நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - செவ்வாய்...
நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - செவ்வாய்...
நவகிரகங்களும்
தங்கள் தங்கள் ஆதிக்கம் அதிகம் காட்டும் இடங்களாக பிரித்து சொல்லும் ஒரு சமஸ்கிருத
நூலின் மொழி பெயர்ப்பாக வந்த ஒரு பழம் தமிழ் நூலின் சில குறிப்பிட்ட இந்த பகுதி
மட்டும் கிடைத்தது அதை தங்களின் முன் இந்த வலைபதிவின் மூலம் பதிவிக்கிறேன்.
மங்கள நாயகன்
வியாபிக்கும் காரகதலங்கள் யுத்தகளங்கள்
புங்க
கிடங்குகள் போஜன சத்திரம் உலோக வார்ப்பிடங்கள்
அங்க சிகிச்சை அங்க விருத்தி விளையாட்டு தலங்களும்
பாதாளம் முருகனார் கோயில் மங்களன் காரகதலங்களாம்.
- கிரகபதி சந்தம்
பொருள் - செவ்வாயின்
ஆதிக்கம் அதிகம் காட்டும் பூமியின் தலங்கள் ஆவன போர்க்களங்கள், போர்த்தளவாட கிடங்குகள், பெரிய சமையல் அறைகள் சத்திரங்கள், சுரங்கங்கள், உலோக பட்டரைகள், உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்யும் இடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு கூடங்கள்,
பாதாளம் என்பதற்கு காலத்திற்கு
தக்கபடி பொருள் கொள்ள வேண்டியது தான், முருகன் கோயில்கள்
செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் காட்டும் பூமியின் தலங்கள் ஆகும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - செவ்வாய்..."
கருத்துரையிடுக