கொரானாவின் பின்விளைவு - படிப்பு மற்றும் படிப்பின் மீது மாணவர்கள் கவனம் செலுத்தக்கூடிய சகஜ நிலை திரும்புவதற்கான…

கொரானாவின் பின்விளைவு - படிப்பு மற்றும் படிப்பின் மீது மாணவர்கள் கவனம் செலுத்தக்கூடிய சகஜ நிலை திரும்புவதற்கான…

 



கொரானாவின் நோய் தாக்கத்தின் முக்கிய பின்விளைவாக அடுத்து நாம் பார்க்க இருப்பது மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ள சிக்கலாக இருப்பது அதாவது படிப்பின் மீது மாணவர்கள் மற்றும் குழந்தைகள் கவனம் செலுத்தக்கூடிய சகஜ நிலைமை திரும்புவதற்கு மிகுந்த சிரமமாக இருக்கலாம் ஏனென்றால் நிறைய மாணவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த கொரானா காலத்தில் தொலைகாட்சிகள், செல்போன்கள் மற்றும் உட்புற விளையாட்டுகள் போன்றவற்றில் கவனத்தை செலுத்தி செலுத்தி பழகி உள்ளார்கள் அவர்களை உடனடியாக பள்ளி பாடத்தின் மீது கவனத்தை செலுத்த சொல்லுவது அவர்களுக்கு சிரமத்தை தரலாம் ஆசிரியர்களுக்கும் சிரமத்தை தரலாம் மற்றும் தொடர்ந்து படித்தால் மட்டுமோ நினைவிலிருக்கும் கல்வி பாடங்கள் பல உள்ளது அவற்றை கொஞ்ச காலத்திற்கு விட்டு விட்டு மறுபடியும் தொடர்வதும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிரமமாக இருக்கலாம் மேலும் தங்களின் பள்ளி வாழ்க்கை அதன் நண்பர்களை விட்டு வெகுகாலத்திற்கு தள்ளி இருந்த மாணவர்கள் மனரீதியாக தங்களின் பள்ளி நண்பர்களை சந்தித்து ஒருவருக்கு ஒருவர் மனரீதியாக சகஜமாக பழகும் நிலைமை தோன்றவும் குறிப்பிட்ட காலம் எடுக்கலாம்.

 

இப்படிபட்ட நிலையில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தங்களின் பள்ளி பாடத்தில் கவனத்தை செலுத்துவது தொடர்பாகவே பேச உள்ளேன் சார் இதெல்லாம் சரி சார் இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம் அதாவது இந்த வீடியோ பதிவின் முக்கிய நோக்கமாக இருப்பது தங்களின் ஜாதக பலத்தால் சில மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தங்களின் கல்வி பாடத்தின் மீது உடனடியாக கவனத்தை செலுத்தும் திறனும் மற்றும் அதே போல உடனடியாக தங்களின் பள்ளி பாடத்தில் முன்னேற்றம் அடையும் திறமையும் வாய்க்க பெற்று இருக்கலாம் மற்றும் ஞாபக சக்தி இருக்கலாம் ஆனால் பல மாணவர்கள் மற்றும் குழந்தைகள் படிப்படியாகவோ அல்லது மந்தமாகவோ தங்களின் பாடத்தில் கவனம் செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள் அது போன்ற மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு  இது போன்ற காலங்களில் சமூகமும் மற்றும் குடும்பமும் உறுதுணையாக இருந்து அவர்களின் படிப்பை ஆதரவோடு கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் முகமாக இந்த பதிவை தருகிறேன்.

 

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான், சந்திர தேவன் மற்றும் முக்கியமாக புதன் பகவான் ஆகிய கிரகங்களின் வலிமையை கொண்டு ஒருவருடைய கல்வி ஆற்றலை மற்றும் மன ஆற்றலை அறிகிறோம் மேலே சொன்ன கிரகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் கல்விமான் என்று சிறப்பு பெயர் பெற்ற கிரகங்கள் ஆகும் இந்த கிரகங்கள் மாணவர்களின் கல்வி ஆற்றலை மற்றும் மன ஆற்றலை எடுத்து காட்டுவதாக அமைகிறது மேலே சொன்ன கிரகங்கள் ஒரு மாணவருடைய ஜாதகத்தில் சுப வலிமையோடு சிறப்பாக அமைந்தால் அதாவது குரு பகவான், சந்திரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு பலம் மற்றும் சுப கிரக சேர்க்கை மற்றும் சுப அவஸ்தைகளை அடைதல், மேலும் ஷட்பல வலிமைகளில் மீதி உள்ள திக் பலம், கால பலம், சேஷ்ட பலம் போன்றவை அடைந்து அமைந்திருந்தாலும் அத்துடன் அப்படி பலமடைந்த கிரகங்களின் திசா புத்தி காலங்கள் அந்த மாணவர்கள் மற்றும் குழந்தைகள் வாழ்வில் நடந்து கொண்டு இருந்தாலும் அவர்கள் இந்த கொரானாவிற்கு பின்னான பள்ளி காலங்களில் தங்களின் பள்ளி படிப்பில் மற்றும் பாடத்தின் மீது செலுத்தும் கவனத்தில் மற்றும் கற்ற பாடத்தில் ஞாபக சக்தியை மீட்டு எடுக்கும் திறனில் எப்படியாவது சமாளித்து மேல் ஏறி வந்து விடுவார்கள்.

அதே போல பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளில் கல்விக்கு உடல்ரீதியாக பார்த்தால் லக்னம் மற்றும் 2 ஆம் வீடும் முக்கியமான ஸ்தானங்கள் ஆகும் அது போல மனரீதியாக பார்த்தால் 4 ஆம் மற்றும் 5 ஆம் வீடும் முக்கியமான ஸ்தானங்கள் ஆகும் மேலே சொன்ன ஸ்தானங்களில் மனரீதியான ஆற்றலை தரும் ஸ்தானங்களான 4 ஆம் மற்றும் 5 ஆம் வீடும் மற்றும் அவற்றின் அதிபதி கிரகங்களும் ஆட்சி, உச்சம், நட்பு பலம் மற்றும் சுப கிரக சேர்க்கை மற்றும் சுப அவஸ்தைகளை அடைதல், மேலும் ஷட்பல வலிமைகளில் மீதி உள்ள திக் பலம், கால பலம், சேஷ்ட பலம் போன்றவை அடைந்து அமைந்திருந்தாலும் உடன் 4 ஆம் மற்றும் 5 ஆம் வீடும் சுப கிரங்களின் சேர்க்கை பார்வை மற்றும் சுப கிரங்கள் எதேனும் ஒரு விதத்தில் வலுவாக இருந்து அத்துடன் அப்படி பலமடைந் த ஸ்தானங்களின் கிரகங்களின் திசா புத்தி காலங்கள் அந்த மாணவர்கள் மற்றும் குழந்தைகள் வாழ்வில் நடந்து கொண்டு இருந்தாலும் அவர்கள் இந்த கொரானாவிற்கு பின்னான பள்ளி காலங்களில் தங்களின் பள்ளி படிப்பில் மற்றும் பாடத்தின் மீது செலுத்தும் கவனத்தில் மற்றும் கற்ற பாடத்தில் ஞாபக சக்தியை மீட்டு எடுக்கும் திறனில் எப்படியாவது சமாளித்து மேல் ஏறி வந்து விடுவார்கள்.

 

ஆனால் மேலே சொன்ன கிரகங்கள் மற்றும் ஸ்தானங்கள் ஒரு மாணவருடைய ஜாதகத்தில் சுப வலிமையோடு அமையாமல் போனாலோ அல்லது அசுப வலிமையோடு அமைந்திருந்தாலும் அல்லது மிதமான சுப வலிமையோடு அமைந்திருந்தாலும் அப்படிபட்ட மாணவர்கள் தங்களின் படிப்பில் பாடத்தில் கவனத்தை மற்றும் கற்ற பாடத்தில் ஞாபக சக்தியை மீட்டு எடுக்க சிரம படலாம், எனவே அப்படிபட்ட மாணவர்களை அவர்களின் கவன மற்றும் ஞாபக சக்தியின் நிலையை பொறுத்து அவர்களை பக்குவமாக கையாண்டு பெற்றோர்கள், ஆசிரியார்கள் மற்றும் அரசாங்க சமூக சூழ்நிலைகளை உருவாக்கும் கல்வியாளர்கள் அந்த  மாணவர்களின் மனநிலைகள் புண்படாதவாறு அவர்களை கல்வியில் மறுபடியும் பழைய நிலைகளுக்கு கொண்டு வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 


வேலைவாய்ப்பின்மை நிலைமையின் காரணம், வேலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ள நபர்கள், சுதேசி பொருளாதாரம் மலர வேண்டியது காலத்தின் தேவை….

வேலைவாய்ப்பின்மை நிலைமையின் காரணம், வேலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ள நபர்கள், சுதேசி பொருளாதாரம் மலர வேண்டியது காலத்தின் தேவை…. [The reason of the unemployment situation. Persons who are likely to be unemployed. The Indian native economy needs to blossom]


கொரானாவின் தாக்கம் உலக நாடுகள் மற்றும் இந்திய நாட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது உயிர் இழப்புகள் உலக அளவில் 5 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது, இந்திய அளவில் பார்க்கும் போது 20 ஆயிரத்தை கடந்து போகிறது, கொரானா தொற்று நோயின் தாக்கங்களை பற்றி எமது வலைதளத்தில் மார்ச் மாதத்திலேயே முக்கிய இரண்டு ஜோதிட கட்டுரைகளை வழங்கி இருந்தேன் அதில் ஜூலை மாதம் வரை கொரானா தொற்று நோயின் தாக்கம் uptrend ல் அதாவது ஏற்ற போக்கில் தான் இருக்கும் என்று மார்ச் மாதத்திலேயே கூறியிருந்தேன் இனி வருகிற ஆகஸ்ட மாதத்திற்கு பிறகு அதாவது உலக மக்கள் இந்த பிரச்சினையிலிருத்து தப்பி உயிர்வாழும் சக்திக்கான அந்த மருந்தையோ அல்லது தடுப்பு ஆற்றலையோ அடைவார்கள் என்று கூறியிருந்தேன்.

 

கொரானாவின் தாக்கத்தால் மக்கள் அவதிபட்டுக்கொண்டிருந்த காரணத்தால் கடந்த மூன்று மாதங்களாக எந்த ஜோதிட பதிவுகளையும் கொடுக்க எனது மனம் உடன்படவில்லை இனி வரும் காலங்களில் கொரானாவின் தாக்கம் குறையலாம் என்று கருதி இனி ஜோதிட பதிவுகளை கொடுக்கலாம் என்று கருதுகிறேன். கொரானா நோயின் தாக்கத்தால் மனிதர்களின் உடல்நலம் மட்டும் சரிந்து கிடக்கவில்லை நம் நாட்டின் பொருளாதாரமும் சரிந்து தான் கிடக்கிறது அதன் விளைவாக நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

 

இந்தியர்களின் அதிகபட்ச இறக்குமதியும் இதற்கு ஒரு காரணமாக தெரிகிறது முக்கிமாக நம் நாட்டிற்கு வேலை வாய்ப்பை தரும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறையினரின் உற்பத்தி பொருட்களை இந்திய சந்தையில் சீன தேசத்தினர் நம்மை விட மலிவு விலைக்கு விற்பதாக சொல்லி அதே பொருட்களை சீனாவில் தயாரித்து நமது சந்தையில் விற்று இந்தியாவின் நடுத்தர மற்றும் மித பணக்கார வர்க்கத்தினரின் பணத்தை தங்களின் நாட்டிற்கு நீண்ட காலமாக கொண்டு சென்று வருகின்றனர் அதனால் இந்தியாவின் நடுத்தர மற்றும் மித பணக்கார வர்க்கத்தினரிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது, இந்தியர்களிடம் பணப்புழக்கம் குறைந்தால் பொருட்களை வாங்கும் சக்தி குறையும் பொருட்களை வாங்கும் சக்தி குறைந்தால் உற்பத்தி குறையும் உற்பத்தி குறைந்தால் வேலையின்மை விகிதம் அதிகரிக்கும், ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்திருந்த காலத்தில் சுதேச பொருட்களை வாங்க சொல்லி இந்தியர்களிடம் எழுந்திருந்த கோஷத்திற்கு என்ன அடிப்படை காரணம் இருந்ததுவோ அதே காரணம் வேறுவிதத்தில் தற்போது நாட்டில் ஏற்பட உள்ளது.


இதை இப்போது ஆளும் மத்திய அரசு மேலும் இனி அடுத்து ஆள வரும் மத்திய அரசாங்கம் இந்த மாற்றத்தை தற்சார்பு பொருளாதாரம் (Self-sufficiency Economy or Independent Economy) என்று அழைக்கும்,


தற்சார்பு பொருளாதாரம் என்றால் ? -

மற்ற நாடுகளை சார்ந்து இருக்காமல் நம் நாட்டிற்கு வேண்டிய பொருட்களை நாமே உற்பத்தி செய்வது மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை நம் நாட்டிலேயே விற்பதற்கான சந்தை நிலைமையை ஏற்படுத்துவது மேலும் இறக்குமதி செய்யும் நிலையில் உள்ள பொருட்களையும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய முயற்சிப்பது. நாம் நாட்டின் பொருளாதாரம் அதாவது பண வளம் வேறு ஒரு நாட்டின் ஈட்டு லாபமாக மாறாமல் நம் நாடு பொருளாதார தன்னிறைவு காண்பது. சுயாதீனமான தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்ற கொள்கைகளை மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வது ஆகியவை தான் தற்சார்பு பொருளாதாரம் (Self-sufficiency Economy or Independent Economy) ஆகும்.


சரி இப்போது நான் பேச எடுத்துள்ள விஷயத்திற்க்கு வருகிறேன் எவருக்கும் எதனால் எந்த நிலையில் ஜாதகத்தில் வேலையின்மை ஏற்படுகிறது என்பதை தான் பார்க்க போகிறோம் 

 

ஒருவரது ஜாதக கட்டத்தில் 12 ஸ்தானங்களில் கர்ம ஸ்தானம் அதாவது வேலை வீடு என்று அழைக்கப்படக்கூடிய வீடு 10 ஆம் ஸ்தானம் ஆகும் அந்த 10 ஆம் ஸ்தானம் மற்றும்10 ஆம் ஸ்தானத்தை பார்க்கும் கிரகங்கள், 10 ஆம் ஸ்தானத்தின் அதிபதி மற்றும் 10 ஆம் ஸ்தானத்தின் அதிபதியுடன் சேரும் கிரகங்கள், அந்த கிரகம் அமைந்த விதம் இதன் பலத்தை பொருத்து பலருக்கு அவர் அவர்  வேலைவாய்ப்பின் பலம் அமைந்து வரும். மேலும் ஒருவரது ஜாதக கட்டத்தில் 12 ஸ்தானங்களில் லாப ஸ்தானம் அதாவது வருமான வீடு என்று அழைக்கப்படக்கூடிய வீடு 11 ஆம் ஸ்தானம் ஆகும் அந்த 11 ஆம் ஸ்தானம் மற்றும்11 ஆம் ஸ்தானத்தை பார்க்கும் கிரகங்கள், 11 ஆம் ஸ்தானத்தின் அதிபதி மற்றும் 11 ஆம் ஸ்தானத்தின் அதிபதியுடன் சேரும் கிரகங்கள், அந்த கிரகம் அமைந்த விதம் இதன் பலத்தை பொருத்து பலருக்கு அவர் அவர் வேலைவாய்ப்பில் சம்பளம் மற்றும் வருமான பலம் அமைந்து வருகிறது..... மீதி வீடியோவில்



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


பன்னிரண்டு மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஆதிக்க வைணவ அவதார தெய்வங்கள்..

Vadakalai Thiruman Photoframe (Big) – haristore.com
வைஷ்ணவ சொற்களஞ்சியத்தில் பார்த்தது பன்னிரண்டு மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஆதிக்கம் செலுத்தும் வைணவ அவதார தெய்வங்கள் -

சித்திரை - மதுசூதனா (April-May)
வைகாசி - திரிவிக்ரமா (May-June)
ஆனி - வாமனா (June-July)
ஆடி - ஸ்ரீதரா (July-August)
ஆவணி — ஹிருஷிகேஷா (August-September)
புரட்டாசி — பத்மநாபா (September-October)
ஐப்பசி — தாமோதரா (October-November)
கார்த்திகை — கேசவா (November-December)
மார்கழி — நாராயணா (December-January)
தை — மாதவா (January-Februray)
மாசி - கோவிந்தா (February-March)
பங்குனி -  விஷ்ணு (March-April)

ஓம் விகதஜ்வராய நமஹ - ராகு கிரக வீரியத்தை பற்றி அறிந்த கொள்ள உதவும் வரிகள்., இராகுவின் பகவான் வலிமையை..


ராகு கிர வீரியத்தை பற்றி அறிந்த கொள்ள உதவும் வரிகள்., இராகுவின் பகவான் வலிமையை..



ஓம் விக3தஜ்வராய நமஹ
Fever Fearless God I am Greeting You.
காய்ச்சல் (ஜ்வரம்) பயமற்ற இறைவனே நான் உங்களை போற்றுகிறேன். 

பரபிரம்மத்தை போற்றும் 1000 திருநாமங்களில் இதுவும் ஒன்று இந்த சமயத்தில்...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கவுரை - பாகம் 4

Ramana Maharshi’s Arunachala Aksharamanamalai Tamil Commentary Part - 4 ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 18 to 27 பாடல்கள் பகுதி – 4



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
 

கொரோனா வைரஸ் தொற்று மரண தாக்கம் தனது மத்திய காலத்தை தாண்டி வருகிறது. இந்தியா முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன…

கொரோனா வைரஸ் தொற்று மரண தாக்கம் தனது மத்திய காலத்தை தாண்டி வருகிறது. இந்தியா முக்கியமாக கவனிக்க  வேண்டியது என்ன…

 Image result for coronavirus

24-03-2020 - உலகை அச்சுறுத்தி கொண்டும் பெரும் மரணங்களை ஏற்படுத்தி கொண்டு வருகிற கொரோனா வைரஸின் மரண தாக்கம் அதன் ஆரம்பம் மற்றும் முடிவிற்கு இடையே தனது மத்திய பகுதியை போன வாரம் 24-03-2020 அன்று தொட்டது எனவே இப்போது கொரோனா வைரஸ் தொற்று தனது மத்திய காலத்தை தாண்டி வருகிறது.

15-04-2020 - ஊரடங்கு உத்தரவு பின்வாங்க படுமா? - இந்தியா முக்கியமாக கவனிக்க  வேண்டியது என்ன

COVID-19 INDIA as on : 02 April 2020 ரிப்போர்ட் படி
தற்போதைய நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை
1764
குணப்படுத்தப்பட்ட / வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை
150
இறப்பு எண்ணிக்கை
50

கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போவதை கட்டுப்படுத்தும் வரை மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கபட்ட மேலும் பாதிக்கபட வாய்ப்புள்ள அனைவரையும் மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு வரும் வரை இந்தியாவின் நிலைமை சிக்கல் தான், ஊரடங்கு உத்தரவு பின்வாங்கபட்டால் மேலே சொன்ன பணிகளை நிறைவேற்ற முடியுமா? என்பதை மத்திய அரசு கண்காணித்து தான் முடிவுக்கு வரும். 

ஏப்ரல் மாத கிரக நிலைமைகளை பார்க்கும் போது ஊரடங்கு உத்தரவு பின்வாங்கபட வாய்ப்பு குறைவு தான் ஆனால் ஊரடங்கு உத்தரவுக்கான சில விஷயங்கள் தளர்த்த பட்டாலே சிறிய முன்னேற்றம் தான், ஆனால் அது கூட COVID-19 INDIA ரிப்போர்ட் பொருத்து தான் அமையும். பல நாடுகள் பாதிக்க பட்டிருக்கும் விதத்தை பார்க்கும் போது கொரோனா வைரஸ் நோய் பரவி அதனால் ஏற்படும் பெரும் மோசமான விளைவை விட ஊரடங்கு உத்தரவால் வரும் பின்விளைவுகள் குறைவு தான் போலும். அதே போல ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தவே அதிக வாய்ப்புள்ளது.

07-07-2020 நாளுக்குள் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை மூன்று இலக்க எண்ணிக்கையை தொடலாம் என தோன்றுகிறது நான்கு இலக்க எண்ணிக்கையை தொடாமல் இருக்க வேண்டும் என்றால் மே மாதத்தில் மரண எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எனவே ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு மிக முக்கியமான மாதம் ஆகும். ஒரு நாட்டின் கால் பங்கு மக்களை தாக்கும் அளவுக்கு சக்தியுள்ளதாக இந்த வைரஸ் பரவும் விதம் உள்ளதால் இந்திய போன்ற அடர்த்தியாக மக்கள் வாழும் நாடு மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

08-06-2020 - நான் ஏற்கெனவே 15-03-2020 ல் எழுதிய http://www.jodhishsivam.com/2020/03/blog-post_15.html கூறியிருந்தேன் இவ்வாறு அதாவது "கொரோனா வைரஸின் தாக்க வீரியம் முடியும் காலம் 07-07-2020 அன்று தமிழ் தேதி ஆனி 23 க்கு பிறகு தான் கொரோனா வைரஸின் தாக்கம் கணிசமான அளவில் குறைய தொடங்கும் அதற்குள் மரண எண்ணிக்கை ஐந்து இலக்க எண்ணை தொடலாம் அதாவது அதிக பட்சம் 99,999 வரை போகலாம்" என்று கூறியிருந்தேன் ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா மேற்கு உலக நாடுகள், இரான் நாடு போன்ற உலக நாடுகள் பல இந்த  கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுபடுத்த முடியாமல் தவிக்கும் சூழ்நிலை உள்ளதால் இப்படியே போனால் ஏப்ரலின் முடிவில் மரண எண்ணிக்கை ஆறு இலக்க எண்ணை தொடலாம். 08-06-2020 முன்பாகவே மரண எண்ணிக்கையின் உச்சத்தை இந்த காலகட்டத்தில் அடையலாம் அதாவது உலகம் முழுக்க மரண எண்ணிக்கை மூன்று முதல் ஐந்து லட்சம் வரை போகலாம் என்று நினைக்கிறேன்.

19-06-2020 - 19-06-2020 தேதி தொடங்கிய காலங்களுக்கு சற்று முன்பின் காலங்களில் மிக முக்கியமாக சூரியனும் ராகுவும் சேரும் காலம்  உலக மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அதன் மரணமும் உச்ச பட்சத்தை அடையும் காலம் அதே சமயம் இந்த காலத்தில் தான் இந்த கொரோனா தொற்று வைரஸின் மரண தாக்கத்திற்கு தீர்வை தேடி கடும் பிரயத்தனத்தை உலகம் எடுக்கும் உதாரணமாக ஒரு குழந்தை தவறாக ஏதேனும் ஒரு நாணயத்தை விழுங்கி விட்டது என்று வைத்துக் கொள்வோம் அந்த குழந்தை விழுங்கிய நாணயத்தை கக்கும் வரை கடும் பிரயத்தனத்தை செய்வோம் கக்கும் சமயம் குழந்தைக்கும் வலி வேதனையை தரும் ஆனால் கக்கி விட்டால் அதற்கு பிறகு நிலைமை மெல்ல மெல்ல சரியாகும் இல்லையா அது போல கொரோனா வைரஸ் தொற்றும் தனது விஷத்தை  தீவிரமாக கக்கும் சமயம் 19-06-2020 அது உலகில் மரண எண்ணிக்கையில் ஏற்படுத்திய மொத்த தாக்கம் காரணமாக உலக மக்களுக்கு கடும் வேதனையை உண்டாக்கும், துன்பத்தின் உச்சத்தில் தான் அந்த துன்பத்தில் இருந்து தப்பிக்க வழி பிறக்கும் என்று சொல்வார்கள் அது போல 19-06-2020 பிறகான காலங்களில் world attaining or achieving life surviving power அதாவது உலக மக்கள் இந்த பிரச்சினையிலிருத்து தப்பி உயிர்வாழும் சக்திக்கான அந்த மருந்தையோ அல்லது தடுப்பு ஆற்றலையோ அடையும்.

07-07-2020 - தேவமாதா அதிதி நட்சத்திரத்தில் ராசி மண்டலத்தில் ஐராவத வீதி தொடங்கும் பகுதியில் ராகுவை விட்டு நீங்கி குறிபிட்ட பாகையை தாண்டி சூரியன் தனது பயணத்தை தொடங்க ஆரம்பிக்கும் காலம் எனவே அதற்கு பின் ஆத்மகாரகன் சூரியனின் மறுபடியும் புதுபிக்கபட்ட ஒளி பிறக்கும் அது 07-07-2020 பிறகு தான் நிகழும், அதிலிருந்து will start to unimpaired condition. maximum freedom, begin of wealth gain, safety அதாவது சீர்குலைவற்ற நிலை துவங்கும். அதிகபட்ச சுதந்திரம், மறுபடியும் செல்வம் (பணம்) சேர்க்க ஆரம்பம், பாதுகாப்பு ஆகியவை உலக மக்களுக்கு பொதுவாக கிடைக்க ஆரம்பிக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

இந்திய பங்குச்சந்தைகளை தாக்கி உள்ள கொரானோ வீழ்ச்சி எப்போது முடியும்… When will India's Share Market Downtrend Stop in Tamil...


இந்திய பங்குச்சந்தைகளை தாக்கி உள்ள கொரானோ வீழ்ச்சி எப்போது முடியும்…

இந்திய பங்குச்சந்தைகள் தனது உச்சத்தில் இருந்து சுமார் 40 சதவீத மதிப்பு விலை வீழ்ச்சியை  கண்டு உள்ளன, இந்திய பங்குச்சந்தைகள் சுமார் 4 வருடங்களுக்கு ஒரு முறை சிறிய Correction ஆகும் 8 வருடங்களுக்கு ஒரு முறை பெரிய Correction என்று சொல்லக்கூடிய நிலைதிருத்தம் ஏற்படும் என்று பொதுவாக சொல்லுவார்கள் அதாவது 2000 த்தில் கண்ட வீழ்ச்சி 2004 க்கு மேல் தான் அதன் போன உச்சத்தை தாண்டியது, 2008 ல் கண்ட பெரிய வீழ்ச்சி 2012 க்கு மேல் தான் அதன் போன உச்சத்தை தாண்டியது, 2016 ல் கண்ட சிறிய வீழ்ச்சி 2017ல் ஒரு வருடத்திற்குள்ளேயே அதன் போன உச்சத்தில் இருந்து மீண்டது எனவே இரண்டு வருடம் இருக்க வேண்டிய Correction செயல்பாடு  ஒரு வருடத்திற்குள்ளேயே முடிந்து விட்டதால் இந்திய பங்குச்சந்தை பெரிய Correction (நிலைதிருத்தம்) ஆக காத்துக் கொண்டிருந்தது அதற்கு உகந்த சமயமாக இந்த கொரானோ வைரஸின் தாக்கம் மற்றும் அதன் பின்விளைவாக உலக பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள கடும் தாக்கமும் இந்திய பங்குச்சந்தை பெரிய Correction (நிலைதிருத்தம்) ஆகும் சமயமாக அமைந்து போய் உள்ளது.

தற்சமயம் 14-Jan-2020 அன்று தேசிய பங்குச்சந்தை தனது உச்ச அளவை அடைந்தது அதாவது 12362 எண் மதிப்பை அடைந்தது அதில் இருந்து தற்சமயம் 23-Mar-2020 அன்று 7610  என்ற எண் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது இந்த Correction என்பது சுமார் 38 சதவீத Correction ஆகும். ஏற்கெனவே இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது அத்துடன் இந்த கொரானோ வைரஸின் தாக்கம் மற்றும் அதன் பின்விளைவாக இந்திய நாட்டில் எடுக்கபடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை அனைத்தும் இந்திய பொருளாதார நிலையை மேலும் சரித்துள்ளது, மேலும் உலக பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள கடும் தாக்கம் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தையும் மேலும் பாதிக்கலாம், அத்துடன் இந்தியாவுக்கு வெளியே தங்கி வேலை செய்யும் இந்தியர்களின் வருமான வரவுகள் பாதிக்கும், மேலும் இந்தியாவிற்குள் பெரும்பாலான மக்களின் வேலைகள் தடைபட்டு போய் உள்ளதால் ஏற்படும் உள்நாட்டு உற்பத்தி குறைபாடு மற்றும் இந்தியர்களின் செலவு செய்யும் போக்கில் அத்தியாவசியமான பொருட்களே முதன்மையாக இடம் பெறும் அத்தியாவசியமற்ற பொருட்கள் தவிர்க்கபடும் இவை அனைத்தும் சேர்ந்து இந்திய பெரு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

2000 த்தில் உச்சத்தில் இருந்த சந்தை வீழ்ச்சி காண ஆரம்பித்த போது கிரக நிலைகள் - 

2004 ல் பங்குச்சந்தை உச்சத்தில் இருந்த போது  கிரக நிலைகள் - 
2008 ல் உச்சத்தில் இருந்த சந்தை வீழ்ச்சி காண ஆரம்பித்த போது கிரக நிலைகள் -
2008 ல் பங்குச்சந்தை ஏற்பட்ட கடும் வீழ்ச்சி முடிந்து 2009 ஏற்றம் ஆரம்பித்த போது கிரக நிலைகள் - 
2016 ல் கண்ட சிறிய வீழ்ச்சி கிரக நிலைகள் -  
2016 ல் கண்ட சிறிய வீழ்ச்சி 2017ல் ஒரு வருடத்திற்குள்ளேயே அதன் போன உச்சத்தில் இருந்து மீண்டது அதற்கு பிறகு பெரிய Correction ஆகாமல் Jan-2020 அன்று தேசிய பங்குச்சந்தை தனது உச்ச அளவை அடைந்தது  தனது உச்ச மதிப்பை அடைந்த போது கிரக நிலைகள் -
 
1998 ல் இருந்து பங்குச்சந்தையின் பெரிய ஏற்றம் மற்றும் பெரிய இறக்கங்களை கிரகநிலை ஆய்வுகளாக செய்து வைத்திருக்கிறேன் அதன் படி பார்க்கும் போது கொரானோ வைரஸின் தாக்கம் மற்றும் அதன் பின்விளைவாக உலக பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள கடும் தாக்கமும் இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள பெரிய Correction (நிலைதிருத்தம்) முடிய நீண்ட காலம் எடுக்கலாம் சரி இனி என்ன ஆகலாம் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டியவை என்ன என்ன வரிசையாக பார்க்கலாம்


1) ஒரு சில நிறுவனங்களின் வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை போன்றது அல்ல இப்போது பங்குசந்தையில் ஏற்பட்டிருக்கும் விலை வீழ்ச்சி விளைவு.
2)  ஒரு சில குறிபிட்ட துறையை சார்ந்த பல நிறுவனங்களின் வீழ்ச்சியால் நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற பொருளாதார பின்னடைவு நிலை போன்றது அல்ல இப்போது பங்குசந்தையில் ஏற்பட்டிருக்கும் விலை வீழ்ச்சி விளைவு.

3) அரசியல் மற்றும் அரசாங்க ஸ்திர தன்மை அற்ற போதோ அல்லது ஒரு சில நாட்டின் போர்களால் ஏற்படும் சூழ்நிலைகளால் ஏற்படும் பொருளாதார பின்னடைவு நிலை போன்றது அல்ல இப்போது பங்குசந்தையில் ஏற்பட்டிருக்கும் விலை வீழ்ச்சி விளைவு.

4) இது அசாதாரணத்திலும் அசாதாரணமான extraordinary abnormal சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பங்குசந்தை வீழ்ச்சி ஆகும் பல நாட்டு பொருளாதாரம் மற்றும் அதன் பெரு நிறுவனங்களின் நிதிநிலைமைகளை, வரவு செலவு கணக்குகளை புரட்டி போடும் மாற்றங்களை செய்ய காத்திருக்கும் பொருளாதார சூழ்நிலை ஆகும்.

5) எனது கணிப்பின் படி கொரோனா வைரஸின் தாக்க வீரியம் முடியும் காலம் 07-07-2020 அன்று தமிழ் தேதி ஆனி 23 க்கு பிறகு தான் கொரோனா வைரஸின் தாக்கம் கணிசமான அளவில் குறைய தொடங்கும்  விரிவான பதிவை இந்த லிங்கில் காணலாம் - http://www.jodhishsivam.com/2020/03/blog-post_15.html

6) மேலும் எனது கணிப்பின் படி இந்த கொரோனா வைரஸால் இறப்பு அதிக பட்ச ஐந்து இலக்க எண்ணை தொடலாம் மேலும் கொரோனா வைரஸின் தாக்க வீரியம் உலகின் முக்கிய முன்னேறிய பொருளாதார நாடுகள் ஆன சில ஐரோப்பா நாடுகள், யுனைடெட் ஸ்டேட்ஸ் அமெரிக்கா (USA இறப்பு எண்ணிக்கை 1000 தொட்டுள்ளது), சீனா போன்ற பிரதேசங்களை கடுமையாக தாக்கலாம்.

7) அதன் படி 07-07-2020 அதற்கு மேல் கொரோனா வைரஸின் தாக்கம் கணிசமான அளவில் குறைய தொடங்கினாலும் அதன் பின்விளைவால் உலக பொருளாதார பின்னடைவு நிலை என்பது உடனே முடிந்து விடாது மேலும் நிறுவனங்களின் வருவாய் ஈட்டும் அளவின் உயர்வு என்பதும் உடனே அதிகரித்து விடாது.

8) July-2020 கடைசி இரண்டு வாரங்களில்  மற்றும் ஆகஸ்ட் முதல் வாரம் பங்குச்சந்தை வர்த்தக விவரங்களை மிகவும் கவனமாக கவனித்தே செய்ய வேண்டும். கொரோனா வைரஸால் ஏற்படும் நோயிற்கு நிரந்தர தீர்வு தீர்க்கமான தீர்வு ஏற்படும் வரை வதந்திகளை நம்பியோ அல்லது முழு பயன்தராத செய்திகளை நம்பியோ பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் போது மிக ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளை மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு அணுக வேண்டும். அந்த சமயத்தின் சூழ்நிலைகளை அறியாத நபர்கள் சற்று விலகியிருந்து கூட நிலைமைகளை கண்காணிக்கலாம்.

8) வீழ்ச்சி அலையின் முதல் பரிமாணமே இப்போது முடிந்துள்ளது பெரும் வீழ்ச்சி அலைகள் முடிவில் உடனடியாக சம அலைகளாகவோ அல்லது ஏற்ற அலைகளாகவோ உருவாகிவிடாது, சில ஏற்ற அலைகளை காட்டலாம் ஆனால் அது ஸ்திரமான ஏற்றம் ஆகாது எனவே வீழ்ச்சி அலையின் முதல் பரிமாணம் தான் இப்போது முடிந்துள்ளது இன்னும் இரண்டு அல்லது மூன்று பரிமாணங்கள் பாக்கி இருக்கலாம்.

9) 2008 ன் பெரும் வீழ்ச்சியை கணிக்கில் கொண்டு பார்த்தால் தற்போது ஏற்பட்டுள்ள இந்திய தேசிய பங்குச்சந்தை (NSE) பெரும் வீழ்ச்சி என்பது இரண்டு தடுப்புகள் தடுத்து நிறுத்தபடலாம்

10) இந்திய தேசிய பங்குச்சந்தை (NSE) முதல் தடுப்பு 6000 to 6100 வரை உள்ளது இரண்டாம் தடுப்பு 4500 ல் உள்ளது. சூழ்நிலை இன்னும் மோசமானால் இரண்டாம் தடுப்பு வரை சந்தை மதிப்பு போகலாம்.

11) 03-01-2021 வரை இந்திய பங்குச்சந்தைகளுக்கு downtrend (சரிவுப் போக்கு)  இருக்கலாம்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger