யாருடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதையிருக்காது, யாருடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதையிருக்கும் - ஜோதிட துணுக்குகள் பகுதி


ஜோதிட துணுக்குகள் பகுதி - யாருடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதையிருக்காது, யாருடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதையிருக்கும்… 

அவ்வையாரின் நல்வழி

கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

ஒருவன் கல்லாதவனே அதாவது படிக்காதவனேயாயினும் அவனது கையிலே செல்வங்கள் பொருட்கள் மாத்திரம் இருக்குமானால் அவனை எல்லோரும் சென்று எதிர்கொண்டு மதிப்பு மரியாதை செய்வார்கள், அதே சமயம் செல்வங்கள் இல்லாதவனை இல்லாளும் வேண்டாள் அதாவது கட்டிய மனைவியே ஆயினும் அவனை விரும்ப மாட்டாள்; அது போலேவே அவனை பெற்று எடுத்த அன்னையும் விரும்ப மாட்டாள்; அவனது பேச்சுக்கும் மதிப்பு மரியாதையிருக்காது. அதாவது இதை ஆங்கிலத்தில் சொல்வதானால்

Even if a person does not educate, but he possessed wealth everyone will go toward honor and respect to him, while one does not have wealth that person's wife and mother do not like him, and also his speech will not be value and respect. 

இதில் இருந்து என்ன தெரிகிறது ஒருவனுக்கு செல்வங்கள் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அவனை தேடி வந்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறரும் மதிப்பு மரியாதை செய்வார்கள் அவனுடைய பேச்சுக்கும் உடனே செவி சாய்த்து கேட்பார்கள் அவன் சொன்னபடி நடக்க முயற்சிப்பார்கள் இல்லையா சரி சார் நீங்கள் சொல்வது நன்றாகவே தெரிகிறது அதை ஜோதிடத்தோடு அமைப்போடு ஒப்பிட்டு சொல்லுங்க சார் என்கிறீர்களா சரி  ஒருவனுக்கு செல்வங்கள் இருக்க வேண்டும் அதாவது தன ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும், அப்போது தான் அவனை தேடி வந்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறரும் மதிப்பு மரியாதை செய்வார்கள் அதாவது  குடும்ப ஸ்தானம் நன்றாக  இருக்கும். மேலும் அப்படி இருப்பவனுக்கு அவனுடைய பேச்சுக்கும் உடனே செவி சாய்த்து கேட்பார்கள் அவன் சொன்னபடி நடக்க முயற்சிப்பார்கள் அதாவது அவனது வாக்கு ஸ்தானம் நன்றாகவே  இருக்கும் இல்லையா சரி இந்த தன ஸ்தானம், குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானம் மூன்றிற்கும் ஆதாரமான ஸ்தானம் எது  இரண்டாம் வீடே ஆக  இரண்டாம் வீடு நன்றாக இருப்பது எவ்வளவு முக்கியம் பார்த்தீர்களா.

சரி சார் இரண்டாம் வீடு நன்றாக இருக்க வேண்டுமானால் எப்படி இருக்க  வேண்டும் மீதி காணொளியில் (விடியோவில்)…


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "யாருடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதையிருக்காது, யாருடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதையிருக்கும் - ஜோதிட துணுக்குகள் பகுதி"

கருத்துரையிடுக

Powered by Blogger