நவகிரகங்களில் இராகு பகவானுக்கான மந்திரங்கள், பாடல்கள், காரகத்தவ சாஸ்திரங்கள்…

நவகிரகங்களில் இராகு பகவானுக்கான மந்திரங்கள், பாடல்கள், காரகத்தவ சாஸ்திரங்கள்…

இந்துமதத்தில் நவகிரகங்களும் வழிபாட்டுக்குரிய தேவர்களாக கலந்துள்ளனர் அதே நேரத்தில் பழங்காலங்களில் சூரியன், சந்திரன் தனிபட்ட முறையில் வணங்கினாலும் பின் வந்த காலங்களில் முதல் தெய்வங்களின் வழியாகவும் அவர்களை வழிபடுவதையே சிறந்தாக கருதபடுகிறது அப்படியாக நவகிரகங்களுக்குரிய காரகத்துவ தெய்வங்கள், சாஸ்திரங்களும், பாராயண மந்திரங்களும், தனிபட்ட காயத்தரி மற்றும் நவகிரகங்கள் வழிபட்டு பேறுபெற்ற தேவார தல பதிகங்கள் என ஒரு தொகுப்பாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் கொடுக்கபட உள்ளது, நம் பாரம்பரிய மருத்துவத்தில் "உணவே மருந்து மருந்தே உணவு"  என்று சொல்வது முதுமொழி அதே போல் இந்துமதத்தில் பக்தி (சரியை), கிரியை (கர்மம்), யோகம், ஞானம் நான்கு மார்க்கங்கள் உள்ளன அதில் யோகம், ஞான மார்க்கங்களில் உள்ளவர்களுக்கு வழிபாடு பிரதான மானதல்ல, அதில் பக்தி, கர்மம் ஆகிய இரு மார்க்கங்களில் உள்ளவர்களுக்கு "வழிபாடே பரிகாரம் பரிகாரமே வழிபாடு" அந்த வழிபாட்டுக்கு உதவுவது தான் முன்னோர்கள் வழிபட்ட மந்திரங்கள், பாடல்கள் இவ்வகைகள் நிறைய இந்துமதத்தில் உள்ளதால் நூல்கள் எடுத்து இயம்பும் முக்கியமானவற்றை மட்டும் விளக்கி உள்ளேன் மேலும் சிலருக்கு வழிபாட்டால் பரிகாரம் ஆகாது தீர்வு தராது அதற்கு காரணங்கள் உண்டு அதை இந்த இடத்தில் விளக்க விரும்பவில்லை.

கோள்
காரகத்துவ சாஸ்திரங்கள்
இராகு
தாந்த்ரீக மாந்த்ரீக சாஸ்திரங்கள்

கோள்
தெய்வம்
இராகு
துர்க்கை, நாகர்கள் & நாகதேவதைகள், பூதகணங்கள்

கோள்
காயத்ரி
இராகு
"ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராஹு: ப்ரசோதயாத்||" 

கோள்
பாராயண மந்திரம்
இராகு
துர்காஷ்டகம், துர்கா அஷ்டோத்ரம், துர்க்க கவசம், நாக மந்திரங்கள், மகேந்திர பூசை, ஆதிசேஷன் காயத்ரி

கோள்
தேவார பதிகங்கள்
இராகு
திருக்காளத்தி, திருப்பாம்புரம், திருநாகேசுவரம், திருநாகைக் காரோணம், திருக்கேதீச்சரம் (இலங்கை), திருக்காழி (சீர்காழி), நாகளேச்சரம்


ஆயுர்வேதம் கூறும் சப்தகோள்களின் த்ரிதோஷங்கள்…

ஆயுர்வேதம் கூறும் சப்தகோள்களின் த்ரிதோஷங்கள்…

ஆயுர்வேதத்தில் நோய்களைக் கண்டறிவதற்கு உதவுவதற்காக த்ரிதோஷங்கள் (மூன்று குறைபாடுகள்) கொண்டு நோய்கள் வகைப்படுத்தப்படுகின்றது இது சித்தமருத்துவத்திலும் உண்டு. அதாவது அந்த த்ரிதோஷங்கள் ஆவது வாதம், பித்தம், கபம் ஆகியவையாக நோய்களை மூன்று பகுதி படுத்திவுள்ளது. ஒரு ஆயுர்வேத ஆய்வு நூல் அதற்க்கான கிரகங்களும் கூறப்பட்டுள்ளது அவை -

கோள்கள்
நோய் வகை
சூரியன்
பித்த நோய்கள்
சந்திரன்
கபம் நோய்கள்
செவ்வாய்
பித்த நோய்கள்
புதன்
பித்தம், கபம், வாதம்
வியாழன்
கபம், வாதம்
சுக்கிரன்
கபம், வாதம்
சனி
வாத நோய்கள்

பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் திருவாதிரை - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் திருவாதிரை - திருமண நட்சத்திர பொருத்தம்…

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம், கிரக பொருத்தம், திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும். நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம், மத்திம பொருத்தம், அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் திருவாதிரை நட்சச்திரம் வரை எண்ண 2 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் திருவாதிரை நட்சத்திரம் மனுஷ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் திருவாதிரை நட்சச்திரம் எண்ண 2 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் திருவாதிரை நட்சச்திரம் எண்ண 2 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இல்லை.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் திருவாதிரை நட்சச்திரம் மிருகப் பிரிவு நாய் ஆகும் இரண்டும் ஒரே தன்மை கொண்ட மிருகமாக வருவதால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆகி ஆண் மிதுன இராசி ஆகும் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆண் மிதுன இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் புதனாக வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

மிதுன இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கன்னி.
இதில் பெண் மிதுன இராசி ஆண் மிதுன இராசி ஆகும் இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின் திருவாதிரை நட்சச்திரம் கழுத்து ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் திருவாதிரை நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி (அ) வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி (அ) சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் திருவாதிரை நட்சத்திரம் வாத நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறாக நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் திருவாதிரை நட்சத்திரமும் பால் இல்லாத வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் திருவாதிரை நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில் 8 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கந்தர் அனுபூதி பகுதி 5 - கந்தரனுபூதி பாடல் 7,8 விளக்கம்...

கந்தரனுபூதி பாடல் 7, 8 விளக்கம்...

கந்தர் அனுபூதியின் பாடல் 7. கெடுவாய் மனனே.., 8. அமரும் பதி, கேள்... ஆகிய இரண்டு பாடல்களின் விளக்கம். கந்தரனுபூதி செய்யுள் 7 மற்றும் 8 ன் பொருள்.

பாடல் 7

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

பாடல் 8

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே.


https://www.youtube.com/watch?v=JxDIaZkuD-g
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Ambedkar) ஜாதகம் கணிப்பு - முதல் சட்ட அமைச்சர், அரசியலமைப்பு வரைவு குழு தலைவர்…

சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கை ஜாதக கணிப்பு ஜோதிட காணோளி (Video)



இந்த காணோளியில் வரும் எனது கவிதையின் எழுத்து வடிவம்

எது உலகிலேயே உயர்ந்த மதமாக இருக்க முடியும்
எங்கே மனிதநேயமும் மனித மாண்புகளும் கடைபிடிக்க படுகிறதோ அந்த மதம்
எது உலகிலேயே உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்
எங்கே மனிதநேயமும் மனித மாண்புகளும் கடைபிடிக்க படுகிறதோ அந்த சமூகம்
எது உலகிலேயே உயர்ந்த இனமாக இருக்க முடியும்
எங்கே மனிதநேயமும் மனித மாண்புகளும் கடைபிடிக்க படுகிறதோ அந்த இனம்  
- சிவதத்துவ சிவம்

இந்த கவிதையின் ஆங்கில எழுத்து வடிவம் -

It greatest religion in the world whose is practiced to the welfare of humanity and Nobility
It greatest community in the world whose is practiced to the welfare of humanity and Nobility
It greatest ethnicity in the world whose is practiced to the welfare of humanity and Nobility  - Sivathathuva Sivam

இந்த காணோளியில் வரும் பழந்தமிழ் பாடலின் எழுத்து வடிவம்

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே. - நறுந்தொகை (35)

பொருளுரை - ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைய கூடிய நிலை அதாவது பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும் கூட அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் கல்வி கற்பதை ஒருபோதும் விட்டுவிட கூடாது ஏனென்றால் கற்பதே ஒருவனை மேம்படுத்தும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger