ஜாதகத்தில் பன்னிரண்டாம் வீடு சொல்லும் உண்மை என்ன?


நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானம் என்று பொதுவாக கூறப்படும், மறைவு ஸ்தானங்கள் என்று பொதுவாக 3,6,8,12 யை கூறினாலும் 3 ஆம் வீடு கால் மறைவு ஸ்தானமே 12 ஆம் வீடு பாதி மறைவு ஸ்தானமே, எனவே 12 ஆம் வீட்டை இருபாகங்களாக பிரித்தே பலன் அறிய வேண்டும்.

முதல் பாகமாக ஜாதகருக்கு கிடைக்கும் நிம்மதியான தூக்கம், அந்நிய நாட்டில் அமையும் தொழில், உத்தியோகம், நன்கொடைகள், அறக்கட்டளை சேவைகள், படுக்கை வசதிகள், இல்லற சுகம், பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம், மோட்சம், முக்தி, ஞானம் போன்ற நல்ல பலன்கள் ஒரு பாகமாகவும்.

இரண்டாம் பாகமாக இந்த 12 ஆம் விட்டை கொண்டு இந்த பிறவி ஜாதகர் செய்த கர்மாக்கள் பூரண வடிவம் பெறும் ஸ்தானமாகும் மேலும் மறுபிறவிக்கு தயார்படுத்தும் ஸ்தானமும் இதுவே எனவே பொதுவாக  கலியுகத்தில் மனிதர்கள் நிறைய பாவங்கள் செய்து வாழ வேண்டி நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த பாவங்களுக்கு இந்த பிறவியில் தண்டனையாக துன்பங்கள், நட்டங்கள், பிரிவுத்துயரம், உடல் கோளாறுகள்,  கள்ளதொடர்பு, நிம்மதியில்ல நிலை, தூக்கமின்மை, புலன்கள் செயலிழப்பு, உலகத் தொடர்பின்மை, இழப்பு, துயரம், நட்டம், இறப்பு நிகழும் விதம், மரண கால நோய், மருத்துவமனை வாசம் போன்ற தீய பலன்கள் விளைவதாக பன்னிரண்டாம் வீட்டை இரண்டாம் பாகமாகவும் வைத்து காண வேண்டும்.

காலபுருஷ தத்துவபடி பன்னிரண்டாம் வீட்டின் காரகத்துவ பெற்ற கிரகங்கள் சனி, புதன், குரு ஆகும் இவர்களும்  பன்னிரண்டாம் வீட்டின் அதிபதியும் லக்னத்திற்கு சுப காரகத்துவம் பெற்று ராசி, நவாம்ச, தசாம்சங்களில் நல்ல நிலையில் நின்றால் அவர்களுக்கு செலவுகள் குறைவாகவும், நிம்மதியான தூக்கம், படுக்கை வசதிகள், தாம்பத்திய சுகம் நன்றாக அமையும். மேலும் 12 ல் கேது இருந்தால் அடுத்த பிறவியில்லை என்று பொதுவாக சொல்வார் ஆனால் 12 ல் இருக்கும் கேது நல்ல நிலையில் நின்று அந்த கேது - சனி, குரு, சூரியன் போன்ற கிரங்களின் சாரம் அல்லது சுய சாரம் பெற்றால் தான் அடுத்த பிறவியில்லா அமைப்பு ஏற்படும், பன்னிரண்டாம் வீட்டை கொண்டு ஒருவர் இந்த பிறவியிலேயே முக்தி நிலையை எய்துவாரா அல்லது சிறந்த ஞான பக்குவம், ஞானிகள் அருள் கடாச்சம் போன்றவை இந்த பிறவியில் கிடைக்குமா போன்ற விஷயங்களை அறிந்து கொள்ளலாம் இவைகளை பின் பதிவுகளில் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.


பன்னிரண்டாம் வீட்டின் காரகத்துவங்கள் பார்போம் : -
செலவு
நஷ்டம்
இழப்பு
இடையூறுகள்
ஊதாரித்தனம்
அதிக வேலை
ஏமாற்றுதல்
குடும்பத்திலிருந்து பிரிவு
தூர தேச வாசம்
தூர தேச பயணம்
படுக்கை வசதிகள்
அவமானம்
மோட்ச ஸ்தானம்
மருத்துவ மனை வாசம்
விபத்துகள்
சிறை தண்டனை
தலைமறைவு
தற்கொலை
ரகசிய எதிரிகள்
ரகசிய நோய்கள்
ரகசிய வாழ்க்கை
ரகசிய துன்பம்
தப்பிச் செல்ல முயலுதல்
போதைப் பொருட்கள்
நிம்மதியான தூக்கம்
நன்கொடை
ஹிப்னாடிசம்(வசியப்படுத்தல்)
அயன சயன போக ஸ்தானம்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

2 Response to "ஜாதகத்தில் பன்னிரண்டாம் வீடு சொல்லும் உண்மை என்ன? "

  1. Unknown says:

    ஐயா நான் பிறந்த தேதி 22-11-1990, பிறந்த இடம் கோயம்புத்தூர் பிறந்த நேரம் 12:35:44 நள்ளிரவு பூராடம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளேன், எனக்கு கடைசி பிறவியாக என்று கூறுங்கள்

    Unknown says:
    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

கருத்துரையிடுக

Powered by Blogger