பு, ஐ.டித்துறை போன்ற துறைகளில் ஜோலிப்பார்.
வெறும்
பேச்சில் மட்டும் இல்லாமல் செயலிலும் ஜோலுப்பார், உத்திரம் நட்சத்திரத்தில் இருந்தால் அதிகாரம் செய்க்கூடிய பதவிகளில்
இருப்பார், சட்ட திட்டங்களை
இயற்றக்கூடியவராகவும் இருப்பார், ஹஸ்தம்
நட்சத்திரத்தில் இருந்தால் பகைதன்மை ஏற்படும் எடுக்கக்கூடிய முடிவுகளில்
தடுமாற்றம் ஏற்படும் அதனால் சில பாதிப்புகள் தரும், சித்திரை நட்சத்திரத்தில் இருந்தால் முன்கோபங்கள் அதிகமாக வரும் வம்பு
சண்டைகளுக்கு அஞ்சமாட்டார் அதனால் சில பாதிப்புகள்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…"
கருத்துரையிடுக