துலாம் இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

துலாம் இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டு வருகிறது அதில் இந்த முறை -

இந்த துலாம் இராசி தலையில் இருந்து உதயமாகும் ராசி (முகப்பிலிருந்து உயரும் ராசி அதாவது முன்புறத்திலிருந்து அந்த ராசி உதயமாகும் rising in front, rising in upper part, rising at top)
இது பகலில் வலிமையாகி கருப்பு வண்ணமும் ராஜோ குணமும் கொண்ட இராசி
இது மேற்கு திசையை சார்ந்த இராசி சமவெளி நிலத்தை குறிக்கும் இராசி
இது தராசு சின்னம் மற்றும் வணிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இராசி
இது அடித்தள தொழிலாளர் இராசி மற்றும் நடுத்தர உருவ உடல் இராசி
து இரண்டு கால் இராசி
இது சுக்கிரனை ஆட்சியாளராக கொண்ட இராசி
- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "துலாம் இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…"

கருத்துரையிடுக

Powered by Blogger