நரேந்திர மோதி (Narendra Modi) ஜாதகம் கணிப்பு - ஜாதகத்தின் சிறப்பு அம்சங்களையும் மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக..
நரேந்திர மோதி (Narendra Modi) ஜாதகம் கணிப்பு - ஜாதகத்தின் சிறப்பு
அம்சங்களையும் மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக..
வேற்றுமையும் பெரும் மக்கள் தொகையும் கொண்ட இந்தியா போன்ற நாட்டில்
நடுத்தர வர்க்கத்தில் பிறந்து அரசியலில் போட்டியிட்டு இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளுக்கு வருவது என்பது மிக சாதனையான
விஷயம் தான் அப்படி பிரதமர் என்ற மிக உயர்ந்த பதவியை கடந்த ஐந்தாண்டுகளாக தக்க
வைத்து ஆட்சி புரிந்த நரேந்திர மோதி
ஜாதகத்தின் சிறப்பு அம்சங்களையும்
மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக இந்திய மக்களுக்காக அவர் செய்த பணிகளுக்கு தார்மீக
அடிப்படையில் நன்றி அறிவிக்கும் விதமாகவும் மேலும் அவருக்கான அடுத்த வாய்ப்பு
எப்படி உள்ளது என்பது பற்றி சிறிய அளவில் இந்த பதிவின் வழியாக பார்ப்போம்
முதலில் நரேந்திர மோதி
ஆட்சி வந்தவுடன் அவரது ஆட்சி முறை எப்படி இருக்குமென்று ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015 அன்று ஒரு கட்டுரை பதிவை எமது வலைதளத்தில் எழுதி
இருந்தேன் அதை ஒரு முறை மறுபடியும் வாசித்து காட்டிவிட்டு மேலும் பதிவுக்கு
செல்லுகிறேன் அந்த பதிவில் இவ்வாறு கூறியிருந்தேன் அதாவது இவரது ஆட்சி காலத்தில் முதல் பாதியில் எதிர்மறையான பணவீக்கங்கள், பண
முடக்கங்கள் இருக்கும் பின்
பாதிக்கு மேலான ஆட்சி காலங்களில் தான் பணபுழக்கம் அதிகரிக்கும், மேலும்
இவரின் அயல்நாட்டு
பயணங்களினால் அயல்நாட்டு உறவுகள் பலப்படும் ஆனால் வெளிநாட்டின் முதலீடுகள்
எதிர்பார்த்த அளவுகளில் வராது. மேலும் ஆரம்பிக்கபடும் திட்டங்களில்
ஆரம்பித்தில் எதிர்பாராத விளைவுகள் ஏற்படும் பின்பு அதை சரிசெய்த பின்பே
திட்டங்களின் பலன்கள் ஒரளவு நல்லவிதமாக வரும், ஆடம்பரமாக
ஆரம்பிக்கும் திட்டங்கள் போதிய வளர்ச்சி காணாது, நிர்வாகங்களில்
சிக்கனம் இருக்கும், ஒரு சில மந்திரிகளின் துறைகள் சரியான
செயல்பாடுகளின்றி இருக்கும் பிற்காலங்களில் அதற்கு ஏதேனும் செய்ய வேண்டி வரும். 2015, 2016 மற்றும் 2017 பாதி
வருடம் வரை தொழிற் துறை வளர்ச்சி தளர்வாகவே இருக்கும், வெளி தேசங்களின் இயற்கை, பொருளாதார
சூழல்களின் முடக்கம் காரணமாக நம் நாட்டின் ஏற்றுமதி குறைந்திருக்கும் அது பின் 2017 பாதிக்கு மேலும் 2018, 2019 காலங்களில்
எதிர்பார்த்த தொழிற் துறை வளர்ச்சிகள் ஏற்படும் குறிப்பாக பொறியியல் துறை, உலோகத்துறை, சுரங்கங்கள், மின்சாரத் துறை, நில கட்டிட
துறைகள் வளரலாம். 2017 பாதிக்குள் மேல் வரும் மாநில அரசியல் தேர்தல் போட்டிகளில் அந்த அளவு சாதகமான வெற்றிகள் வராது இவ்வாறாக அந்த கட்டுரை பதிவில்
கூறியிருந்தேன்
சரி கடந்த ஐந்தாண்டுகளாக பிரதமர் பதவியை தக்க வைத்து
ஆட்சி புரிந்த நரேந்திர
மோதி ஜாதகத்தின் சிறப்பு அம்சங்களை சிலவற்றை முதலில் இப்போது
பார்க்கலாம் ஒருவரின்
தலைவிதியை தீர்மானிக்கும் ஸ்தானம் ஆன லக்னத்தில் இந்த பிறவியில் அனுபவிக்கும்
பாக்கியங்களுக்கு
ஸ்தானமான 9ஆம் ஸ்தான காரகனான சந்திரன் லக்னத்தில்
நீசம் அடைந்து அந்த லக்னாதிபதி ஆட்சி அடைவதால் சந்திரனுக்கு நீச பங்க ராஜ யோகம்
பெற்று சிறக்கிறது இவரது
ஜாதகத்தில் மேலும்
லக்னத்தில் லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி பெறுவதுடன்
அதில்...
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "நரேந்திர மோதி (Narendra Modi) ஜாதகம் கணிப்பு - ஜாதகத்தின் சிறப்பு அம்சங்களையும் மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக.."
கருத்துரையிடுக