ஸ்ரீநாத யோகம் விதியும் பலனும் Srinatha yogam in Tamil - ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி

ஸ்ரீநாத யோகம் விதியும் பலனும் Srinatha yogam in Tamil - ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி...

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

ஸ்ரீநாத யோகம் யோகம் -

ஜோதிட சாஸ்திரத்தில் ராசிச் சக்கரத்தில் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் அதிபதி கிரகம், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒருவருடைய ஜாதகத்தில் ராசிச் சக்கரத்தில் உச்ச வீடு, ஆட்சி வீடு, நட்பு வீடு அத்துடன் கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளிலும் இருந்தால், அதனால் ஏற்படும் யோகம் ஸ்ரீநாத யோகம் ஆகும்.

இதன் பலன்கள் -

இந்த யோகம் தரும் பலன்களாவன எப்போதும் புத்துணர்ச்சியான தோற்றம், தெளிவாக மற்றும் உற்சாகமாக செயல்படும் தன்மை, இந்த யோகம் அமைந்தவர்களுக்கு சத்புத்திரம் அமையும் என்று நூல்கள் சொல்கின்றன சத்புத்திரம் என்றால் சிறந்த மற்றும் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள், லட்சுமி கடாட்சம் கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது எனவே செல்வம் மிக்கவர்களாக வாழ வாய்ப்பு உண்டாகும், மகாவிஷ்ணுவை நம்பி வழிபடக்கூடிய பக்தராக இருப்பார்கள், வாழ்க்கையை இதயப்பூர்வமாக அணுக கூடியவர்கள் அதேசமயம் சாமர்த்தியசாலிகள், மென்மையாக பேசக்கூடியவர்கள் இவர்கள் பேசும் விதம் இனிமையானதாகவும் நல்லதாகவும் இருக்கும், அழகான மற்றும் வசதியான வாழ்க்கைத்துணை அமையலாம். தன்னைச் சுற்றி உள்ளவர்களை மற்றும் தன்னை நம்பி உள்ளவர்களை காப்பாற்றும் கடமை உணர்வு கொண்டவர்கள்.


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஸ்ரீநாத யோகம் விதியும் பலனும் Srinatha yogam in Tamil - ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி"

கருத்துரையிடுக

Powered by Blogger