கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - அறிமுகம்…

கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - அறிமுகம்

இராசி சக்கர மண்டலத்தில் 27 நட்சத்திரகங்களின் 108 சார இல்லங்களை வான்வழி பாதையாக கொண்டு நவகிரகங்களில் பயண விவரங்களை காட்டுவதே கோச்சாரம் (கோள்களின் சாரம் பயணம்). இதில் நவகிரகங்கள் பயணித்தாலும் சந்திரனுக்கு என்று எப்போதும் சிறப்பிடம் ஜோதிடத்தில் உள்ளது அதன் படி இந்த கோச்சாரம் என்ற வார்த்தை எப்போதும் அதிகமாக பயன்படுத்தபட்டு வருவதற்கு காரணம் சந்திரன்

ஆம் சந்திரன் நமது மன மற்றும் பூத உடலுக்கு காரகனாக இருப்பதால் இந்த சந்திரன் நாம் பிறந்த போது இருந்த நட்சத்திரம் இராசி தொட்டு தற்போதை கோள்களின் சாரம் பயணத்திற்கும் (கோச்சாரம்) தொடர்பு உள்ளதால் வாழ்க்கை கணிதம் காணும் ஜோதிடத்தில் ஜென்ம நட்சத்திரம் ஜென்ம இராசி தொட்டு 12 ஸ்தானங்களில் நவகிரகங்களின் பயணத்தை ஒப்பிட்டு பலன் காணும் இந்த கோச்சாரத்திற்கும் வாழ்க்கை கணிதம் காணும் ஜோதிடத்தில் சற்று முக்கிய பங்கு உண்டு.

அதன்படி நவகிரகங்களும் நாம் பிறந்த ஜென்ம இராசி தொட்டு 12 ஸ்தானங்களில் பயணிக்க கிடைக்கும் பொது பலாபலன்களை பின்வரும் மாறு பார்த்து வருவோம். அதற்கு முன் கோச்சாரத்தை பற்றி முன் அறிமுகம் இல்லாதவர்களுக்கு அதை ஒரு உதாரணமாக காட்டி விளக்கி விடுகிறேன்.

அடியேன் பிறந்த மகம் நட்சத்திரம் சிம்ம இராசி இதையே எடுத்து உதாரணமாக வைத்துக்கொள்ளுவோம் இப்போது தற்சமய கோள்களின் பயண விவர சக்கரம் 06\10\2016 இது





இதில் எமது சிம்ம சந்திரனை இணைத்து அதையே ஜென்ம ராசியின் முதல் இடமாக (ஸ்தானம்) கொண்டு பார்க்க கீழ் உள்ள விதமாக நவகிரக இராசி கோச்சார சக்கரம் அமையும்



இதை விவரித்து சொல்ல
ஜென்ம ராசியில் இராகுவும்
ஜென்ம ராசியில் இருந்து 2ல் குரு, சூரியன், புதன்
ஜென்ம ராசியில் இருந்து 3ல் சுக்கிரன்
ஜென்ம ராசியில் இருந்து 4ல் சந்திரன், சனி
ஜென்ம ராசியில் இருந்து 5ல் செவ்வாய்
ஜென்ம ராசியில் இருந்து 7ல் கேது
இப்படியாக பிரிந்து கோச்சாரம் காணும் அந்த சமயத்திற்கு அமைந்து உள்ளன இதை வைத்து ஜென்ம ராசிக்கு நவகிரகங்கள் அமையும் இடத்தை பொருத்து கோச்சார பலன்கள் காணப்படு கின்றன. இதில் முக்கியமாக கவனிக்க படவேண்டியது ஒவ்வொருவரின் தனிபட்ட ஜாதக பலத்தையும் திசாபுத்தி நடப்பையும் பொருத்தே முக்கியமாக ஒருவரின் தனிபட்ட வாழ்க்கை பலன்கள் அமையும் எனவே கோச்சார பலன்கள் காண்பது என்பது ஒருவரின் திசாபுத்தி நடப்பிற்கும் அப்போதைய கோச்சார பலன்களை இணைத்தே காண வேண்டும்.

ஒருவருக்கு சுபயோக திசாபுத்தி நடப்பில் இருக்கிறது என்றாலும் அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் நன்றாக இருந்தாலும் நவகிரகங்கள் அப்போதைய கோச்சாரத்தில் எப்படி இருந்தாலும் அவருக்கு குறைந்தபட்ச நன்மையே செய்யும் என்பதையும் பெரிய தீமை செய்யாது என்பதையும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இனி ஒவ்வொரு கிரகங்களும் ஜென்ம இராசி தொட்டு அமையும் கோச்சார கிரக ஸ்தான பலன்களை காண்போம்தொடரும்
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - அறிமுகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger