கைரேகையும் ஜோதிடமும் பகுதி 2 - சந்திர மேடு…

கைரேகையும் ஜோதிடமும் பகுதி 2 - சந்திர மேடு…

மனித வாழ்வை காலந்தொட்டு கணிக்க உதவும் வேத ஜோதிடத்திற்கு பிறகு அடியேனால் மிக மதிக்கபடும் கணிதங்கள் கைரேகை ஜோதிடம் மற்றும் நாடிஜோதிடம் ஆகும். இதில் கைரேகை ஜோதிடத்தில் மற்றும் நாடிஜோதிடத்தில் எனக்கு பெரிய படிப்பும் மற்றும் அனுபவமும் இல்லையேன்றாலும் வேத ஜோதிடத்தை ஒட்டிய ஒப்பீடு ஆன சில கருத்துகளை படித்துள்ளேன்  அதில் வேத ஜோதிடத்தில் எப்படி நவகிரகங்கள் இருக்கின்றனவோ அது போல கைரேகையிலும் இராகு கேது தவிர சப்தகிரகங்களின் தொடர்பு இருக்கிறது அதை கைரேகையில் கிரக ஆதிக்க மேடுகள் என்று அழைக்கப்படுகிறது அந்த சப்தகிரக மேடுகளுடன் நமது  வேத ஜோதிட கிரக மற்றும் ஸ்தான காரகத்துவங்களையும் சேர்த்து ஒப்பிட்டு இந்த பதிவை படித்த மற்றும் அனுபவ அறிவையும் இணைத்து எழுதுகிறேன். 


 
சந்திர மேடு - 
கைரேகையில் இயல்பான புத்திரேகை முடியும் இடத்திற்கு கீழ் உள்ளங்கையின் இடதுபக்க மணிகட்டுக்கு மேலே இடம் கொண்டிருக்கிறது சந்திர மேடு ஆகும். வியபாரம், உணவுவசதி, நீர்வளம், சுபாவம், பிரயாணம், நட்புவட்டம், மன ஆற்றல், மன தைரியம், தாயாருடன் உறவுநிலை, கற்பனைத் திறன், எதிலும் உள்ள தன்மை ஈடுபடுத்தும் திறன், சூதாட்டம், உணர்ச்சிவசம், சமூகபணிகள் ஆகிய  சந்திரனின் காரக பலம் இதை ஜாதக மற்றும் கைரேகையோடு ஒப்பிட்டு அமைத்து பார்க்கும் போது ஜாதகத்திலும் மற்றும் கைரேகையிலும் இந்த சந்திர இருப்பு நன்றாக அமைந்தால் மேலே சொன்ன பலன்கள் சிறப்பான முறையில் அமையும். அதாவது கைரேகையில் இந்த சந்திர மேடு பருத்து பரந்து நல்ல மேல் நோக்கிய சுருள் உடன் மேலும் நல்ல குறிகளுடனும் (நட்சத்திரம், சதுரம்...) அமைந்தால் நல்லது. அதே போல ஜாதகத்தில் சந்திரனும் மற்றும் ஸ்தானங்களில் முக்கியமாக 4 ஆம் ஸ்தானமும் மற்றும் அதற்கு அடுத்து 2, 6, 8, 9, 12 ஆம் ஸ்தானமும் சந்திரனின் பலத்தை பிரதிபளிக்கும் ஸ்தானங்கள் ஆகும். இவ்வாறு உள்ள அமைப்புகள் ஜாதகத்தில் நல்லவிதமாக அமைய சந்திரனின் காரக பலம் வாழ்வில் பலப்படும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


நவாம்ச லக்னம் ரிஷபமானால்...

நவாம்ச லக்னம் ரிஷபமானால் - ரிஷபம் நவாம்ச லக்னமாக வரும்போது...

அசுவினி 2 பாதம்
ரோஹிணி 2 பாதம்
புனர்பூசம் 2 பாதம்
மகம் 2 பாதம்
ஹஸ்தம் 2 பாதம்
விசாகம் 2 பாதம்
மூலம் 2 பாதம்
திருவோணம் 2 பாதம்
பூரட்டாதி 2 பாதம்

ஒருவரின் லக்னமானது கீழே உள்ள நட்சத்திர பாதத்தில் இருக்கும் படி ஒருவர் பிறப்பை எடுத்திருந்தால் அவருக்கு நவாம்சத்தில் ரிஷபம் லக்னமாக வரும் அப்படி ரிஷபம் நவாம்ச லக்னமாக வரும்போது - பரந்த மனப்பான்மை அல்லது பரந்த அறிவு கொண்டவர்கள். இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற முனைப்பு மற்றும் பெரிய வயிறு, நீண்ட முகம். உடலாலும் விருப்பத்தாலும் வலுவான நபர்கள். சற்று சிற்றின்ப நடத்தை அதிகமாக உள்ளவர்கள். கவரும் கண்கள் இருக்கும். அதிக புத்திர பாக்கியம் குறிப்பாக மகள்கள் உடையவர்கள். தார்மீக தகுதி அல்லது தார்மீக சுயமரியாதை எதிர்பார்க்க கூடியவர். அதே சமயம் கீழ்படிந்து போகும் பக்குவமும் கொண்டவர்களாக திகழ்வார்கள். திருமண விஷயங்களில் கூடுதலான நலன்களை கொடுக்கும். இது நவகிரகங்களில் சுக்கிரன் (வெள்ளி), சந்திரன், புதன், சனி போன்ற கிரகங்களுக்கு ஏற்ற நவாம்ச இடம் ஆகும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 14...


ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 14...

ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(14)
யார் வலியை உணர்வார், யார் நோயை உணர்வார்
யார்! நான் என்றால், ஏன் தூக்கத்தில் உணரவில்லை
யாரும் தூக்கத்திலும், மயக்கத்திலும் எங்கே சேர்கிறார்
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who feel the ache? And Who feel the disease?
Who! If I am, Why doesn't realize by sleep?
Anyone where to join when they sleep and swoon
Blend within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

பாடலின் விளக்கம் -
யார் உடலின் வலியை உணர்பவராக இருக்கிறார். யார் உடலின் நோயை உணர்பவராக இருக்கிறார். அவ்வாறு அவைகளை உணர்வது நான் என்றால் ஏன் தூக்கத்தின் போது அந்த வலி மற்றும் நோயை அந்த நானால் உணர முடிவதில்லை. எவரும் தூக்கத்தின் போதும் மற்றும் மூர்ச்சை அடைதலின் போதும் எங்கே செல்கிறார் அல்லது சேர்கிறார். உடலியக்கமும் மற்றும் உயிரியக்கமும் உள்ள போதும் ஒருவரால் அவரின் அறிவு என்று கருதி கொண்டிருக்கும் அவரின் அறிவியக்கத்தை நிர்வகிக்க முடியவில்லை எனில் அப்படி உள்ள அறிவியக்கத்தின் மூலத்தை ஒவ்வொருவரும் அவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து பார்த்து உணர வேண்டும் அது சிவமே அது சிவமே என்று.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

மிதுனம் & மிதுனம், மிதுனம் vs மிதுனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

மிதுனம் & மிதுனம், மிதுனம் vs மிதுனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ மிதுனம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

மிதுனம் & மிதுனம், மிதுனம் vs மிதுனம் -



உணவின்றி வாழ்வில்லை...

உணவின்றி வாழ்வில்லை...

தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருப்பதாக வரும் செய்திகளை கண்டு மனதிற்க்கு பெரும் வருத்தம் மேலிடுகிறது. நம் எல்லாரின் முன்னோர்களும் வேளாண்மை தொழிலில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான் இந்த நிலை ஏன் வந்தது என்று சிந்தித்து பார்த்தால்

சுருக்கமாக சொல்லுவதானால் தமிழ்நாட்டின் இயற்க்கை சூழலை நம் முன்னோர்கள் நன்கு புரிந்து வைத்து மழைக்காலத்தில் வரும் நீரை குளம், ஏரி, தாடகம் என்று ஏற்படுத்தி அதற்கு முறையாக கால்வாய்கள் அமைத்தும் வந்துள்ளனர் இது அரசாட்சி காலங்களில் அரசர்கள் முறையான உத்தரவுகள் போட்டு அதை பாராமரித்தும் வந்துள்ளனர்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இப்படி போற்றிய நீர்வளத்தை மக்களாட்சி என்று சொல்லிக்கொள்ளும் நாம் நமது பண்பாட்டை மறந்து மற்றும் இயற்கையோடு இணைந்த சமய நெறிகளை மறந்து வெறும் 75 ஆண்டுகளுக்குள் இந்த பூமியை நீரிலில்லாத மணல் இல்லாத ஆறுகளாகவும் மற்றும் குப்பைகள் சூழ்ந்த குளங்களாகவும் மாற்றி விட்டுள்ளோம், மலைகளை கற்களுக்காக கரைத்தோம் அதனால் நீரை ஈர்த்து சேர்க்கும் மலைகளை இழந்து வருகிறோம். உதாரணமாக நீலகிரியை நகரமயமாக்கி விட்டதால் அதன் அடிவாரத்தில் கூட நீரின்றி காய்கிறோம்.

நமது இயற்கையை மற்றும் நீர்வளத்தை மீட்க வேண்டும் இல்லையேல் பெரும் பஞ்ச காலம் அல்லது பெரும் வேலைவாய்ப்பில்லாத காலத்தை வரும் 25 ஆண்டுகளுக்குள் எதிர்கொள்ள வேண்டி வரலாம். அதற்கு விவசாயிகளின் மரணங்கள் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது என்பதை ஞாபகம் வைத்து அனைவரும் ஏதோ ஒரு வழிகளில் ஆள்வோர்களை தமிழ்நாட்டின் இயற்கையை மற்றும் நீர்வளத்தை காக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்க வைக்க முயல வேண்டும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 11 - புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவாரூர்…


தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருப்பதாக வரும் செய்திகளை கண்டு மனதிற்க்கு பெரும் வருத்தம் மேலிடுகிறது. நம் எல்லாரின் முன்னோர்களும் வேளாண்மை தொழிலில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான் இந்த நிலை ஏன் வந்தது என்று சிந்தித்து பார்த்தால்

சுருக்கமாக சொல்லுவதானால் தமிழ்நாட்டின் இயற்க்கை சூழலை நம் முன்னோர்கள் நன்கு புரிந்து வைத்து மழைக்காலத்தில் வரும் நீரை குளம், ஏரி, தாடகம் என்று ஏற்படுத்தி அதற்கு முறையாக கால்வாய்கள் அமைத்தும் வந்துள்ளனர் இது அரசாட்சி காலங்களில் அரசர்கள் முறையான உத்தரவுகள் போட்டு அதை பாராமரித்தும் வந்துள்ளனர்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இப்படி போற்றிய நீர்வளத்தை மக்களாட்சி என்று சொல்லிக்கொள்ளும் நாம் நமது பண்பாட்டை மறந்து மற்றும் இயற்கையோடு இணைந்த சமய நெறிகளை மறந்து வெறும் 75 ஆண்டுகளுக்குள் இந்த பூமியை நீரிலில்லாத மணல் இல்லாத ஆறுகளாகவும் மற்றும் குப்பைகள் சூழ்ந்த குளங்களாகவும் மாற்றி விட்டுள்ளோம்.

நமது இயற்கையை மற்றும் நீர்வளத்தை மீட்க வேண்டும் இல்லையேல் பெரும் பஞ்ச காலம் அல்லது பெரும் வேலைவாய்ப்பில்லாத காலத்தை வரும் 25 ஆண்டுகளுக்குள் எதிர்கொள்ள வேண்டி வரலாம். அதற்கு விவசாயிகளின் மரணங்கள் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது என்பதை ஞாபகம் வைத்து அனைவரும் ஏதோ ஒரு வழிகளில் ஆள்வோர்களை தமிழ்நாட்டின் இயற்கையை மற்றும் நீர்வளத்தை காக்க தொடர் நடவடிக்கை எடுக்க வைக்க முயல வேண்டும்.
தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 11 - புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவாரூர்…

ஒரு விஷயத்தை சற்று ஆழமாக பார்ப்பது எமது வழக்கம் அதில் ஒன்று தான் இது தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் எண்ணிக்கையை 12 இராசிகளின் எண்ணிக்கையாக கருதி வகுத்து கூட்டி வரும் விடைகள் தான் இவைகள். இது ஒரு ஒரளவு ஒத்துப்போகும் மதிப்பீடு தான் துல்லிய மதிப்பீடு அல்ல இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆர்வமான எண்ணிக்கைகள். இதில் வரும் தமிழ்நாடு மொத்த மக்கள்தொகைகள் இந்தியாவின் 2011 சென்செஸ் கணக்கெடுப்பின் படி உள்ள தொகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்
புதுக்கோட்டை
மக்கள்தொகை
16,18,725
ஆண்
8,15,388
பெண்
8,15,388
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,34,894
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
67,949
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
67,949
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
14,988
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
59,953
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
7,550
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
7,550
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
30,200
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
30,200

மாவட்டம்
திருவள்ளூர்
மக்கள்தொகை
37,25,697
ஆண்
18,78,559
பெண்
18,47,138
ஒரு இராசியின் மக்கள்தொகை
3,10,475
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
1,56,547
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,53,928
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
34,497
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
1,37,989
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
17,394
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
17,103
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
69,576
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
68,413

மாவட்டம்
கடலூர்
மக்கள்தொகை
26,00,880
ஆண்
13,11,151
பெண்
12,89,729
ஒரு இராசியின் மக்கள்தொகை
2,16,740
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
1,09,263
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,07,477
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
24,082
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
96,329
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
12,140
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
11,942
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
48,561
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
47,768

மாவட்டம்
தஞ்சாவூர்
மக்கள்தொகை
24,02,781
ஆண்
11,83,112
பெண்
12,19,669
ஒரு இராசியின் மக்கள்தொகை
2,00,232
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
98,593
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,01,639
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
22,248
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
88,992
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
10,955
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
11,293
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
43,819
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
45,173


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - சுக்கிரன் (வெள்ளி)...

நவகிரக காரகத்துவ ஸ்தலங்கள் - சுக்கிரன் (வெள்ளி)...

நவகிரகங்களும் தங்கள் தங்கள் ஆதிக்கம் அதிகம் காட்டும் இடங்களாக பிரித்து சொல்லும் ஒரு சமஸ்கிருத நூலின் மொழி பெயர்ப்பாக வந்த ஒரு பழம் தமிழ் நூலின் சில குறிப்பிட்ட இந்த பகுதி மட்டும் கிடைத்தது அதை தங்களின் முன் இந்த வலைபதிவின் மூலம் பதிவிக்கிறேன்.

நடனக்கூடம் கலை சங்கங்கள் விடுதி நல்சோலை மாடங்கள்
கடம்சூழ் அந்தப்புரம் விலைமாதர் வாழிடம் காசு அன்னச்சாலை  
ஓடம்சூழ் பொழுதுச் சாலை திருமண மண்டபம் படுக்கை
நாடக அரங்கு கலைக்கோயில் அசுரகுரு காரகதலங்களாம்.
- கிரகபதி சந்தம்

பொருள் - ஆடல் (நாட்டியம், Dancing) செய்யும் அரங்குகள். இசை, பாடல், கவிதை போன்ற கலைகளை வளர்க்கும் சங்கங்கள். விடுதிகள். செயற்கை மரங்கள் உடன் கூடிய கட்டிடங்கள். தோட்டங்கள் சூழ்ந்த அந்தப்புரம், விலைமாதர் சேர்ந்து வசிக்கும் இடம். உணவு அங்காடிகள். தெப்பம் படகுகள் சூழ்ந்த பொழுதுபோக்கு சாலைகள். திருமண மண்டபங்கள். படுக்கை அறைகள். நாடக மற்றும் திரையரங்குகள். சிற்பம் மற்றும் ஓவியங்களால் நிறைந்த கோயில்கள் அசுரகுரு (வெள்ளி) ஆதிக்கம் அதிகம் காட்டும் பூமியின் தலங்கள் ஆகும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

Powered by Blogger