ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 2 - தேவ்திரிகோண யோகம், தர்மகர்மாதிபதி யோகம்...


ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


இந்த தொகுப்பில் தேவ்திரிகோண யோகம், தர்மகர்மாதிபதி யோகம் ஆகிவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவ்திரிகோண யோகம்

ஜோதிடத்தில் திரிகோண ஸ்தானங்கள் என்று கூறப்படுகின்ற லக்னம் என்ற 1 ஆம் வீடு, 5 ஆம், 9 ஆம் ஆகிய ஒரு திரிகோண ஸ்தானங்களை ஒன்று கூட விட்டு போகாமல் இராகு, கேதுவை தவிர குரு, சுக்கிரன், சந்திரன், புதன், சூரியன், சனி, செவ்வாய் ஆகிய 7  கிரகங்களில் ஏதேனும் 5 கிரகங்கள் திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் அது தேவ்திரிகோண யோகம் ஆகும்.

இதன் பலன்கள் பிறக்கும் போதிருந்தே செல்வ, வசதி வாய்ப்புகள், பூர்வீக சொத்துக்கள் பெற்றவராக அல்லது அவர் வளர வளர உலக ஞானம், செல்வ, வசதி வாய்ப்புகள், செல்வாக்கு யாவும் அவரை வந்து சேரும், அவர் வாழ்வில் எங்கு சென்றாலும் அதிர்ஷ்டம் அவரை வரவேற்று காத்திருக்கும், செய்யும் செயல்கள் நிறைவாக கைகூடும்.

இந்த யோகத்தின் பலனை முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் 5 கிரகங்களில் குறைந்தது இரண்டு கிரகங்கள் ஆவது 1 ஆம் வீடு, 5 ஆம், 9 ஆம் ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களாக இருக்க வேண்டும் அப்போதே பலன் முழுதாக கிடைக்கும்.
தேவ்திரிகோண யோகம் ஒரு வகை உதாரண படம்

 தர்மகர்மாதிபதி யோகம்

ஜோதிடத்தில் திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் ஆன 9, 10 ஆம் வீட்டின் அதிபதிகள் தர்ம - கர்ம அதிபதிகள் ஆகும், ந்த இரு ஸ்தானங்களுக்கும் உரிய அதிபதி கிரகங்கள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் அதாவது 9 வீட்டின் அதிபதி 10 ஆம் வீட்டில் அமர்ந்து 10 வீட்டின் அதிபதி 9 ஆம் வீட்டில் மாறி அமர்வது அல்லது 9 வீட்டின் அதிபதி 10 ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று 10 வீட்டின் அதிபதி 9 ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் அமர்வதாலும்,  இரு ஸ்தானங்களுக்கும் உரிய அதிபதி கிரகங்கள் சேர்ந்து திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் அமர்வதாலும் இந்த தர்மகர்மாதிபதி யோகத்தை அடையும்.

முதல் தரமான தர்மகர்மாதிபதி யோகம் - 9 வீட்டின் அதிபதி 10 ஆம் வீட்டில் அமர்ந்து 10 வீட்டின் அதிபதி 9 ஆம் வீட்டில் மாறி அமர்வது

இரண்டாம் தரமான தர்மகர்மாதிபதி யோகம் -  இரு ஸ்தானங்களுக்கும் உரிய அதிபதி கிரகங்கள் சேர்ந்து திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் அமர்வது

மூன்றாம் தரமான தர்மகர்மாதிபதி யோகம் -  9 வீட்டின் அதிபதி 10 ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று 10 வீட்டின் அதிபதி 9 ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் அமர்வது

இந்த யோக பலன்கள் செய்யும் செயல்கள் சிறந்த மதிப்பு, மரியாதையை தேடித் தரும், அதீதமான பொன் பொருள் ஈட்டுவான், தொழில் பெயர் புகழ் பெறுவார், தாராளமாக தர்ம காரியங்களைச் செய்வான், உயர் பொறுப்புகள் பதவிகளை பெறுவார்.

இந்த யோகம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தால் அரசாங்க மற்றும் வர்த்தக தொழிற்சபைகளால் மதிப்பு, மரியாதை, அங்கீகாரம், உலகப் புகழ் பெறும் யோகம் எல்லாம் சிறப்பாக அமையும்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


1 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 2 - தேவ்திரிகோண யோகம், தர்மகர்மாதிபதி யோகம்..."

  1. Unknown says:

    ஐயா நான் ரிஷப லக்னம் 9,10க்கு அதிபதி சனி பகவான் தான், அவர் 9ல் ஆட்சி இது யோகமா

கருத்துரையிடுக

Powered by Blogger