திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
நட்சத்திரம் - திருவாதிரை
நட்சத்திர ஆதிபத்ய கிரகம் -
ராகு
நட்சத்திர அதிதேவதைகள் - ருத்திரன், பைரவர்
நட்சத்திர யோனி - ஆண் நாய்
நட்சத்திர கணம் - மனுஷ கணம்
நட்சத்திர பூதம் - நீர்
நட்சத்திரத்தின்இராசி இருப்பு - மிதுனம் ராசி
இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - மிதுன ராசியில் 66:40:00 முதல்
80:00:00 பாகை வரை
இராசி நாதன் - புதன்
சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு
திருவாதிரை நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம இராசி மிதுனம் இராசியாகும்.
பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் ஆறாவது நட்சத்திரமாக இருக்கும் திருவாதிரையில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் வெளியில்
பார்ப்பதற்கு ஒரு மாதிரியான மனமும் உள்ளே அதற்கு சற்று முரணான குணமும்
கொண்டவர்களாக இருப்பார்கள் உதாரணமாக ஒருவர் வெளியில் பார்ப்பதற்கு முரட்டுதனமான
ஆள் போல தோன்றுவார் ஆனால் நன்றாக பழகி பார்க்கும் போது தான் தெரியும் அவர் பாசமான, ஈரமான மனத்தை உடையவர் என்று இது
போல வித்தியாசங்கள் இருக்கலாம். பிடிவாதமானவராக
இருக்கலாம், எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு என்பதை போல உடனடியாக விஷயங்களை நம்பமாட்டார்கள் நம்பி
விட்டால் பின் யோசிக்காமால் இறங்கிவிடுவார்கள். ருத்ர என்றால் ஓங்கி ஒலிப்பது என்றும் பொருள் வரும் எனவை இந்த
நட்த்திரத்தில் பிறந்தவர்கள் சற்று உரக்க பேசுவது என்பது வாடிக்கையாக இருக்கும். சங்கடப்படும் அளவுக்கு அல்லது
சங்கடமான கேள்விகளையும் துணிந்து கேட்கக்கூடியவர், தன்னையும் குழப்பி மற்றவரையும் எளிதில் குழப்பு வல்லமை உண்டு. தவறு கண்டால் அல்லது முறைமாறினால்
கோபம் கொள்வார், பலமான ஆற்றல் அல்லது தைரியம்
பெற்றவர். அதே போல சிலர் அமைதியானவர்கள் போல
தெரிவார்கள் ஆனால் தன் காரியம் என்று வந்துவிட்டால் மிக வேகம் காட்டுவார்கள். வன்முறையான, கடுமையான குணங்கள் சில இருக்கலாம். அதே போல துரோகத்தை ஒரு போதும்
பொருத்து கொள்ள மாட்டார்கள். தக்க
பதிலடி கொடுப்பதில் வல்லவர்கள். தீர்மானித்த
காரியத்தை செய்து முடிக்க கடுமையாக உழைப்பாரகள். சில அத்துமீறலான நடவடிக்கையிலும் பயப்படாமல் ஈடுபட்டுவிடுவார்கள். ஆன்மீகத்தில் இவர்கள் சத்தியத்தை
உணர்வதிலும் உரைப்பதிலும் வல்லவர்கள் என்று அழைக்கபடுகிறது அதாவது தன் மனதுக்கு
உண்மை என்று பட்ட விஷயத்திற்காக பயபடாமல் உழைக்க அல்லது போராடக் கூடியவர்கள். ஆக்கும் ஆற்றலை காட்டிலும்
அழிக்கும் ஆற்றல் நிரம்ப பெற்றவர்கள் உதாரணமாக உடைக்கூடிய பொருட்கள் இவர்களின்
கைகளுக்கு வந்தால் சீக்கிரம் உடைத்து விடுவார்கள். They have passionate and sharp personalities to do anything neither
a good nor a bad.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்கள் -
அசைவ உணவை உண்ணக்கூடிய குடும்பத்தில் பிறந்திருப்பார்களானால் ருசியான
எல்லா அசைவ வகை உணவுகளை விரும்பி உண்பார்கள். அதே போல சைவ உணவை உண்ணக்கூடிய குடும்பத்தில் பிறந்திருப்பார்களானால்
நீரில் அல்லது ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாபம், புட்டு போன்ற
வகைகளிலின் மீது நாட்டம் இருக்கும். மேலும் பொதுவாக காரம் சுவை கூட்டபட்ட உணவுகள். குளிர்ச்சியான அமிலவகை பழங்கள் மற்றும் பழச்சாறுகள். அதே போல சர்க்கரை, வெல்லம் அல்லது கருப்பட்டி போன்றவற்றில் ஊற வைக்கபட்ட இனிப்பு வகைகள்
பிடிக்கும். தற்காலத்தில் கேக், ஐஸ் கீரிம் போன்ற வகைகளும் பிடிக்கலாம். உலர்ந்த பருப்புகள் மற்றும் பழவகைகள். புளிப்பு சுவையுடன் கூடிய இனிப்பு மற்றும்
காரவகைகள் பிடிக்கலாம். ஆவி
பறக்கும் சூப்கள் பிடிக்கலாம். சிலருக்கு
பாரம்பரிய நீராகாரங்கள் பிடிக்கும். பொதுவாக சொல்வதானால் தாமஸ மற்றும் ராட்ச குண உணவு வகைகளை கலவையாக
உண்பார்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தி அடைந்த
அடியார்கள் &
மகான்கள் -
அரிவட்டாயர், கணநாதர், கூற்றுவர், சடைய நாயனார், விறன்மிண்ட
நாயனார் போன்றோர்கள் மற்றும் வைணவத்தில் முக்கியஸ்தரான ராமானுஜர் சித்திரை மாதம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்..."
கருத்துரையிடுக