வேலைவாய்ப்பின்மை நிலைமையின் காரணம், வேலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ள நபர்கள், சுதேசி பொருளாதாரம் மலர வேண்டியது காலத்தின் தேவை….

வேலைவாய்ப்பின்மை நிலைமையின் காரம், வேலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ள நபர்கள், சுதேசி பொருளாதாரம் மலர வேண்டியது காலத்தின் தேவை…. [The reason of the unemployment situation. Persons who are likely to be unemployed. The Indian native economy needs to blossom]


கொரானாவின் தாக்கம் உலக நாடுகள் மற்றும் இந்திய நாட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது உயிர் இழப்புகள் உலக அளவில் 5 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது, இந்திய அளவில் பார்க்கும் போது 20 ஆயிரத்தை கடந்து போகிறது, கொரானா தொற்று நோயின் தாக்கங்களை பற்றி எமது வலைதளத்தில் மார்ச் மாதத்திலேயே முக்கிய இரண்டு ஜோதிட கட்டுரைகளை வழங்கி இருந்தேன் அதில் ஜூலை மாதம் வரை கொரானா தொற்று நோயின் தாக்கம் uptrend ல் அதாவது ஏற்ற போக்கில் தான் இருக்கும் என்று மார்ச் மாதத்திலேயே கூறியிருந்தேன் இனி வருகிற ஆகஸ்ட மாதத்திற்கு பிறகு அதாவது உலக மக்கள் இந்த பிரச்சினையிலிருத்து தப்பி உயிர்வாழும் சக்திக்கான அந்த மருந்தையோ அல்லது தடுப்பு ஆற்றலையோ அடைவார்கள் என்று கூறியிருந்தேன்.

 

கொரானாவின் தாக்கத்தால் மக்கள் அவதிபட்டுக்கொண்டிருந்த காரணத்தால் கடந்த மூன்று மாதங்களாக எந்த ஜோதிட பதிவுகளையும் கொடுக்க எனது மனம் உடன்படவில்லை இனி வரும் காலங்களில் கொரானாவின் தாக்கம் குறையலாம் என்று கருதி இனி ஜோதிட பதிவுகளை கொடுக்கலாம் என்று கருதுகிறேன். கொரானா நோயின் தாக்கத்தால் மனிதர்களின் உடல்நலம் மட்டும் சரிந்து கிடக்கவில்லை நம் நாட்டின் பொருளாதாரமும் சரிந்து தான் கிடக்கிறது அதன் விளைவாக நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

 

இந்தியர்களின் அதிகபட்ச இறக்குமதியும் இதற்கு ஒரு காரணமாக தெரிகிறது முக்கிமாக நம் நாட்டிற்கு வேலை வாய்ப்பை தரும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறையினரின் உற்பத்தி பொருட்களை இந்திய சந்தையில் சீன தேசத்தினர் நம்மை விட மலிவு விலைக்கு விற்பதாக சொல்லி அதே பொருட்களை சீனாவில் தயாரித்து நமது சந்தையில் விற்று இந்தியாவின் நடுத்தர மற்றும் மித பணக்கார வர்க்கத்தினரின் பணத்தை தங்களின் நாட்டிற்கு நீண்ட காலமாக கொண்டு சென்று வருகின்றனர் அதனால் இந்தியாவின் நடுத்தர மற்றும் மித பணக்கார வர்க்கத்தினரிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது, இந்தியர்களிடம் பணப்புழக்கம் குறைந்தால் பொருட்களை வாங்கும் சக்தி குறையும் பொருட்களை வாங்கும் சக்தி குறைந்தால் உற்பத்தி குறையும் உற்பத்தி குறைந்தால் வேலையின்மை விகிதம் அதிகரிக்கும், ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்திருந்த காலத்தில் சுதேச பொருட்களை வாங்க சொல்லி இந்தியர்களிடம் எழுந்திருந்த கோஷத்திற்கு என்ன அடிப்படை காரணம் இருந்ததுவோ அதே காரணம் வேறுவிதத்தில் தற்போது நாட்டில் ஏற்பட உள்ளது.


இதை இப்போது ஆளும் மத்திய அரசு மேலும் இனி அடுத்து ஆள வரும் மத்திய அரசாங்கம் இந்த மாற்றத்தை தற்சார்பு பொருளாதாரம் (Self-sufficiency Economy or Independent Economy) என்று அழைக்கும்,


தற்சார்பு பொருளாதாரம் என்றால் ? -

மற்ற நாடுகளை சார்ந்து இருக்காமல் நம் நாட்டிற்கு வேண்டிய பொருட்களை நாமே உற்பத்தி செய்வது மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை நம் நாட்டிலேயே விற்பதற்கான சந்தை நிலைமையை ஏற்படுத்துவது மேலும் இறக்குமதி செய்யும் நிலையில் உள்ள பொருட்களையும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய முயற்சிப்பது. நாம் நாட்டின் பொருளாதாரம் அதாவது பண வளம் வேறு ஒரு நாட்டின் ஈட்டு லாபமாக மாறாமல் நம் நாடு பொருளாதார தன்னிறைவு காண்பது. சுயாதீனமான தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்ற கொள்கைகளை மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வது ஆகியவை தான் தற்சார்பு பொருளாதாரம் (Self-sufficiency Economy or Independent Economy) ஆகும்.


சரி இப்போது நான் பேச எடுத்துள்ள விஷயத்திற்க்கு வருகிறேன் எவருக்கும் எதனால் எந்த நிலையில் ஜாதகத்தில் வேலையின்மை ஏற்படுகிறது என்பதை தான் பார்க்க போகிறோம் 

 

ஒருவரது ஜாதக கட்டத்தில் 12 ஸ்தானங்களில் கர்ம ஸ்தானம் அதாவது வேலை வீடு என்று அழைக்கப்படக்கூடிய வீடு 10 ஆம் ஸ்தானம் ஆகும் அந்த 10 ஆம் ஸ்தானம் மற்றும்10 ஆம் ஸ்தானத்தை பார்க்கும் கிரகங்கள், 10 ஆம் ஸ்தானத்தின் அதிபதி மற்றும் 10 ஆம் ஸ்தானத்தின் அதிபதியுடன் சேரும் கிரகங்கள், அந்த கிரகம் அமைந்த விதம் இதன் பலத்தை பொருத்து பலருக்கு அவர் அவர்  வேலைவாய்ப்பின் பலம் அமைந்து வரும். மேலும் ஒருவரது ஜாதக கட்டத்தில் 12 ஸ்தானங்களில் லாப ஸ்தானம் அதாவது வருமான வீடு என்று அழைக்கப்படக்கூடிய வீடு 11 ஆம் ஸ்தானம் ஆகும் அந்த 11 ஆம் ஸ்தானம் மற்றும்11 ஆம் ஸ்தானத்தை பார்க்கும் கிரகங்கள், 11 ஆம் ஸ்தானத்தின் அதிபதி மற்றும் 11 ஆம் ஸ்தானத்தின் அதிபதியுடன் சேரும் கிரகங்கள், அந்த கிரகம் அமைந்த விதம் இதன் பலத்தை பொருத்து பலருக்கு அவர் அவர் வேலைவாய்ப்பில் சம்பளம் மற்றும் வருமான பலம் அமைந்து வருகிறது..... மீதி வீடியோவில்



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "வேலைவாய்ப்பின்மை நிலைமையின் காரணம், வேலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ள நபர்கள், சுதேசி பொருளாதாரம் மலர வேண்டியது காலத்தின் தேவை…."

கருத்துரையிடுக

Powered by Blogger