விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
நட்சத்திரம் - விசாகம்
விசாகம் நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் -
குரு
விசாகம் நட்சத்திரத்தின் அதிதேவதை
- இந்திராக்னி, ஸ்கந்தன்,
விசாகம் நட்சத்திரத்தின் யோனி - பெண் புலி
விசாகம் நட்சத்திரத்தின் கணம் - ராக்ஷஸ கணம்
விசாகம் நட்சத்திரத்தின் பூதம் - நெருப்பு
விசாகம் நட்சத்திரத்தின் இராசி இருப்பு - துலாம் ராசியின் விண்மீன் மண்டலத்தில் தோரணம் போல் மெல்லிய வளைவுடன்
அமைந்துள்ள நான்கு நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம்
தொடங்கி விருச்சிக ராசி மண்டலத்துள் கால் பங்கு வரை நீண்டு இருக்கிறது.
விசாகம் நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - துலாம் ராசியின் பாகைக்குள் 200:00:00
முதல் விருச்சிக ராசிக்குள் பாகை 213:20:00 கலை வரை இந்த
நட்சத்திரத்தின் இருப்பாக உள்ளது.
விசாகம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - சுக்கிரன், செவ்வாய்
சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில்
பிறந்தவர்களுக்கு விசாகம்
நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம ராசி விசாகம் 1,2,3 ஆம் பாதத்தில்
பிறந்திருந்தால் துலாம் இராசியாகும்,
விசாகம் 4 ஆம் பாதத்தில் பிறந்திருந்தால் விருச்சிகம் ஜென்ம
ராசியாகும். சந்திரனே மனசுக்கு
காரன் மற்றும் உடல்காரகன் என்று அடிப்படையாக ஜோதிட
சாஸ்திரத்தால் அழைக்கப்பட கூடிய காரணத்தால் ஒவ்வொரு மனிதனின்
மன குண அமைப்பை தெரிந்து கொள்ள
சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜோதிடத்தில்
பெரிதும் பயன்படுத்தபடுகிறது.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் பதினாறாவது நட்சத்திரமாக இருக்கும் விசாகம் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் சொந்த உறவுகள்
மற்றும் அரசர்களால் விரும்பபடுபவர்களாக இருப்பார்கள், ஆளுமையாகவும் பேசுவார்
மற்றும் அடக்கமாகவும் பேசுவார், முன்கோபம் உடையவர் அதே சமயம் நற்குணங்களும்
உள்ளவர், பொது மக்களின் மரியாதையை பெறுபவர், கடவுளை வணங்குவதிலும் மற்றும்
அறக்கொடைகள் கொடுப்பதிலும் விருப்பம் இருக்கலாம் என்று இவ்வாறு ஜாதக அலங்காரம்
என்ற நூல் எடுத்துரைக்கிறது. மேலும் பொதுவாக...
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்..."
கருத்துரையிடுக