ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 1 - அரச கேந்திர யோகம், ராஜபோக யோகம்...
ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல
ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த
சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற
முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.
இந்த தொகுப்பில் அரச கேந்திர யோகம், ராஜபோக யோகம் ஆகிவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்று கூறப்படுகின்ற லக்னம் என்ற 1 ஆம் வீடு, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் ஒன்று கூட விட்டு போகாமல் 7 க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அது அரச கேந்திர யோகம் ஆகும்.
அரச கேந்திர யோகம் ஒரு வகை உதாரண படம்
இதன் பலன் வாழ்வில் சக சௌகரியங்களையும் பெற்றவராகவும், தங்களுக்கென்று ராஜ்யம் உள்ளவர், நிலபுலன்கள், நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் அமைப்புக்கள் அவைகளுக்கு கிளைகள், திறமையான வேலையாட்கள், நிர்வாகத்திறன், தலைமை பொறுப்புகள் வந்து சேரும்.ராஜபோக யோகம் -
அதாவது ராஜகிரகமான சூரியன் ஆட்சி பெற்று சூரியனுக்கு 10ல் சந்திரன் உச்சம் பெறுவதும், சந்திரன் ஆட்சி பெற்று சந்திரனுக்கு 10ல் சூரியன் உச்சம் பெறுவதும் ராஜபோக யோகம் ஏற்படும் அமைப்பு ஆகும்.
இதன் பலன் அரசன் அல்லது அரசனுக்கு நிகரான செல்வ வளம், செல்வாக்கு வளம், நினைத்தை முடிப்பதற்க்கான ஆட்கள் பலம், வெற்றியை அனைவருடனும் சந்தோஷமாக பகிர்ந்து அனைவராலும் விரும்ப படுபவராகவும் ஆவார், அரசு அரசியல் பலம், பெரிய ராஜ்யங்களை மற்றும் தொழில் நிறுவனங்களை நிறுவுவார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 1 - அரச கேந்திர யோகம், ராஜபோக யோகம்..."
கருத்துரையிடுக