12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் சந்திரனின் ஆட்சி, உச்ச, நீசம் பெறும் ஸ்தானங்கள்..


12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் சந்திரனின் ஆட்சி, உச்ச, நீசம் பெறும் ஸ்தானங்கள்...

மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 1 (லக்ன) ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  லக்ன ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 12 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 10 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 11 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் – 3 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  10 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் – 2 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் – விருச்சிக லக்ன ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 8 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 6 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் – 10 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 3 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.



திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...

நட்சத்திரம் - திருவாதிரை
நட்சத்திர ஆதிபத்ய கிரகம் - ராகு
நட்சத்திர அதிதேவதைகள்  - ருத்திரன், பைரவர்
நட்சத்திர யோனி - ஆண் நாய்
நட்சத்திர கணம் - மனுஷ கணம்
நட்சத்திர பூதம் - நீர்
நட்சத்திரத்தின்இராசி இருப்பு - மிதுனம் ராசி
இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - மிதுன ராசியில் 66:40:00 முதல் 80:00:00 பாகை வரை
இராசி நாதன் - புதன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு திருவாதிரை நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம இராசி மிதுனம் இராசியாகும்.
பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.



திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் ஆறாவது நட்சத்திரமாக இருக்கும் திருவாதிரையில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் வெளியில் பார்ப்பதற்கு ஒரு மாதிரியான மனமும் உள்ளே அதற்கு சற்று முரணான குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் உதாரணமாக ஒருவர் வெளியில் பார்ப்பதற்கு முரட்டுதனமான ஆள் போல தோன்றுவார் ஆனால் நன்றாக பழகி பார்க்கும் போது தான் தெரியும் அவர் பாசமான, ஈரமான மனத்தை உடையவர் என்று இது போல வித்தியாசங்கள் இருக்கலாம். பிடிவாதமானவராக இருக்கலாம், எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பதை போல உடனடியாக விஷயங்களை நம்பமாட்டார்கள் நம்பி விட்டால் பின் யோசிக்காமால் இறங்கிவிடுவார்கள். ருத்ர என்றால் ஓங்கி ஒலிப்பது என்றும் பொருள் வரும் எனவை இந்த நட்த்திரத்தில் பிறந்தவர்கள் சற்று உரக்க பேசுவது என்பது வாடிக்கையாக இருக்கும். சங்கடப்படும் அளவுக்கு அல்லது சங்கடமான கேள்விகளையும் துணிந்து கேட்கக்கூடியவர், தன்னையும் குழப்பி மற்றவரையும் எளிதில் குழப்பு வல்லமை உண்டு. தவறு கண்டால் அல்லது முறைமாறினால் கோபம் கொள்வார், பலமான ஆற்றல் அல்லது தைரியம் பெற்றவர். அதே போல சிலர் அமைதியானவர்கள் போல தெரிவார்கள் ஆனால் தன் காரியம் என்று வந்துவிட்டால் மிக வேகம் காட்டுவார்கள். வன்முறையான, கடுமையான குணங்கள் சில இருக்கலாம். அதே போல துரோகத்தை ஒரு போதும் பொருத்து கொள்ள மாட்டார்கள். தக்க பதிலடி கொடுப்பதில் வல்லவர்கள். தீர்மானித்த காரியத்தை செய்து முடிக்க கடுமையாக உழைப்பாரகள். சில அத்துமீறலான நடவடிக்கையிலும் பயப்படாமல் ஈடுபட்டுவிடுவார்கள். ஆன்மீகத்தில் இவர்கள் சத்தியத்தை உணர்வதிலும் உரைப்பதிலும் வல்லவர்கள் என்று அழைக்கபடுகிறது அதாவது தன் மனதுக்கு உண்மை என்று பட்ட விஷயத்திற்காக பயபடாமல் உழைக்க அல்லது போராடக் கூடியவர்கள். ஆக்கும் ஆற்றலை காட்டிலும் அழிக்கும் ஆற்றல் நிரம்ப பெற்றவர்கள் உதாரணமாக உடைக்கூடிய பொருட்கள் இவர்களின் கைகளுக்கு வந்தால் சீக்கிரம் உடைத்து விடுவார்கள். They have passionate and sharp personalities to do anything neither a good nor a bad. 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்கள் -
அசைவ உணவை உண்ணக்கூடிய குடும்பத்தில் பிறந்திருப்பார்களானால் ருசியான எல்லா அசைவ வகை உணவுகளை விரும்பி உண்பார்கள். அதே போல சைவ உணவை உண்ணக்கூடிய குடும்பத்தில் பிறந்திருப்பார்களானால் நீரில் அல்லது ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாபம், புட்டு போன்ற வகைகளிலின் மீது நாட்டம் இருக்கும். மேலும் பொதுவாக காரம் சுவை கூட்டபட்ட உணவுகள். குளிர்ச்சியான அமிலவகை பழங்கள் மற்றும் பழச்சாறுகள். அதே போல சர்க்கரை, வெல்லம் அல்லது கருப்பட்டி போன்றவற்றில் ஊற வைக்கபட்ட இனிப்பு வகைகள் பிடிக்கும். தற்காலத்தில் கேக், ஐஸ் கீரிம் போன்ற வகைகளும் பிடிக்கலாம். உலர்ந்த பருப்புகள் மற்றும் பழவகைகள். புளிப்பு சுவையுடன் கூடிய இனிப்பு மற்றும் காரவகைகள் பிடிக்கலாம். ஆவி பறக்கும் சூப்கள் பிடிக்கலாம். சிலருக்கு பாரம்பரிய நீராகாரங்கள் பிடிக்கும். பொதுவாக சொல்வதானால் தாமஸ மற்றும் ராட்ச குண உணவு வகைகளை கலவையாக உண்பார்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தி அடைந்த அடியார்கள் & மகான்கள் -
அரிவட்டாயர், கணநாதர், கூற்றுவர், சடைய நாயனார், விறன்மிண்ட நாயனார் போன்றோர்கள் மற்றும் வைணவத்தில் முக்கியஸ்தரான ராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார்.


அரசியல், அரசு பணிகளுக்கான நவகிரகங்களின் துறைகள், இலாகாகள்...

ஜோதிடமும் அரசியலும் பகுதி 4 - அரசியல், அரசு பணிகளுக்கான நவகிரகங்களின் துறைகள், இலாகாகள்... (Navagraha Departments and portfolio of political and government services in Tamil)

இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும், வல்லது-அரசு.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு

கூழும் குடியும் ஒருங்கு இழக்கும்-கோல் கோடி,
சூழாது, செய்யும் அரசு.

அரசியல் பணி, அரசு பணி செய்பவர்க்கு திருக்குறள் சுட்டிக்காட்டும் நெறிமுறைகள் உள்ளன, அந்த மண்ணை சார்ந்த மக்கள் அந்த மண்ணுக்குரிய அரசியலை செய்யாமல் விட்டுவிட்டால் அந்த நிலத்தை இழப்பார்கள், அதே போல அந்த மண்ணை சார்ந்த மக்கள் அந்த மண்ணுக்குரிய அரசு பணிகளில் சேர்ந்து உழைக்காவிட்டால் தங்கள் சுதந்திரத்தையும் தங்கள் நிலத்தின் வளமையையும் இழப்பார்கள். எனவே நேர்மையான அரசியலில் ஈடுபடுவதும் மற்றும் அரசு பணிகளில் ஆர்வமாக சேர்ந்து நேர்மையாக உழைப்பதுவும் அந்த அந்த மண்ணை சார்ந்த மக்களுக்கு மிக முக்கியமான கடமையாகும் இவ்வாறு இருந்தாலும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இலக்கை வைத்திருப்பார்கள் உதாரணமாக ஒருவருக்கு சிறந்த தொழில் முனைவராக வர வேண்டும் என்று ஆர்வம் இருக்கும் அவரை வலுவாக  அரசு மற்றும் அரசியலில் நுழை வைக்க முடியாது எனவே அரசு மற்றும் அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் அந்த அந்த பணிகளில் சேர கடுமை உழைக்க வேண்டும் பணிகள் கிடைப்பது என்பது இறையருள் மற்றும் அவர் அவரின் வினை குவியலை பொறுத்தது. இப்போது நாம் பார்க்க இருப்பது ஜோதிடமும் அரசியலும் பகுதி 4 - அரசியல், அரசு பணிகளுக்கான நவகிரகங்களின் வழியாக சுட்டுகாட்டப்படும் துறைகள், இலாகாகள் அதாவது ஒவ்வொரு கிரகங்களும் எந்த அரசியல், அரசு பணி துறைகள், இலாகாகளுக்கு ஆதாரமாக இருக்கின்றன என்பதை இப்போது பார்ப்போம்... மீதி காணொளியில் (Video)..



12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் சூரியன் கிரகம் ஆட்சி, உச்ச, நீசம் பெறும் வீடுகள்..


12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் சூரியன் கிரகம் ஆட்சி, உச்ச, நீசம் பெறும் வீடுகள்..




- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


நல்ல குருவிற்கு அல்லது நல்ல குரு அமைவதற்கு - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு...

நல்ல குருவிற்கு அல்லது நல்ல குரு அமைவதற்கு - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு...


குரு - வியாழன், ப்ரஹஸ்பதி, தேவகுரு, பரவித்யாதரன் என்றெல்லாம் அழைக்கபடும் குரு பகவான் வேதஜோதிடத்தின் படி ஞானக் களஞ்சியமாக திகழ்பவர், வேத வித்தகன், பெரிய அறிவாளி, பிரார்த்தனை அல்லது பக்தியின் காரகன், இவரின் எண்ணங்களே கடவுளர்களின் செயலாகும் என்று வேதஜோதிடம் குருவை சிறப்பிக்கும்.

இன்னும் சொல்வதானால் வியாழன் என்ற பெரிய கோளைத் தான் நாம் குரு என்று ஜோதிட படி அறிவிக்கிறோம், குரு என்பது உயரிய, பெரிய, கனமான பளுவான என்றும் அர்த்தபடுகிறது, இது அக புற அறிவுக்கு மிக முக்கியத்துவம் தரப்படுகிற கிரகம், மேலும் குரு ஏன்றால் ஆன்மீக ஆசிரியர், ஆசான், மரியாதை தரதக்கவர், பரந்த உணர்வு மற்றும் அறிவு இருக்க்கூடியவர், கு + ரு = குரு ஆனது இதில் ’கு’ என்றால் உயர்ந்த மேம்பட்ட என்று பொருள் ‘ரு’ என்றால் வழிகாட்டி என்று பொருள் அதாவது உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுபவர் என்று பொருள், ஒருவருக்கு மிக நல்ல நிலையில் இருந்தால் மோட்சத்துக்கு வழிகாட்டி கூட்டிப்போகிறவரும் இவரே.

ஜோதிடத்தில் குரு முக்கியம் அது போல ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் குரு என்பவர் முக்கியமான தேவை ஆகும் சமஸ்கிருதம் மாதா பிதா குரு தெய்வம் என வரிசைபடுத்துகிறது, குருமார்களின் பரம்பரைக்கு போற்றி சொல்லியே அத்தனை பாடங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்பதை மரபாகவைத்திருக்கின்றனர் இன்றும் நம் பெரியோர்கள் அது போல தமிழில் குருவின் பெருமையை திருமூலர் இவ்வாறு கூறுகிறார் -

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என்பது குறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.

குருவே சிவம் என்று கூறுகிறார் அதாவது ஒருவருக்கு மாதா அன்பை போதிப்பார் தன் வீட்டளவில் தான், தந்தை அறிவை போதிப்பார் தன் சுற்றத்தாரின் அளவிற்கு தான் ஆனால் குருவோ அன்பையும் அறிவையும் சேர்த்து போதிப்பார் உலக அளவிற்கு ஆம் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பார் குரு, குருவின் பெருமை இவ்வளவு உயர்வாக இருந்தாலும் காலம் கலியின் காலமாக இருப்பதால் அதாவது கலியின் காலம் என்றால் எதற்கும் அளவுக்கு மீறி ஆசை படுதல் மற்றும் தர்மங்களை மீறிய ஆசைபடுதல் செயல்படுதல் இது தான் கலியின் காலம் என்பர் சான்றோர்கள் எனவே அறிவையும் படிப்பையும் போதிக்கும் குருவானாலும் சரி ஆசிரியர்கள் ஆனாலும் சரி தற்காலத்தில் நன்கு ஆராய்ந்து தான் ஒருவரை ஆசிரியராக வேலைக்கு சேர்க்க வேண்டி உள்ளது அது போல நன்கு ஆராய்ந்து தான் ஒரு பள்ளியிலேயே பிள்ளைகளை சேர்க்க வேண்டியும் உள்ளது.

அது போலவே ஆன்மீக கல்வி அறிவை போதிக்கும் ஞான குருவை அணுக நினைத்தாலும் நன்கு ஆராய்ந்து தான் அணுக வேண்டும் இதையும் திருமூலரே கூட கூறுகிறார் -

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி அறியச் சிவபதந் தானே.

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக என்கிறார் வாழ்க்கை பாடம் ஆனாலும் சரி அல்லது ஆன்மீக பாடம் ஆனாலும் சரி நன்கு ஆராய்ந்து நல்ல குருவை சென்று அடைய வேண்டும் என்று கூறுகிறார் மேலும் தமிழ் மரபுவழி கல்வி முறை என்பது வெறும் ஆசிரியர் போதிக்க புத்தகங்களை பார்த்து படிப்பது அதற்கு விளக்கத்தை ஆசிரியரிடம் கேட்பது மட்டும்  தமிழ் மரபுவழி கல்வி முறை அல்ல அதாவது பார்த்து படிப்பது மட்டும் பத்தாது ஆசிரியரை அல்லது குருவை பார்த்து பழகவும் வேண்டும் குருவும் செயல்முறையாக தனது வாழ்க்கையை தர்மத்தை அறிவை வெளிப்படுத்தும் வகையில் அமைத்து கொள்ள வேண்டும்.

சரி நல்ல குரு வாழ்வில் அமைய ஜாதகத்தில் அடிப்படையாக என்ன என்ன அம்சங்கள் சிறந்து இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

லக்னம், 5, 9 ஆகிய ஸ்தானங்கள் குருவிற்கும் நல்லவிதமாக அமைந்திருக்க வேண்டும் சிடருக்கும் நல்லவிதமாக அமைந்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் தர்மம் பலப்படும் மற்றும் அப்போது தான் பாரம்பரிய மரபும் நல்லவிதமாக தொடரும். தர்மத்தை போதிப்பவனே மெய்யான குரு என்ன சார் எதற்கெடுத்தாலும் தர்மம் தர்மம் என்று சொல்லுகிறீர்களே என்று கேட்க உங்களுக்கு தோன்றலாம் அதாவது கடவுளை கூட ATM மெஷின் மாதிரி பார்க்க ஆரம்பித்தவிட்ட காலம் ஆகிவிட்டது எத்தனை கேட்டாலும் கடவுள் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் இந்த மாதிரியான காலத்தில் தர்ம படி வாழ், அதிகமாக ஆசைபடாதே என்று சொல்லுவது நல்ல குருமார்கள் தான்.

நல்ல குருவிற்கு அல்லது நல்ல குரு அமைவதற்கு சில அமைப்புகளை இப்போது மேலும் பார்க்க காணொளி (video) யில் -  


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


நவகிரகங்கள் வலிமையடையும் நாளின் கால பொழுதுகள்...

நவகிரகங்கள் வலிமையடையும் பொழுதுகள்...

நவகிரகங்கள் ஒரு நாளில் வரும் கால பொழுதுகளில் எந்த எந்த பொழுதுகளில் எந்த எந்த கிரகங்கள் வலிமையடையும் என்பதை விளக்கும் காணொளி (video)...



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger