மைக்கல் ஜாக்சன் (Michael Jackson) ஜாதகம் கணிப்பு - பாப் இசையின் அரசன், உலகப்புகழ் இசை கலைஞன்...

மைக்கல் ஜாக்சன் (Michael Jackson) ஜாதகம் கணிப்பு -  பாப் இசையின் அரசன், உலகப்புகழ் இசை கலைஞன்...

 
மைக்கல் ஜாக்சன் என்று சொன்னால் தெரியாத இசை, நடன கலைஞர்களே இருக்க மாட்டார்கள் அவ்வளவு இசைத்துறையின் அனைத்து பக்கங்களிலும் நுழைந்து சாதித்தவர் ஆம் பாடகர், இசை தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடனக்காரர், நடனமைப்பாளர், நடிகர், பாடல் ஆசிரியர், மேடைக் கலைஞர் எனப் பல முகங்கள் கொண்டவர். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகள் உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். தனது தனித்துவமான பாடல் ஆடல் மூலம் உலகம் சுற்றி உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் மத்தியில் பிரபலமானவராக ஈர்க்கபட்டவராக வாழ்ந்து காட்டியவர் இவரின் ஜாதக பலம் பலவீனங்களை இப்போது காண்போம்.

மைக்கல் ஜாக்சன் (Michael Jackson) ஜாதகம்





இசைத்துறையில் சாதிப்பதற்க்கு 2,3,5,11 ஆகிய ஸ்தானங்கள் நன்றாக அமைய வேண்டும் மேலும் அதன் ஸ்தானாதிபதிகளும் நன்றாக அமைய வேண்டும், பிறகு சுக்கிரன், குரு, சனி ஆகிய கிரகங்கள் மிக பலமாக அமைய வேண்டும்.

சதாரண மனிதரையும் சாதனை மனிதராக மாற்றும் கலைத்துறை லக்னமான கும்பம் லக்னத்தில் பிறந்த இவரின் ஜாதகத்தில் பொது சகோதரகாரகனான செவ்வாயே இவருக்கு மூன்றுக்குடைய சகோதரகாரகனாகவும் அமைந்து அவர் சகோதர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அதுவும் ஆட்சி பெற்ற சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்திலேயே ஆட்சி பெற்று அமைந்தது மேலும் பலம் ஆகும் இதனால் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளையாக பிறந்து இவரின் உடன்பிறந்த நான்கு சகோதரர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்து சகோதரர்களின் ஆதரவால் இவரின் இசை ஞானத்திற்க்கு பலமான அடித்தளம் அமைந்தது. 3 ஆம் இடம் துணிவுக்கான இடமும் என்பதால் தனது ஒவ்வொரு புதிய கலை சார்ந்த முயற்சிகளை தைரியமாக மக்கள் அரங்கிற்கு முன்னெடுத்து சென்றார்.

2,3,11 ஆகிய அதன் ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் சப்தம பார்வையாக அதாவது 2,11 க்கு அதிபதி குருவும் 3க்குடைய இந்த ஆட்சி பெற்ற செவ்வாயும் பார்த்துக்கொள்வதும் அதுவும் ஆட்சி பெற்ற செவ்வாயின் ஆதிக்க சித்திரை நட்சத்திரத்திலேயே இருந்து செவ்வாயை பார்ப்பது விசேஷம் இப்படி உயர்வு பெற்ற செவ்வாய் தசாம்சம் உள்ளபட மற்ற வர்க்க கட்டங்களில் 4 ல் ஆட்சி, உச்சம் அடைவதும் சேர மேலும் விசேஷம். 5 ஆம் ஸ்தானாதிபதி புதன் 7ல் அமர்ந்து லக்னத்தை சப்தம பார்வையாக பார்ப்பது பலம் சேர்த்துள்ளது.

நடனத்திற்கு ஆதிபத்தியம் பெற்ற சூரியனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் சப்தம பார்வையாக பார்ப்பது அதில் சூரியன் மகத்தில் ஆட்சி பெறுவது உடன் 5 ஆம் ஸ்தானாதிபதி புதன் மகத்தில் அமர்ந்து துணை நின்று புதஆதித்ய யோகத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அதனால் கலைகளை சீக்கரம் கற்று கொள்ளும் ஆற்றல் கிடைத்தது. சந்திரனை மற்றும் லக்னத்தையும் சரியாக ஏழாம் பார்வையாக ஆட்சி பெற்ற அரச கிரகமான சூரியன் பார்ப்பது அதுவும் பலமான கேதுவின் நடத்திரத்தில் பார்ப்பது என்பது ஒரு அரசனுக்குரிய யோகம் ஆகும் அதனால் தனது நடை உடை பாவனைகளில் ஒரு அரசனைப் போல் நடந்து கொண்டார் ஏன் தனது வீட்டை 3000 ஏக்கரில் அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான மாளிகையாக கட்டி வாழ்ந்தார் அதே நேரத்தில் எட்டுக்குடைய புதனுடன் சூரியன் நெருங்கி சேர்ந்த காரணத்தால் அவரின் இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது கடைசி காலத்தில் தனித்தே இருந்தார்.

பாட்டுக்கு காரகத்துவம் பெற்ற இரண்டாம் ஸ்தானாதிபதி குரு இசை ஆற்றல் காரகனான 3க்குடைய இந்த ஆட்சி பெற்ற செவ்வாயும் பார்த்துக்கொள்வதும் அதுவும் ஆட்சி பெற்ற செவ்வாயின் ஆதிக்க சித்திரை நட்சத்திரத்திலேயே இருந்து செவ்வாயை பார்ப்பதான இந்த பலத்தால் நல்ல வசீகர குரலும், பாடும் பாவத்தாலும் அனைவரையும் கவர்ந்தார்

நடனத்திற்கு ஆதிபத்தியம் பெற்ற சூரியனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் லக்னத்துடன் பலமான தொடர்பை பெற்றதால் வளர்இளம் பருவ காலம் தொட்டே நடனத்தில் தனி கவனம் செய்ய ஆரம்பித்தார் மேலும் வலுவான 5,7 கேந்திர கோண ஸ்தனாபதிகளால் ஏற்பட்ட புதஆதித்ய யோகம் அவரை நடனத்தில் புதுமைகளை செய்ய தூண்டி அதை சாதிக்க வைத்தது இந்த லகனம், சூரியன், சந்திரன், புதனின் வலுவான தொடர்புக் கூடல் மற்றும் நடனத்திற்கு ஆதிபத்தியம் பெற்ற மற்றொரு கிரகமான சுக்கிரன் லக்னாதிபதியான சனி பகவான் உடன் நவாம்சத்தில் கும்பத்தில் ஆட்சி பெற்று இருப்பதும் சேர்ந்து இன்னும் சொல்வதானால் இவரை ரசிகர்களின் பார்வை தன் மீது விழ வெறிபிடித்தவர் போல் புதிய புதிய ஆட்ட நெளிவுகளை கண்டு அதை கடின பயிற்சிக்கு பின் துல்லியமாக கைகொண்டார் ஏனென்றால் நேரடி மேடையில் சிறு நடன பிழை என்றாலும் அது பெரிய பாதிப்பை தரும் என்பது அவருக்கு தெரியும்.

புகழ்காரகன் ஆன சூரியன் சூரியன் மகத்தில் ஆட்சி பெற்று லக்னத்தை பார்ப்பதும், லக்னாதிபதியான சனி பகவான் நவாம்சத்தில் கும்பத்தில் ஆட்சி பெற்று கும்ப யோகாதிபதியான 9க்குடைய சுக்கிரன் கூட சேர்த்து இருப்பதும், சுக்கிரன் தசாம்சம் உள்ளபட மற்ற வர்க்க கட்டங்களில் 3 ல் ஆட்சி, உச்சம் அடைவதும் மேலும் குருசண்டாள யோகம் பெற்ற குரு 5 ஆம் பார்வையாக லக்னத்தை பார்ப்பதும் 10க்கடைய தொழில் ஸ்தனாதிபதியான செவ்வாயை பார்ப்பதும். குரு மங்கள யோகம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் 10க்குடையவன் ஆட்சி பெற்று 9க்குடைய சுக்கிரன் மற்றும் 9ஆம் ஸ்தானம் இவற்றை பார்ப்பது எல்லாம் சேர்ந்து தனது இசை தொழிலால் அழியாத புகழை ஈட்ட வாய்ப்பாக அமைந்துள்ளது.

மைக்கல் ஜாக்சன் மிகமிக பலமான இராகு, கேதுவை தனது ஜாதகத்தில் பெற்றவர் ஆம் கேது சொந்த நட்சத்திரத்திலேயே அமர்ந்து வர்க்கோத்தம பலத்துடன் குருவால் பார்க்க பட்டு 5,7க்குடைய புதன் சூரியனை தனது மக நட்சத்திரத்தில் இடம் அளித்து மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தை அமைந்துள்ளார் கேது உடன் இராகுவும் குருசண்டாள யோகத்தால் பலப்பட்டு அமைந்துள்ளார். புதனின் சாரம் பெற்ற சனியின் திசையில் வெற்றிகளை தொடங்கி கேதுவின் சாரம் பெற்ற புதனின் திசையில் பெரும் வெற்றி பணம் புகழை குவித்தார்.

ஏனினும் இவரின் லக்னத்தில் ஆறுக்குடைய சந்திரனின் தீர்க்க சேர்க்கை மற்றும் அதை 8 க்குடைய புதன் பார்ப்பது மேலும் குருவும் செவ்வாயும் வலுவான இராகு, கேதுவின் பிடியில் பாதிக்கபட்டது. நவாம்சத்தில் புதன், சந்திரன் மற்றும் கேது மூவரின் சேர்க்கை அம்சம் போன்ற காரணங்களால் கடைசி வரை அவரை உடல் வேதனையும் வலியும் மன அழுத்தமும் துரத்தி சில மருந்துகளால் வாழ்ந்த அந்த மனிதர் அந்த சில மருந்துகளேயே புதனின் திசையின் முடிவிற்கு பிறகு உடல் பலகீனப் பட்டு அந்த பிரம்மாண்டமான மாளிகையில் தனியாக உயிரை இழந்தார்.

சேர்த்து வைத்த பொருளுக்கு தனது வாழ்நாளின் பின்னால் பல சரிவுகளை சந்தித்தாலும் லக்னம் மற்றும் 9க்குடைய சுக்கிரனின் நவாம்ச அமைப்பு மேலும் குரு பார்வை போன்றவை சேர்ந்து மைக்கல் ஜாக்சன் தனது வாழ்நாளில் செய்த பல சமூக அறக்கட்டளைகளுக்கு செய்த நிதி உதவி (The Guinness Book of World Records for “Most Charities Supported by a Pop Star.”) மற்றும் லக்னத்துடன் சேர்ந்த புகழ்யோகம் ஆகியவை சேர்ந்து மறைந்தாலும் தனது சாதனை வாழ்க்கையை உலகில் ஆழமாக பதிய வைத்துள்ளார்

அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர் கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே. - திருமந்திரம்

பொருள் - தற்காலத்திற்கு தக்கவாறு மொழி பெயர்த்தால் " பெற்ற பொருளும், மனையும், வாகனங்களும், அதிகாரமும் ஒரு காலத்தில் பிறர் எடுத்து கொள்ளுவார்கள் என்பதை முன்னமே உணர்ந்து உயிரோடு இருக்கும் போதே தான தர்மம் செய்வதே அவன் இறைவனுக்கு செய்யும் பெரிய தவமாக கொள்ளப்படும்".




0 Response to "மைக்கல் ஜாக்சன் (Michael Jackson) ஜாதகம் கணிப்பு - பாப் இசையின் அரசன், உலகப்புகழ் இசை கலைஞன்..."

கருத்துரையிடுக

Powered by Blogger